தலைக்கவசம் மட்டுமல்ல இனி கிரீஸ், எஞ்ஜின் ஆயிலும் கிடைக்கும்! டூவீலர்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் நிறுவனமான ஸ்டீல்பேர்டு புதிதாக இருசக்கர வாகனங்களுக்கான எஞ்ஜின் ஆயிலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வரும் ஸ்டீல்பேர்டு புதிதாக இருசக்கர வாகனங்களுக்கான எஞ்ஜின் ஆயிலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான ஆயில் மட்டுமின்றி லூப்ரிகேன்ட் ஆயிலையும் அது விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

இரண்டமே இருசக்கர வாகனங்களுக்கானவை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, கிரீஸ் மற்றும் ஃபோர்க் ஆயில்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரு ரக இருசக்கர வாகனங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

ஸ்டீல்பேர்டு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, புதிய தயாரிப்புகள் அனைத்தும் உலக தரத்திற்கு ஏற்றவை என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்திய தரநிலைக்கு ஏற்றவையாகவும் அது இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

விலை:

4டி எஞ்ஜின் ஆயில் எஸ்ஏஇ 20டபிள்யூ40 ஏபிஐ எஸ்எல் 900மில்லி ரூ. 366க்கும், 4டி எஞ்ஜின் ஆயில் எஸ்ஏஇ 20டபிள்யூ40 ஏபிஐ எஸ்எல் 1 லிட்டர் ரூ. 394க்கும், 4டி எஞ்ஜின் ஆயில் எஸ்ஏஇ 15டபிள்யூ50 ஏபிஐ செமி சிந்தெடிக் 2.5 லிட்டர் ஆயில் ரூ 1,075 என்ற விலையிலும் அவை விற்பனைக்குக் கிடைக்கும்.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

ஸ்டீல்பேர்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மானவ் கபூர் கூறுகையில், "எங்கள் தயாரிப்புகள் வலுவான ஆர்&டி காப்பு மூலம் முழுமையாக சோதிக்கப்படுகின்றன. அனைத்து தேசிய மற்றும் சர்வதேச தரங்களும் உற்பத்திச் செயல்பாட்டின் போது பின்பற்றப்பட்டுள்ளன" என்றார்.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

தொடர்ந்து, "இந்த புதிய அளவிலான எஞ்ஜின் ஆயில்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மதிப்பு அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டீல்பேர்டு நிறுவனம் தலைக்கவசம் போன்ற தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தநிலையில், புதிதாக ஆயில் தயாரிப்பிலும் களமிறங்கியிருக்கின்றது.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

ஸ்டீல் பேர்டு நிறுவனம் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலின்போது வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனித்துவமான முகக் கவசங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த முகக் கவசங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 6 ஆயிரம் முக கவசங்கள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.

தலைக்கவசம் மட்டுமல்ல இனி ஆயில், கிரீஸ், ஃபோர்க் ஆயிலும் கிடைக்கும்! இருசக்கர வாகனங்களுக்கான ஸ்டீல்பேர்டின் புதிய தயாரிப்புகள்!

இந்த முகக்கவசத்தைக் கொண்டு மொபைல் போனிற்கு வரும் அழைப்புகளையும், பாடல்களையும் மொபைல் போனை தொடாமலேயே கண்ட்ரோல் செய்ய முடியும் என்கிறது ஸ்டீல்பேர்டு நிறுவனம். இது மட்டுமின்றி குழந்தைகளுக்கான முக கவசங்களையும் இந்த நிறுவனம் விற்பனை செய்வது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: ஹெல்மெட் படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Steelbird Launches Engine Oils & Lubricants For Two-Wheeler. Read In Tamil.
Story first published: Wednesday, July 7, 2021, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X