காஸ்ட்லீயான ஆடி கார் கொடுத்து வேலை வாங்கும் தனியார் கம்பெனி!! இந்த மாதிரி கம்பெனி எல்லாம் எங்க இருக்கு?

கேரளாவின் கோழிகோடு நகரத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதன் முக்கிய பொறுப்பை வகிக்கும் அதிகாரிக்கு விலையுயர்ந்த ஆடி காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது. கோழிக்கோடில் எத்தகைய வணிகத்தை செய்துவரும் நிறுவனம் இது? இந்த நிறுவனத்தில் இந்த விலைமிக்க காரை வாங்கியிருப்பவர் யார்? என்பதை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு பணியாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் போனஸ் வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமீப காலமாக சில கார்ப்பிரேட் நிறுவனங்கள் ஒருபடி மேலே போய், நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருக்கும் பட்ஜெட் விலையில் கார் அல்லது பைக்குகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, கேரளாவில் அவ்வாறான சம்பவங்கள் நிறைய முறை நடந்துள்ளதை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

company gifted audi q3 car

அந்த வரிசையில், கேரளாவின் கோழிக்கோடை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அதன் பொது மேலாளருக்கு (General Manager)-க்கு விலையுயர்ந்த ஆடி காரை பரிசாக வழங்கி அவரை சிறப்பித்துள்ளது. கோழிக்கோடு நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த கார்ப்பிரேட் நிறுவனத்தின் பெயர் கேப் இண்டெக்ஸ் (Cap Index) ஆகும்.

இந்த நிறுவனத்தில் மிக முக்கிய பதவியான பொது மேலாளராக பணியாற்றும் உமருக்கு காஸ்ட்லீயான ஆடி க்யூ3 (Audi Q3) கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை கீழே காணலாம். இந்த ஆடி கார் சர்பிரைஸாக உமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், காரை பெற்றுக் கொண்ட சமயத்தில் உமர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவதை வீடியோவில் காணலாம்.

company gifted audi q3 car

பொது மேலாளர் உமருக்கு மட்டுமின்றி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் இன்னும் நிறைய பேருக்கு கேப் இண்டெக்ஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளது. இதன்படி, உதவி பொது மேலாளர் ஒருவருக்கு மார்க்கெட்டில் பிரபலமான ஹூண்டாய் வென்யூ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் அதிக பேர் விரும்பி வாங்கக்கூடிய எஸ்யூவி கார்களுள் ஒன்று, ஹூண்டாய் வென்யூ ஆகும்.

அதேபோல், 3 பணியாளர்களுக்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை அடையாளம் கண்டு கேப் இண்டெக்ஸ் நிறுவனம் இந்த பரிசு பொருட்களை வழங்கியுள்ளது. இந்த பரிசு வழங்கும் விழா கோழிகோடில் கேப் இண்டெக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது.

company gifted audi q3 car

கேப் இண்டெக்ஸ் நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், கோழிகோடில் முன்னணி பங்கு தரகர் நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், கேரளாவின் மிக பெரிய வர்த்தக மையத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு கேப் இண்டெக்ஸ் பரிசு பொருட்களை வழங்குவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

இதற்குமுன், கியா செல்டோஸ் எஸ்யூவி காரை பணியாளர் ஒருவருக்கு இந்த நிறுவனம் பரிசாக வழங்கி இருந்தது. தற்போது கேப் இண்டெக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளருக்கு வழங்கப்பட்டுள்ள ஆடி க்யூ3 விலையுயர்ந்த காராக இருப்பினும், இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான கார் இதுவாகும். கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.56.11 லட்சம் - ரூ.67.98 லட்சமாக உள்ளது.

company gifted audi q3 car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது மேலாளருக்கு தனியார் நிறுவனம் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இருப்பினும், விலையுயர்ந்த ஆடி க்யூ3 கார் பரிசு என்பது உண்மையில் டூ மச். இந்த ஆடி கார் மட்டுமின்றி, ஒரு ஹூண்டாய் வென்யூ கார் மற்றும் 3 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பணியாளர்களுக்கு கேப் இண்டெக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளதாக கூறினோம் அல்லவா... ஆக மொத்தத்தில் இந்த பரிசு வாகனங்களுக்காக மட்டும் ரூ.85 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரையில் கேப் இண்டெக்ஸ் செலவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 7:00 [IST]
English summary
Stock brokers company gifted audi q3 luxury car to employee check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X