எலக்ட்ரிக் கார் வாங்கியவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம்... எல்லாத்தையும் வீட்டிலேயே முடிச்சிடலாம்!!

ஸ்டாடிக் (Statiq), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்குகளுள் ஒன்று. அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் முதன்மையான பணி ஆகும். பல்வேறு விதமான எலக்ட்ரிக் வாகனங்களுக்காக, பல்வேறு விதமான சார்ஜர்களை நாடு முழுவதும் ஸ்டாடிக் வழங்குகிறது. இந்தியாவில் 65 நகரங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சார்ஜர்களை வழங்கிவரும் ஸ்டாடிக் நிறுவனம் புதியதாக நெக்டார் (Nectar) என்கிற பெயரில் 7.4 கிலோவாட்ஸ் வீட்டு உபயோக சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சார்ஜரை பற்றிய விரிவான விபரங்களை தான் இனி பார்க்க போகிறோம்.

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று, அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடிவதில்லை என்பதாகும். இந்த குறைப்பாடை தவிர்க்க, நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பெற முடியாத சூழலே தற்சமயம் உள்ளது.

statiq launches nectar 7 4kw charger

இதற்காகவே, வீட்டு உபயோக சார்ஜர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இத்தகைய சார்ஜர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோக சார்ஜராக நெக்டார் 7.4 கிலோவாட்ஸ் சார்ஜரை ஸ்டாடிக் நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

வீட்டு உபயோக மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த சார்ஜர் ஆனது அளவில் சிறியது மற்றும் பவர்ஃபுல்லானது ஆகும். 432மிமீ நீளம், 259மிமீ அகலம் கொண்ட நெக்டார் இவி சார்ஜர் 148மிமீ தடிமன் கொண்டதாக உள்ளது. 4-சக்கர எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக இந்த சார்ஜரில் டைப்-2 கனெக்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இவி சார்ஜர் ஆனது நவீன தொழிற்நுட்பங்களை ஏற்கக்கூடியது ஆகும்.

statiq launches nectar 7 4kw charger

இதன்படி, வை-பை, எதர்நெட் மற்றும் 3ஜி/ 4ஜி கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவற்றை ஏற்கக்கூடியதாக நெக்டார் 7.4 கிலோவாட்ஸ் சார்ஜர் உருவாக்கப்பட்டு உள்ளது. ஐபி66 சான்றிதழுடன் ஐகே10 மதிப்பீடை பெற்ற இந்த சார்ஜர் அதிக ஆயுட்காலத்தை கொண்டதாகவும், சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடியது எனவும் ஸ்டாடிக் நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், ப்ளூடூத் மற்றும் RFID வசதிகளையும் இந்த சார்ஜர் கொண்டுள்ளது. சார்ஜ் ஆகுவதை குறிக்கும் விதத்தில் RGB எல்இடி நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் இந்த சார்ஜரில் உள்ளது. சுவரில் இருந்து யாராலும் எளிதில் கழற்ற முடியாத வகையில் ஸ்க்ரூ போட்டு கொடுக்கப்படும் என கூறும் ஸ்டாடிக் நிறுவனம், நெக்டார் 7.4 கிலோவாட்ஸ் சார்ஜரை பல்வேறு விதமான நிறங்களில் விற்பனை செய்ய உள்ளது.

statiq launches nectar 7 4kw charger

இதன் மூலம், யாராலும் எளிதில் அடையாளம் காண முடியாத வகையிலான நிறத்தில் இந்த இவி சார்ஜரை பெறலாம். ஏற்கனவே கூறியதுபோல், ஸ்டாடிக் நிறுவனத்தின் கீழ் தற்சமயம் இந்தியாவில் 65 நகரங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான இவி சார்ஜர்கள்/ சார்ஜிங் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சார்ஜர்கள் நாட்டின் டயர்-1, டயர்-2 மற்றும் டயர்-3 பகுதிகளில் உள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டாடிக் நிறுவனம், 2025ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 20 ஆயிரம் இவி சார்ஜர்களை நிறுவுவதில் தீவிரமாக உள்ளது. ஸ்டாடிக் மொபைல் செயலி மூலமாக, ஸ்டாடிக் இவி சார்ஜர் மட்டுமின்றி, இ-ஃபில், சன்ஃப்யுல், க்ளிடா போன்ற மற்ற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த வாகனங்களில் 30% வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு ஸ்டாடிக் போன்ற இவி சார்ஜர் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியம் ஆகும். புதிய நெக்டார் 7.4 கிலோவாட்ஸ் சார்ஜர் வாடிக்கையாளர்களை எந்த அளவிற்கு கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2024, 13:00 [IST]
English summary
Statiq launches nectar ac charger debuts into d2c market check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X