காரை திருடியவர்கள் சுத்தமா இதை யோசிச்சு இருக்க மாட்டாங்க... வடிவேல் காமெடி மாதிரி ஆயிடுச்சி!!

தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி சில தீய செயல்களுக்கு துணை போவது ஒருபக்கம் இருந்தாலும், பல நேரங்களில் தொழிற்நுட்பங்கள் மனிதனுக்கு பெரிதும் உதவி உள்ளன. அவ்வாறு, இங்கு ஒருவர் தனது தொலைந்துப் போன மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை ஒரே நாளில் பெரியதாக யாருடைய உதவியும் இல்லாமல் கண்டுப்பிடித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு காலத்தில், வாகனம் தொலைந்து விட்டாலே அதனை மீண்டும் மீட்டெடுப்பது மிகவும் கடினமாகும். பின்னர் இதற்காகவே வாகன பதிவெண்கள் விஷயத்தில் அரசாங்கங்களும், அதிகாரிகளும் முனைப்பு காட்ட ஆரம்பித்தனர். இதனால், கார் திருட்டுகள் குறைந்தன என்றாலும், கார் திருட்டுகளில் ஈடுப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் மாறவில்லை.

stolen mahindra thar roxx recovered

வாகனம் திருடு போவதை தடுக்க புது, புது முறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டால், அதற்கு இணையாக திருடர்களும் மாட்டிக் கொள்ளாமல் திருட புது, புது யுக்திகளை பின்பற்ற ஆரம்பித்தனர். இதனாலேயே அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் (Advanced Technologies)-இன் தேவை அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த வகையில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஒருவர் தனது திருடுப்போன மஹிந்திரா வாகனத்தை வெறும் ஒரே நாளில் கண்டுப்பிடித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளார்.

இதற்காக அவர் பயன்படுத்தியது, அட்ரெனாக்ஸ் (Adreno-X) என்கிற தொழிற்நுட்பத்தை ஆகும். இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக தனது பிராண்ட்-நியூ தார் ராக்ஸ் வாகனத்தை மொபைல் போனில் அட்ரெனாக்ஸ் கனெக்ட் மொபைல் செயலி உடன் ஏற்கனவே இணைத்துக் வைத்திருந்தார். அட்ரெனாக்ஸ் மூலமாக, வாகனம் இருக்கும் இடம், கதவுகள் லாக்/ அன்லாக் செய்வது, காருக்குள் ஏசி ஆன்/ஆஃப் செய்துவது உள்ளிட்டவற்றை மொபைல் போன் மூலமாகவே கட்டுப்படுத்தலாம்.

stolen mahindra thar roxx recovered

இந்த மொபைல் செயலியை எளியதாக பிளேஸ்டோர் (Playstore)-இல் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட வசதிகள் மட்டுமின்றி, டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் வசதி மற்றும் அவசர கால உதவிகளையும் அட்ரெனாக்ஸ் மூலமாக பெறலாம். இதற்காகவே வாகனத்தில் ரேடார் மற்றும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அட்ரெனாக்ஸ் தொழிற்நுட்பம் ஆனது அமேசான் அலெக்ஸா, சோனி, விஸ்டன் மற்றும் போஸ்ச் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது ஆகும்.

இந்த தொழிற்நுட்பத்தை எக்ஸ்யூவி700 (XUV700) காரில் இருந்தே மஹிந்திரா நிறுவனம் தனது கார்களில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தார் ராக்ஸ் வாகனத்திலும் இந்த தொழிற்நுட்பம் வழங்கப்பட்டதால், நொய்டாவை சேர்ந்த இந்த நபரால் தனது திருடப்பட்ட வாகனத்தை எளிதாகவும், விரைவாகவும் கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது. இந்த தார் ராக்ஸ் வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

stolen mahindra thar roxx recovered

அதில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தார் ராக்ஸ் வாகனத்தை ஒருவர் போலி சாவியை கொண்டு திருடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், திருடப்பட்ட வாகனம் அடுத்த நாளிலேயே அட்ரெனாக்ஸின் உதவியுடன், அது இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்கப்பட்டுள்ளது. திருடியவர்கள் எப்படியிருந்தாலும் சிக்குவோம் என தெரிந்து, திருடிய வாகனத்தை அனாதையாக ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலும், இவ்வாறு திருடப்படும் வாகனங்களை குற்ற செயல்களுக்கு திருடர்கள் பயன்படுத்துகின்றனர். வேலை முடிந்த பின் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகின்றனர். ஆதலால், அட்ரெனாக்ஸ் போன்ற தொழிற்நுட்பங்கள் ஒருபக்கம் இருந்தாலும், போலி சாவியைக் கொண்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாத வண்ணம் தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2025, 14:11 [IST]
English summary
Stolen mahindra thar roxx recovered within 1 day by using adrenox technology
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X