மோசடி புகாரால் சீனாவின் டிராம் பஸ் சோதனை ஓட்டம் நிறுத்தம்!

Written By:

கடந்த வாரம் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று புதுமையான பஸ் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ததுடன், அதன் சோதனை ஓட்டத்தையும் துவங்கியது. கீழே வாகனங்கள் செல்ல வசதியான அமைப்புடன், வடிவமைக்கப்பட்ட இந்த பஸ் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், இந்த பஸ் திட்டம் குறித்து சீன மீடியாக்களே சந்தேகக் கணைகளை வீசியதைத் தொடர்ந்து, இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

டிராம் பஸ்

டிராம் பஸ்

கீழே கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வசதியாக, உயர்த்தப்பட்ட அமைப்புடன் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. சாலையின் இருபுறத்திலும் இருக்கும் தண்டவாளங்களில் இந்த பஸ் செல்லும். இதனால், சாலையில் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுடன், ஒரே நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில், சாலையில் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லலாமே தவிர, டிரக் உள்ளிட்ட இதர கனரக வாகனங்களை இயக்க முடியாது. அதேநேரத்தில், வளைவுகளிலும் இந்த பஸ்சை செலுத்துவது கடினம் என்பதுடன், சாலைகளில் உள்ள நடைமேடைகள் வழியாக செலுத்துவதும் சாத்தியமில்லை என்று சீன மீடியாக்கள் சந்தேகம் தெரிவித்தன.

புகார்கள்

புகார்கள்

இந்தநிலையில், இந்த பஸ் திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் பெறவில்லை என்றும், அரசு அனுமதியில்லாமல் சோதனை ஓட்டம் நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கருதப்படும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹூவாயிங் கையிலை என்ற நிறுவனம்தான் இந்த பஸ் திட்டத்தில் அதிக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சோதனை ஓட்டம் நிறுத்தம்

சோதனை ஓட்டம் நிறுத்தம்

இந்த நிலையில், புகார்களும், சந்தேகமும் வலுப்பெற்ற நிலையில், இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பஸ்சின் பாதுகாப்பு அம்சங்களும் சந்தேகத்திற்கு இடமானது என்றும் சீன மீடியாக்களே வரிந்து கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மோசடி திட்டம்

மோசடி திட்டம்

முதலீடுகளை பெறுவதற்காக கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி, இந்த பஸ் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர். நடைமுறையில் இந்த பஸ்சை இயக்குவது சாத்தியமே இல்லை என்று சீனாவின் பல முன்னணி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனிடையே, பஸ் திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி சுமார் 400 பேரிடம் முதலீடு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது பஸ் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டதால், முதலீடு செய்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தியாவும் ஆர்வம்

இந்தியாவும் ஆர்வம்

இந்த பஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்பெயின், மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாக இந்த பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி சாங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர்களும் தொடர்பு கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். உலக அளவில் 5 லட்சம் ப

விளக்கம்

விளக்கம்

முதல் விமானம், முதல் சுரங்க ரயில் என எந்த ஒரு புதுமையான திட்டமும் ஆரம்ப காலத்தில் சறுக்கல்களையும், சவால்களையும் சந்திப்பது வாடிக்கை. ஆனால், தற்போது அவை எவ்வாறு பயன்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் குற்றம் எதையும் செய்யவில்லை. புதுமையானதை கண்டுபிடிக்க முயற்சிப்பது தவறா? என்று சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாங்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
'Straddling bus testing stopped after allegations surface.
Story first published: Wednesday, August 10, 2016, 14:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark