33 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த செவர்லே கார்வெட்: மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய உரிமையாளர்!

By Saravana

அமெரிக்காவில், திருடுபோன செவர்லே கார்வெட் கார் 33 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் டெல்லி என்பவரின் செவர்லே கார்வெட் கார் 1981ம் ஆண்டு காணாமல் போனது. இதுகுறித்து போலீசில் ஜார்ஜ் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கார் மிசிசிபி மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த கார் ஓடும் நிலையில் இருந்தது. இதுகுறித்து ஜார்ஜ் டெல்லிக்கு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மிசிசிபி மாநகர போலீசார் கட்டுப்பாட்டில் கார் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் கார் கிடைத்த செய்தியை கேட்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த ஜார்ஜ் திக்குமுக்காடினார்.

செய்தியின் சுவராஸ்ய தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.

ஜிஎம் நிறுவனம் உதவி

ஜிஎம் நிறுவனம் உதவி

கடந்த மாதம் இந்த செய்தி உள்ளூர் பத்திரிக்கைகளில் பரபரப்பாக வெளிவந்தது. இதை பார்த்த ஜெனரல் மோட்டார்ஸ் உயரதிகாரி மார்க் ரூயஸ், அந்த காரை மிசிசிபி மாகாணத்தில் திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்தார். இதையடுத்து, மீண்டும் டெட்ராய்ட் நகருக்கு அந்த கார் வந்தடைந்தது.

உரிமையாளரிடம் சேர்ந்த கார்

உரிமையாளரிடம் சேர்ந்த கார்

டெட்ராய்ட் நகரில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் செயல்பாட்டு மையத்தில் அந்த காணாமல் போன செவர்லே கார்வெட் கார் ஜார்ஜ் டல்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது காரை சுற்றி சுற்றி வந்து பார்த்து அவர் ஆனந்தப்பட்டார்.

 மிகவும் பிடித்த கார்

மிகவும் பிடித்த கார்

காணாமல் போன காரை தவிர்த்து மேலும் 3 செவர்லே கார்வெட் கார்களை ஜார்ஜ் டல்லி வைத்துள்ளார். ஆனாலும், காணாமல் போய் திரும்ப கிடைத்திருக்கும் 1979 ஆண்டு மாடல் செவர்லே கார்வெட்தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று அவர் கூறியிருக்கிறார்.

 நல்ல கண்டிஷன்

நல்ல கண்டிஷன்

காணாமல் போய் திரும்ப கிடைத்த கார் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், நல்ல கண்டிஷனில் இருக்கிறது. ஓடோமீட்டரில் 47,000மைல்கள் மட்டுமே ஓடியிருப்பதாக காட்டுகிறது.

செவர்லே கார்வெட் கூடுதல் விபரங்கள்

செவர்லே கார்வெட் கூடுதல் விபரங்கள்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டில் தயாரிக்கப்படும் செவர்லே கார்வெட் ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த நிறுவனத்தின் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள மாடலாகவும் விளங்குகிறது.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 1953ம் ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவிற்காக ஹார்லி எர்ல் என்பவரால் டிசைன் செய்யப்பட்டு காட்சி மாடலாக வைக்கப்பட்டது. அது கன்வெர்ட்டிபிள் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

 உற்பத்தி

உற்பத்தி

இந்த மாடலின் டிசைன் மற்றும் பார்வையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்திக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. கார்வெட் என்ற சிறிய வகை போர்க்கப்பலை நினைவூட்டுவதாக இருந்ததால் மைரோன் ஸ்காட் என்பவர் கார்வெட் என்று பெயர் சூட்டினார். ஸ்டிங்ரே என்றும் அழைக்கப்படுகிறது.

 கார்வெட் மியூசியம்

கார்வெட் மியூசியம்

கார்வெட் கார்களுக்கு அமெரிக்காவில் ரசிகர்கள் அதிகம். மேலும், செவர்லே கார்வெட் கார்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் விதத்தில் கெண்டகி நகரில் தேசிய கார்வெட் மியூசியமும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த மியூசியத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மதிப்பிடமுடியாத பொக்கிஷங்களாக பாதுகாகப்பட்ட கார்வெட் கார்கள் மண்ணில் புதைந்தது நினைவிருக்கலாம்.

 தலைமுறைகள்

தலைமுறைகள்

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடல் ஏழாம் தலைமுறை செவர்லே கார்வெட் கார். ஜார்ஜ் டல்லியிடம் இருந்து காணாமல் போனது மூன்றாம் தலைமுறை கார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2014, 13:11 [IST]
English summary
A man finds his stolen Chevrolet Corvette after 33 years. Good things come to those who wait. What does he do with his 33 year old Corvette? Read the story to find out more.. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+