நேரடியாக 5000 பேருக்கு வேலை! ஓசூரில் இன்ஜின் கியர் பாக்ஸ் தயாரிக்கும் இந்த கம்பெனி பற்றி தெரியுமா?

ஸ்டெலன்டிஸ் நிறுவனம் இந்தியாவில் அதுவும் நமது ஒசூரில் நடத்தி வரும் ஆலையை உலகளவில் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிப்பின் மையமாக மாற்றியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்களை தயாரித்து வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான இன்ஜின்களையும் இந்த ஆலையிலேயே தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபியட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பது தான் ஸ்டெல்லன்டீஸ், இந்நிறுவனம் வாகனங்களுக்கான இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்களை தயாரிக்கிறது. இந்நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக மாறியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் தமிழகத்தில் ஓசூர் மாவட்டத்தில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து வருகிறது.

Stellantis Hosur Plant

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி பல இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களே வாகனங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனம் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்களை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் தற்போது இந்த ஆலையின் கட்டுமான திறன், இன்ஜின் தயாரிக்க போதுமான மிஷின்கள், சப்ளையர் கிடைப்பது, அவரிடமிருந்துதெடாநர்து பொருட்கள் கிடைப்பது, புதிய இன்ஜின் தயாரிப்பில் ஊழியர்களுக்கான பயிற்சி, ஆகியவற்றில் வகவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள இந்த ஆலை தான் இந்நிறுவனத்தின் முதுகெலும்பாகவே மாறியள்ளது.

இந்த ஆலை சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளுஐது. இங்கு 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஜென் 3, 2.0 லிட்டர் எஸ்டிஇ டீசல் இன்ஜின் ஆகிய இன்ஜின்தயாரிக்கப்பட்டுள்ளது. இது போக கியர் பாக்ஸை பொருத்தவரை 6 ஸ்பீடு மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் 95 சதவீதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளுக்க இந்த ஆலையில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக ஐரோப்பா, துருக்கி, மத்திய கிழக்கு நாடுகள், லத்தன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் ஆண்டு தோறும் 3.50 லட்சம் கியர் பாக்ஸ்கள் ஒரு ஆண்டிற்கு தயாரிக்கப்படுகிறது. ஒரே ஆலையில் இவ்வளவு தயாரிப்புகள் தயாரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தான்.

இதில் பெரும்பாலான உதிரி பாக தயாரிப்பு மற்றும் அசெம்பிளி எல்லாம் இந்த ஆலைக்கு உள்ளேயே நடக்கிறது. இது போக இன்ஜின் தயாரிக்க 300 உதிரி பாகங்களும், கியர்பாக்ஸ் தயாசரிக்க 120 உதிரி பாகங்களும் வெளியிலிருந்து இந்நிறுவனம் பெறுகிறது. இதனால் இந்நிறுவனம் 60 சதவீத பாங்களை அவர்களே தயாரித்தும் 40 சதவீதமான பாகங்களை வெளியிலிருந்து பெற்றும் தயாரிப்பை உருவாக்குகின்றனர்.

இந்த ஆலையில் சுமார் 1500 பேர் நேரடியாக பணியில் இருக்கின்றனர். இதில் பெண்கள் மட்டும் 18 சதவீதம் பேர் இருக்கின்றனர். இது போக இந்நிறுவனம் 5000 நேரடி வேலை வாயப்புகளையும், பல்வேறு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இந்த ஆலை தற்பேஆது 3 ஸ்விஃப்ட் களாக பணியாற்றுகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சியும் நடக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்டெல்லான்டின் நிறுவனம் பயிற்சியை சிறப்பாக வழங்கி வருகிறது.தயாரிப்பிலும் சக்கை போடு போடுகிறது. உலகளவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ள நிலையில் இதன் வளர்ச்சி நேரடியாக தமிழக வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 11:06 [IST]
English summary
Stellantis hosur plant india manufacturing powertrain
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+