இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா? ஃபிளைட் லேட் ஆனதுக்கு இவரு இப்படி பண்ணுவாருன்னு யாருமே நினைச்சு பார்க்கல!

விமானம் தாமதம் ஆனதற்காக அதன் உரிமையாளர் ஒவ்வொரு பயணிகளிடமும் நேரில் மன்னிப்பு கேட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதற்காக இவர் ஜப்பான் வரை விமானத்தில் பயணம் செய்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தைவான் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விமான நிறுவனம் ஸ்டார் லக்ஸ். இந்நிறுவனத்தின் சேர்மனாக சாங்க் கூ-வெய் என்பவர் இருக்கிறார். கடந்த மே 7ம் தேதி இந்நிறுவனத்தில் 2 விமானங்கள் ஜப்பானிலிருந்து கிளம்பத் தாமதம் ஆனதால் இதில் பயணிக்க வேண்டிய 308 பயணிகள் முழு இரவையும் விமான நிலையத்திலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.

Starlux Founder Apologies

இந்நிறுவனத்தின் 2 விமானங்களில் ஒன்று வானிலை காரணமாகத் தாமதமாகியுள்ளதாகவும், மற்றொரு விமானம் விமானத்தின் பாரமரிப்பு பணியில் ஏற்பட்ட தொய்வு மற்றும் பிரச்சனை காரணமாகத் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதில் ஒரு விமானம் மதியம் 3.45 மணிக்கு கிளம்ப வேண்டியதாக இருந்தது ஆனால் காரணமே இல்லாமல் இதன் புறப்பாடு மாலை 4.20 மணிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் அப்பொழுதும் விமானம் கிளம்பாமல் அந்தவிமானத்தில் உள்ள பயணிகளை மற்றொரு விமானத்திற்கு மாற்றி இரு விமானத்தையும் ஒன்றாகப் புறப்பாடு செய்ய வைத்தனர். இந்த விமானம் முதலில் வானிலை காரணமாகத் தாமதமாவதாகக் குறிப்பிட்டது. ஆனால் விமானத்தை மாற்றிய தகவல் வந்தது. இது பொய்யாக இருக்கலாம். வேறு பிரச்சனையை மறைக்கவே இவர்கள் இதைச் செய்திருப்பார்கள் எனப் பேசப்பட்டது.

Starlux Founder Apologies

அதன் பின்னர் மற்றொரு விமானம் இரவு 7 மணிக்கு டோக்கியோ நாரிட்டா விமான நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டியது. அப்பொழுதே பயணிகள் விமானத்தில் போர்டு செய்யப்பட்டனர். ஆனால் விமானம் கிளம்பவில்லை. இதற்கு விமானத்தில் போதுமான பராமரிப்பு பணி செய்யப்படவில்லை எனவும் அதற்கான பணியாட்கள் வருவதில் பிரச்சனை ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதற்காக நள்ளிரவு வரை விமானத்தில் பயணிகளுடன் விமான நிலையத்திலேயே நின்றது.

டொயோக்கியோ நாரிட்டா விமான நிலையத்தின் விதிமுறையின் படி இரவு 11 மணிக்கு மேல் காலை 6 மணிக்கு முன் விமானங்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கிற்கு தடை உள்ளது. விமானம் தயாராக 11 மணியைத் தாண்டியதால் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் செய்ய முடியாத நிலை இருந்தது. நள்ளிரவு 1 மணி வரை விமானத்திலேயே பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.

Starlux Founder Apologies

இதன் பின்னர் விமானத்திலிருந்த பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு அவர்களுக்கு சிலீப்பிங் பேக்குகள் வழங்கப்பட்டது. அவர்கள் விமான நிலைய டெர்மினலிலேயே படுத்துத் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் கோபமாக இருந்தனர். இதை அறிந்த அந்த விமான நிறுவனத்தின் சேர்மன் உடனடியாக மறுநாள் முதல் விமானத்தில் டோக்கியோவில் பயணிகள் காத்திருக்கும் விமான நிலையத்திற்குச் சென்றார்.

அங்குப் பயணிகள் முன்னிலையில் நடந்த தவறுக்கு விளக்கம் அளித்த இதனால் அசெளகரியமடைந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டார். மறுநாள் காலை 8 மணிக்குப் பயணிகள் விமானத்தில் ஏறி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பயணிகள் விமான நிலையத்தில் தங்கிய போது அவர்களுக்கான உணவு விமான நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

விமானம் தாமதமானதற்காக ஒரு நிறுவனத்தின் சேர்மன் நேரில் வந்து ஒவ்வொரு பயணியிடமும் மன்னிப்பு கேட்டது, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பயணிகள் மத்தியில் ஸ்டார்லக்ஸ் நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. பலர் இது குறித்து சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்கள் தாமதமாவது அவ்வப்போது நடக்கக்கூடிய ஒரு சம்பவம் தான். இப்படியான சம்பவம் நடக்கும் போது பெரும்பாலும் விமான நிறுவனத்தின் ஊழியர்களே பார்க்க முடியாது. பயணிகள் கடும் கொந்தளிப்பில் இருப்பார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் இந்நிறுவனத்தின் தலைவரே ஒவ்வொரு பயணிகளையும் சந்தித்தது நிச்சியம் ஆச்சரியமான விஷயம் தான்.

Passenger Image Courtesy: Taipei Times

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 16:00 [IST]
English summary
Starlux airline founder personally apologies to delayed flight passengers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X