இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!

தலைக் கவசம், இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிர் கவசம் என இதனைக் கூறலாம். இதனையே கூடுதல் பாதுகாப்பான ஒன்றாக இந்திய நிறுவனம் ஒன்று உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களில் ஸ்டீல்பேர்டு-ம் ஒன்று. இந்த நிறுவனம் இக்னைட் பிராண்டின்கீழ் பிரீமியம் தர ஹெல்மெட்டுகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டிலேயே தற்போது புதிய அதிக பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை நிறுவனம் தயாரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஜிஎன் 7 எனும் ஹெல்மெட்டையே நிறுவனம் தயாரித்து இருக்கின்றது.

ஹெல்மெட்

3 தரமான சான்றுகளை பெற்றிருக்கு

இந்த ஹெல்மெட்டிற்கு இசிஇ 22.06 (ECE 22.06) சான்று வழங்கப்பட்டு உள்ளது. இதுவே இந்தியாவின் முதல் இசிஇ 22.06 சான்று பெற்ற முதல் ஹெல்மெட் ஆகும். இதுமட்டுமின்றி, டிஓடி எஃப்எம்விஎஸ்எஸ் எண். 218 (DOT FMVSS No. 218) மற்றும் பிஐஎஸ் (BIS) ஆகிய சான்றுகளும் புதிய இக்னைட் ஐஜிஎன் 7 ஹெல்மெட்டிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய ஹெல்மெட்டையே இந்திய நிறுவனமான ஸ்டீல்பேர்டு தற்போது உருவாக்கி இருக்கின்றது.

மேட்-இன் இந்தியா ஹெல்மெட்

இத்தனை தர சான்றுகளையும் ஓர் இந்திய நிறுவனத்தின் ஹெல்மெட் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். இசிஇ என்பது ஐரோப்பிய பாதுகாப்பு தர சான்றைக் குறிக்கக் கூடியதாக உள்ளது. இதன் வாயிலாக புதிய ஸ்டீல்பேர்டு ஹெல்மெட் ஐரோப்பிய பாதுகாப்பு தர விதிகளுக்கு இணைங்க தயாரிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. பிஐஎஸ் இந்தியாவால் வழங்கப்படும் பாதுகாப்பு சான்று ஆகும். இவற்றுடன் ஐஜிஎன்-7 பாதுகாப்பு தர சான்றையும் இக்னைட் புதிய ஹெல்மெட் பெற்றிருக்கின்றது.

மூன்று அளவுகளில் இதை வாங்கிக்கலாம்

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான அளவில் இந்த ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கும். எம், எல் மற்றும் எக்ஸ்எல் ஆகிய அளவுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், மோனோ கலர் மற்றும் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டது என்கிற இரு தேர்வுகளும் இந்த ஹெல்மெட்டில் வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 6 ஆயிரத்து 199 ரூபாய் ஆகும். இந்த விலையிலேயே தனது அதீத பாதுகாப்பு திறன் மிக்க ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக தயாரித்து இருக்கின்றது.

பிரீமியம் அம்சங்கள் நிறைய இருக்கு

இதனை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் ஸ்டீல்பேர்டு விற்பனைக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஹெல்மெட் ஓர் பிரீமியம் தர தலைக் கவசம் ஆகும். என்ஏசிஏ ஏர் ஃப்ளோ வசதி இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஹெல்மெட் அணிந்த பின்னருக்கும் உள் பகுதிக்கு காற்றைக் கடத்த உதவும். ஆகையால், நீண்ட நேரம் ஹெல்மெட் அணிந்திருந்தால் அது அசௌகரியமான உணர்வை வழங்காது. ஆகையால், லாங் டிரைவிற்கு உகந்த வாகனமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹெல்மெட்

பாதுகாப்பான ஹெல்மெட்

இதுதவிர, இந்த ஹெல்மெட்டை 9 விதமான கலவைகளைக் கொண்டு உருவாக்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே ஹெல்மெட்டின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தி இருக்கின்றது. 18 விதமான இம்பேக்டுகளைத் தாங்கியதாகவும் இதை ஸ்டீல்பேர்டு வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷர் சூரிய ஒளி மிகுந்த நேரங்களிலும் தெளிவான பார்வை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி இரவிலும் தெளிவான பார்வையை இது வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

எல்லாமே ஹை குவாலிட்டி

இத்துடன், இந்த ஹெல்மெட்டின் சிறப்பைக் கூட்டும் விதமாக நிறுவனம் சூப்பர் சாஃப்ட் ஃபேப்ரிக்கை ஹெல்மெட்டின் உட்பகுதியில் பயன்படுத்தி இருக்கின்றது. இது கூடுதல் கம்ஃபோர்டான அனுபவத்தை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கும். இதுதவிர, இதனால் எரிச்சல் மற்றும் ரேஷைப் போன்றவை ஏற்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், உயர் ரக தெர்மோ ஃபோம் விண்ட் டெஃப்ளெக்டர், மூக்கை பாதுகாக்கும் புரடெக்டர் மற்றும் ஸ்லைட் செய்யும் வசதிக் கொண்ட சன் ஷீல்டு ஆகிய அம்சங்களும் இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது அதன் கூடுதல் பிளஸ்ஸாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Steelbird launched ign 7
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X