ஸ்பாய்ளர் வச்ச ஸ்டீல்பேர்டு ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்.. இதோட விலை இவ்ளோ கம்மியா! அபராதத்தைவிட குறைவு!!
முன்னணி ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்ஸ் (Steelbird Helmets) இந்தியாவில் அதன் புத்தம் புதிய தலைக்கவசத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. எஸ்பிஎச் 64 ஜிப் ஆர்எஃப் (SBH-64 ZIP RF) எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இது ஓர் அரை முக ஹெல்மெட் (Half-Face Helmet) ஆகும். நகர்ப்புற இரண்டுசக்கர வாகன ஓட்டிகளை மையப்படுத்தியே இந்த புதிய ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.
அதாவது, அதிக நேரம் பயன்படுத்தினாலும் அசௌகரியமான உணர்வை வழங்காத வண்ணம் இருக்கும் வகையிலேயே தன்னுடைய இந்த புதிய ஹெல்மெட்டை அவர்கள் தயார் செய்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே ஹெல்மெட்டின் பின் பக்கத்தில் கார்களின் பின் பக்கத்தில் வழங்கப்படுவதைப் போல ஸ்பாய்ளர் (Spoiler) ஒன்றை வழங்கி இருக்கின்றனர்.

அது ஹெல்மெட்டிற்குள் காற்றுச் செல்வதை உறுதிப்படுத்தும். இத்துடன் சிவப்பு நிற ரெஃப்ளக்டர் (Reflector)-ம் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது இருள் சூழ்ந்த பகுதிகளில் ரைடரின் இருப்பை அடையாளம் காண துணையாக இருக்கும். இதுமட்டுமல்ல, தலைக்கு கூடுதலாக காற்றைக் கடத்தும் விதமாக கூட்டப்பட்ட பாலிகார்பனேட் விஷர்களே (Polycarbonate Visor) இந்த ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், ஹெல்மெட்டை அணிந்த பின்னரும் சிறப்பான வெண்டிலேஷன் ரைடருக்கு கிடைக்கும் என தெளிவாக தெரிகின்றது. இதுமட்டுமல்ல, கழுத்துக்கான பேட் (Neck Pad), சுவாசிக்க மற்றும் துவைக்கக் கூடிய வசதிக் கொண்ட துணி ஆகியவற்றையே இந்த ஹெல்மெட்டில் ஸ்டீல்பேர்டு நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது.

மேலும், இந்த ஹெல்மெட்டை சுலபமாக கழட்டி மாட்ட ஏதுவாக பக்கில் (Buckle) அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளவும் முடியும். இதுபோன்று இன்னும் பல வசதிகளைத் தாங்கியதாகவே புதிய ஸ்டீல்பேர்டு எஸ்பிஎச்-64 ஜிப் ஆர்எஃப் தலைக்கவசம் உள்ளது. இது ஓர் பிஐஎஸ் (BIS) சான்று பெற்ற ஹெல்மெட் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஹெல்மெட்டின் கூட்டை அதிகம் அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டதாகவே அவர்கள் தயார் செய்திருக்கின்றனர். ஆகையால், வேகமாகச் சென்று மோதினாலும் ரைடருக்கு உச்சபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இந்த புதிய ஹெல்மெட்டை பத்து விதமான வண்ண தேர்வுகளிலும், மூன்று விதமான அளவுகளிலும் வாங்கிக் கொள்ள முடியும்.

எம் (580 மிமீ), எல் (600 மிமீ) மற்றும் எக்ஸ்எல் (620 மிமீ) இவையே அந்த மூன்று விதமான அளவுகள் ஆகும். இதற்கு மிகவும் குறைவான விலையையே ஸ்டீல்பேர்டு நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ. 999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து ஸ்டீல்பேர்டு எஸ்பிஎச்-64 ஜிப் ஆர்எஃப் தலைக்கவசம் விற்பனைக்குக் கிடைக்கும். இவ்வளவு கம்மி விலையில் இப்படி ஒரு ஹெல்மெட்டா என்றே இந்த விலை பலரையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் ஹெல்மெட் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் டூ-வீலர்களில் பயணிக்கும் ரைடர் மற்றும் பின்னிருக்கை பயணி என இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை இந்திய மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்கி இருக்கின்றது.

இது கடைப்பிடிக்காத இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்ச அபராதமாக ரூ. 1000 வரை விதிக்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அபராதத்தைக் காட்டிலும் மிகவும் கம்மியான விலையில் தன்னுடைய புதிய ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு நிறுழனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு டூ-வீலர் ரைடர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









