ஸ்டீல்பேர்டின் புதுமுக தலைக்கவசம் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க!!

ஸ்டீல்பேர்ட் நிறுவனத்தின் புதிய எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

உலக புகழ்பெற்ற ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களில் ஸ்டீல்பேர்ட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் அதன் புதுமுக ஹெல்மெட் ஒன்றை இந்தியாவில் நேற்றைய (செவ்வாய்கிழமை) தினம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் முழு முக ஹெல்மட் ஆகும். இந்த ஹெல்மெட் இந்தியர்களைக் கவரும் வகையில் சில சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

எஸ்பி-39 ரோக்ஸ் எனும் பெயரில் இந்த ஹெல்மட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மட் ஆகும். இந்த ஹெல்மெட்டில் சிறப்பு விஷயமாக சன் ஷீல்டு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஹெல்மெட்டில் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

இந்த புதுமுக ஹெல்மெட்டிற்கு ஸ்டீல் பேர்டு நிறுவனம் ரூ. 1,199 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இந்த ஹெல்மெட்டை இத்தாலி வடிவமைப்பு மொழியுடன் ஸ்டீல் பேர்டு உருவாக்கியுள்ளது. எனவே சர்வதேச தரத்தில் இந்த ஹெல்மெட் இருக்கும் என்பதில் சந்தேகமும் இருக்காது.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

சன் ஷீல்டை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாகவே நம்மால் பயன்படுத்த முடியும். இது சூரிய ஒளி சுள்ளென்று முகத்திற்கு நேராக பட்டாலும் தெளிவான பாதையைக் காண உதவும். குறிப்பாக, கண் எரிச்சல் மற்றும் கூச்சத்தை இல்லாத வகையில் குறைக்கும்.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

தனித்துவமான வசதிக் கொண்ட இந்த ஹெல்மெட்ட இருவிதமான அளவு தேர்வுகளில் மட்டுமே ஸ்டீல்பேர்டு விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 600 மிமீ மற்றும் 580 மிமீ ஆகிய இரு அளவுகளில் அது கிடைக்கும். இந்த ஹெல்மெட்டை கார்பன் ஃபைபர் மூலக் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதன் உறுதித் தன்மையைப் பற்றிய பயம் வேண்டாம்.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

புதிய எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் கிளாஸ்ஸி மேட் பிளாக், டெசர்ட் ஸ்டோர்ம், பேட்டில் கிரீன், கிரே மற்றும் செர்ரி சிவப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். தற்போது ஸ்டீல்பேர்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் விற்பனையாளர்களிடத்தில் இந்த புதிய சன் ஷீல்டு ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஸ்டீல்பேர்ட் எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா உடனே வாங்குடுவீங்க!

புதிய எஸ்பி-39 ரோக்ஸ் ஹெல்மெட் அறிமுகம் பற்றி ஸ்டீல்பேர்ட் ஹெல்மெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறியதாவது, "இந்த ஹெல்மெட்டைச் சவாரி செய்யும் வசதியை மனதில் வைத்து வடிவமைத்துள்ளோம். ஹெல்மட்டின் முக்கிய வசதிகள்; சன் ஷீல்ட் மற்றும் லைட் வெயிட் அம்சங்கள் ஆகும். இது நீண்ட சவாரிகளைக்கூட சுவாரஸ்யமான மற்றும் வசதியான அனுபவமாக மாற்றும். மாற்றக்கூடிய உட்புறங்களைக் கொண்டிருப்பதால் ஹெல்மட்டின் தோற்றமும், உணர்வும் மிகவும் பிரீமிய வசதியை வழஹ்கும்" என்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Steelbird Launches Full-Face Helmet SB-39 Rox With Sun Shield Feature. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X