பங்கு சந்தை ஒருவரது வாழ்க்கையை இப்படியெல்லாம் கூட மாற்றுமா? குடும்பத்தை பெருமை படுத்திட்டார்!!
பங்கு சந்தை (Stock Marketing) தான் எல்லா நிறுவனங்களின் வருவாயையும் தீர்மானிக்கிறது. அதேநேரம், பங்கு சந்தையின் மூலம் சமூக வலைத்தளங்களில் வருவாய் பார்ப்பவர்களும் ஏராளம். அதாவது, பங்கு சந்தையில் எவ்வாறு, எந்த நேரத்தில் முதலீடு (Invest) உள்ளிட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி கூறுவதையே தொழிலாக வைத்து பணம் பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். பங்கு சந்தையை பொறுத்தவரையில், தவறான முதலீடுகள் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளதால், முதலீடு செய்வதற்கு முன் விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவே எல்லாரும் விரும்புகின்றனர்.
அவ்வாறு பங்கு சந்தை குறித்த சந்தேகங்களை தீர்த்து வைப்பதையே தொழிலாக பார்ப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான் வைஷாக் விஜய் (Vysakh Vijay). கேரளா (Kerala)-ஐ சேர்ந்தவர். இவ்வாறான நபர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் (Instagram), யூடியூப் (Youtube) போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வைஷாக் விஜய் போன்றோருக்கு பெரிய அனுகூலமாக அமைந்துள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களின் காரணமாகவே அத்தகையவர்கள் பரவலாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளனர். பங்கு சந்தை குறித்த தனது யோசனைகளை வழங்கி சம்பாதிப்பதுடன், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கேரளாவை சேர்ந்த வைஷக் விஜய் கணிசமான வருவாயை பார்த்து வருகிறார். அவற்றின் மூலமாக கிடைத்த பணத்தில் புத்தம் புதிய பிஎம்டபிள்யூ (BMW) காரை வாங்கியுள்ளார் என்றால் வைஷக் விஜய்க்கு எந்த அளவிற்கு வருவாய் கிடைக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்ஸ்டாகிராமில் 95 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் வைஷக் விஜய் வாங்கியிருப்பது, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (X1) என்கிற லக்சரி எஸ்யூவி (Luxury SUV) கார் ஆகும். கொச்சியில் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமில் வைஷக் விஜய் தனது குடும்பத்துடன் காரை டெலிவிரி (Delivery) பெறும் படங்களை சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலை குறைவான கார்களுள் எக்ஸ்1 ஒன்றாகும். எஸ் டிரைவ் 18ஐ (sDrive 18i) மற்றும் எஸ் டிரைவ் 18டி (sDrive 18d) என 2 விதமான வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 விற்பனை செய்யப்படுகிறது. இதில், 'i' என முடிவது பெட்ரோல் வேரியண்ட் மற்றும் 'd' என முடிவது டீசல் வேரியண்ட் ஆகும்.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.49.90 லட்சம் மற்றும் ரூ.52.90 லட்சமாக உள்ளன. இந்த இரண்டில் எந்த வேரியண்ட்டை வைஷக் விஜய் வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. தோற்றத்தை பொறுத்தவரையில், விலை குறைவான பிஎம்டபிள்யூ காராக இருப்பினும் லக்சரியான தோற்றத்தில் எந்த குறையும் இல்லை. காரின் முன்பக்கத்தில் கிட்னி வடிவில் க்ரில் பகுதி வழங்கப்படுகிறது.

எல்இடி ஹெட்லேம்ப்கள் மெல்லியதான வடிவில் வழங்கப்படுகின்றன. எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் கருப்பு நிறத்திலான பம்பர் உள்ளிட்டவை எக்ஸ்1 காரின் வெளிப்பக்கத்தில் வழங்கப்படும் முக்கியமான அம்சங்கள் ஆகும். இந்த காரில் பறித்து இழுக்கக்கூடிய வகையில் கதவு கைப்பிடிகள் வழங்கப்படுகின்றன. அலாய் சக்கரங்கள் 18 இன்ச்சில் கொடுக்கப்படுகின்றன. காருக்கு பின்பக்கத்திலும் மெல்லிய வடிவத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
காருக்கு உள்ளே 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.70-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 12-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, கனெக்டட் கார் தொழிற்நுட்பம், ட்யூயல்-ஸோன் ஏசி, பனோராமிக் சன்ரூஃப், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக்காக செயல்படும் டெயில்கேட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Price) ஆகும். கொச்சி ஆன்ரோடு விலை (Kochi On-Road Price) ரூ.63 லட்சத்திற்கும் அதிகமாக வரும். பிராண்டி-நியூ பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் கருப்பு நிறத்தில் இருக்க, அதற்கேற்ப வைஷாக் விஜய் கருப்பு நிற உடையில் வந்து காரை டெலிவிரி எடுத்திருப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.


Click it and Unblock the Notifications









