இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் இந்தியாவில் அறிமுகம்! இன்பில்ட் சன்-விசர் அம்சத்துடன் வந்திருக்கு!

பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவின் முதல் இசிஇ 22.06 (European Safety Standards- ECE 22.06) பாதுகாப்பு தர சான்று பெற்ற ஹெல்மெட்டை அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

இருசக்கர வாகனங்களுக்கான அக்ஸசெரீஸ் மற்றும் ஹெல்மெட் போன்ற உபகரணங்களை தயாரித்து வரும் பிரபல ஸ்டீல்பேர்டு (Steelbird Hi-tech) நிறுவனம், புதிய தலைக்கவசம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ப்ளேவர் பிஇடி (Blauer BET) எனும் புதுமுக ஹெல்மெட்டையே நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

ஆசியாவின் முன்னணி ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக ஸ்டீல்பேர்டு விளங்குகின்றது. இந்த நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ஹெல்மெட் ஐரோப்பிய பாதுகாப்பு தரநிலை 'இசிஇ 22.06' (European Safety Standards- ECE 22.06) சான்று பெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெல்மெட் அதிக பாதுகாப்பானது என்பதை இந்த சான்று விளக்குகின்றது.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

ரைடிங்கின்போது மிக அதிக பாதுகாப்பை விரும்புவோர்களு்கு இந்த ஹெல்மெட் மிக சிறப்பான பாதுகாப்பை வழங்கும். எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்து மிக அதிக பாதுகாப்பை வழங்கும். அத்துடன், அதிக சொகுசான அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்பவே ப்ளேவர் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மிக மிருதுவான உட்பக்க ஸ்பாஞ்சுகள் மற்றும் துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

அவை அவ்வளவு எளிதில் வியர்வால் பாதிக்காது என கூறப்படுகின்றது. இதேபோல், ஹெல்மெட்டை இருக்கமாக தலையில் நிலைநிறுத்த உதவும் ஸ்டிராப்பு அசௌகரியமான உணர்வை தவிர்க்கும் வகையில் உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓர் அரை முக ஹெல்மெட் ஆகும். ஆகையால், காற்றோட்டத்திற்கு துளியளவும் தடை இருக்காது. இருப்பினும், ஹெல்மெட்டின் மேற்புறத்தில் காற்று உள்ளே நுழைவதற்கான துளைகள் விடப்பட்டுள்ளன.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

இதுதவிர சற்று கவர்ச்சியான ஹெல்மெட்டாகவும் ப்ளேவர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மிகவும் ஸ்டைலான கிராஃபிக்குகள் ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஹெல்மெட் என்னென்ன மாதிரியான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது பற்றிய முழுமையான விபரம் வெளியிடப்படவில்லை. இதேபோல் இதன் விலை விபரமும் வெளியாகவில்லை.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

இந்த ஹெல்மெட்டை அணிந்திருக்கின்ற போதிலும் பக்கவாட்டு பகுதியை மிக தெளிவாகப் பார்க்க முடியும் என ஸ்டீல்பேர்டு தெரிவித்துள்ளது. இத்துடன், மிக சிறப்பான அம்சமாக இன்பில்ட் சன்-விஷர் (inbuilt sun-visor) இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடனேயே மிக மிக முக்கிய சான்றான இசிஇ 22.06-ஐ அது பெற்றிருக்கின்றது. வெகு விரைவில் இந்திய அரசாங்கம் ஹெல்மெட் விஷயத்தில் புதிய விதியை அமல்படுத்த இருக்கின்றது.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிக பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு அரசு புதிய வழிமுறைகளை உருவாக்கியிருக்கின்றது. அதாவது, நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் அனைத்து ஹெல்மெட்டுகளும் ஐரோப்பிய பாதுகாப்பு தர நிலைகள் இசிஇ 22.06-க்கு இணையானதாக இருக்க வேண்டும் என்ற புதிய விதியை அமலுக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

இந்த விதி வரும் 2024 ஜனவரியில் இருந்து அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், புதிய பாதுகாப்பு தரநிலைகளுக்கு உட்பட்ட ஹெல்மெட்டாக புதிய ஸ்டீல்பேர்டு பிளேவர் பிஇடி நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே, இந்த தரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் தலைக்கவசம் ஆகும்.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

முன்னதாக இசிஇ 22.05 அமலில் இருந்தது. இதனை ரீபிளேஸ் செய்து 2020 ஜூன் மாதத்தில் இசிஇ 22.06 அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இதில், 05 மற்றும் 06 என்பது ஹெல்மெட்டின் பாதுகாப்பு விஷயத்தில் செய்யப்படும் மாற்றத்தைக் குறிக்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. எண் 22 ஒழுங்குமுறையில் மேற்கொள்ளப்படும் திருத்தத்தைக் குறிக்கக் கூடிய எண் ஆகும்.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

புதிய பாதுகாப்பு தரங்களின்கீழ் ஹெல்மெட்டுகள் பல கட்ட சோதனைகளைச் சந்திக்கின்றன. எச்ஐசி (Head Injury Crieterion) என அது அழைக்கப்படுகின்றது. அதிர்ச்சியை தாங்குதல், ரிடென்ஷன் சிஸ்டம் மற்றும் ஹெல்மெட் அவிழ்வது உள்ளிட்டவை பல கட்ட ஆய்வுகள் பரிசோதனைப் பட்டியலில் அடங்கும்.

இசிஇ 22.06 சான்று பெற்ற தலைக்கவசம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம்... இன்பில்ட் சன்-விசர் உட்பட எக்கசக்க அம்சங்களுடன் வந்திருக்கு!

இந்த ஆய்வில் சன் விசர்களும் உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு பன்முக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஹெல்மெட்டிற்கு இசிஇ 22.06 தர சான்று வழங்கப்படும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், ஓர் ரைடருக்கு ஆபத்தான காலத்தில் ஓர் ஹெல்மெட் எப்படிப்பட்ட பாதுகாப்பை வழங்கும் என்கிற விபரம் இந்த ஆய்வுகளின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பு: முதல் நான்கு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்ட ஸ்டீல்பேர்டு தயாரிப்பு ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Steelbird launches indias first ece 22 06 compliant helmet blauer bet
Story first published: Saturday, May 14, 2022, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X