இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே தெரியாம போயிருக்கும்..

பெட்ரோலுக்காக மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான மாற்று எரிபொருகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

மிகவும் காஸ்ட்லியான எரிபொருளாக பெட்ரோல் இருக்கின்றது. நாளுக்கு நாள் இதன் விலையும், டீசலின் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக இவை கூடுதல் காஸ்ட்லியானதாக மாற தொடங்கியிருக்கின்றன. இந்த விலைவாசி உயர்வில் இருந்து தப்பிக்க வைக்கும் விதமாக மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன், பயோ டீசல் மற்றும் எத்தனால் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியிருக்கின்றன.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

இதேபோல் உலக விஞ்ஞானிகள் சிலர் தங்களின் தனி திறமையைக் கொண்டு வித்தியாசமான பொருட்களில் இருந்து எரிபொருளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முற்றிலும் வித்தியாசமான எரிபொருட்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

பயன்படுத்திய நேப்கின்கள்:

கனடா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரே பயன்படுத்திய நேப்கின்கள் வாயிலாக வாகனத்தை இயங்கச் செய்யக் கூடிய எரிபொருளை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் இந்த நேப்கின்கள் பயன்பாட்டிற்கு பின்னர் குப்பைகளில் தூக்கி எறியப்படும் பயன்பாடற்ற பொருளாகக் காட்சியளிக்கின்றன.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

இவற்றில் இருந்தே பைரோலிசிஸ் (pyrolysis) முறையில் எரிபொருளை உருவாக்கியிருக்கின்றனர் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ஆக்ஸிஜன் இல்லா நிலையில் நேப்கின்களை வெப்பப்படுத்தும்போது, அதில் உள்ள மூலக் கூறுகள் உடைந்து ஓர் உயர் ஆற்றலை உருவாக்குகின்றன. இதனைக் கொண்ட வாகனங்களை இயங்கச் செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றனர் கனடா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

தற்போது கியூபெக்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், விரைவில் நேப்கினில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் பங்கை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எரிபொருளில் இருந்து என்ன மாதிரியான நாற்றம் வெளியாகும் என்பதே பலரின் சந்தேகமாக இருக்கின்றது.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

வீட்டு கழிவுகள்:

வீட்டில் மீதமாகும் உணவு பொருட்களின் கழிவுகளைக் கொண்டு வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருளை உருவாக்க முடியும் என கண்டறிந்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இந்த கண்டுபிடிப்பிற்காக அவர் உலகம் போற்றும் நபராக மாறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அவரின் இந்த ஆச்சரியமிகு கண்டுபிடிப்பு தற்போது வரை அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது கவலைக்குறியது.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

2005ம் ஆண்டிலேயே வீட்டு கழிவுகளில் இருந்து எரிபொருளை உருவாக்கும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இன்னும் அதற்கான அங்கீகாரம் பல்வேறு காரணங்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் கண்டுபிடித்திருக்கு் கேடிவி 500 எனும் அந்த எந்திரம் தோட்ட கழிவுகள், பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றில் இருந்தும் எரிபொருளை உருவாக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

இது மட்டும் விற்பனைக்கு வந்தால் பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டும் தேவையே படாத நிலை உருவாகிவிடும். இதன் காரணத்தினாலேயோ என்னமோ இன்னும் ஜெர்மன் ஆய்வாளரின் கேடிவி 500 பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது என நம்மை யோசிக்கச் செய்கின்றது.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

பழைய பயன்படுத்தப்பட்ட ஆயில்:

பழைய பயன்படுத்தப்பட்ட, அதாவது, மீன் அல்லது சிப்ஸ்கள் வறுத்தெடுக்கப்பட்ட ஆயிலைக் கொண்டு டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை இயக்க முடியும் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இதில் இருந்து வெளிவரும் மாசு கேள்விக் குறியாக இருப்பதால் இன்னும் இந்த முறை பயன்பா்ட்டிற்கு வராத நிலை தென்படுகின்றது. அதேவேலையில், டீசலைக் காட்டிலும் இவை குறைவான மாசை வெளியேற்றும் என்ற கருத்துக்கள் பரவலாக கூறப்பட்டு வருகின்றது. அதேவேலையில், இந்த உண்ண உகந்த ஆயிலுக்கு தட்டுப்பாடு அதிகம் என்பதால் அது நடைமுறைக்கு வராத நிலை நிலவுகின்றது.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

காபி:

காபியை குடிக்கத்தானே பயன்படுத்துவாங்க, இதை வச்சு காரைகூட ஓட்ட முடியுமா என சந்தேகத்துடன் நீங்கள் கேட்கலாம். உங்களின் இந்த சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் என்கிற ஓர் கண்டுபிடிப்பாளர், காபி கொட்டைகளைக் கொண்டு காரை இயக்கி சாதனைப் படைத்திருக்கின்றார்.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

காபி கொட்டையில் அதி வேகமாக காரை இயக்கியதற்காக அவர் கின்னஸ் உலக சாதனையையே படைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மணிக்கு 65.6 மைல் வேகத்தை அவர் ஓட்டிய கார் எட்டியதனால் இந்த விருது அவருக்கு கிடைத்தது. ஆனால், ஏனோ பெட்ரோல் மாற்றான இந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வரவே இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

காபி கொட்டை எப்படி காரை இயங்க செய்யும்? இதோ உங்கள் கேள்விக்கான பதில், காபி கொட்டையில் இருந்து கிடைக்கும் கழிவு பொருளை எரிப்பதனால் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு கிடைக்கும். இதில், ஹைட்ரஜனையே கார் எஞ்ஜினை இயக்கும் பொருளாக பயன்படுத்தி மார்ட்டின் காரை இயக்கியிருக்கின்றார்.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

பீர்:

பீர் அடிச்சா போதை வரும் ஓகே, வண்டி ஓடுமா?, ஓடும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. பீரில் அதிகம் எத்தனால் மூலக்கூறுகள் உள்ளன. எத்தனாலின் முக்கிய அம்சமே எரிபொருளாக செயல்படுவதுதான், ஆகையால், பீர் எப்படி வாகனங்களை இயங்கச் செய்யும் என்கிற பலருக்கு இருக்காது. எத்தனால் சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படுகின்ற காரணத்தினால், விரைவில், இதில் இயங்கும் வாகனங்கள் உலகில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் பெட்ரோல், எத்தனால் அல்லது பெட்ரோல் - எத்தனால் மிக்ஸ் செய்யப்பட்ட எரிபொருளில் (ஃப்யூவல் ஃப்ளெக்ஸி) இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

சோலார் பெயிண்ட்:

ஸ்வான்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியதே சோலார் பெயிண்டுகள். அடுத்த தலைமுறை சோலார் எனர்ஜியாக பார்க்கப்படுகின்றது. ஓர் சோலார் பேனல் எப்படி வேலை செய்யுமோ அதை போலவே இந்த சோலார் பெயிண்டும் வேலை செய்யும். சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தை சேமித்து, அதன் வாயிலாக வாகனத்தை இயங்கச் செய்யும். இந்த சோலார் பெயிண்ட் சோதனையை ஏற்கனவே வெற்றிகரமாக ஸ்வான்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செய்து முடித்திருக்கின்றனர். சோலார் பேனல் கார்களைப் போல் இதுவும் வெகுவிரைவில் உற்பத்திக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எரிபொருள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருந்தா பெட்ரோல் இருந்த தடமே இல்லாம போயிருக்கும்... துரதரிஷ்ட வசமா லேப விட்டுகூட வெளிவரல!

மர கழிவுகள்:

மர கழிவுகளைக் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும் என நிரூபித்திருக்கின்றார் பின்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஜூஹா சிபிலா. இவர் மரக் கழிவுகளைக் கொண்டு கேஸை தயாரிக்கும் ஓர் கருவியையேக் கண்டுபிடித்திருக்கின்றார். இந்த கேஸ் வழக்கமான வாகனங்களைக்கூட இயக்க முடியும். குறிப்பாக, எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் இயக்க முடியும். 79 கிலோ மரக் கழிவுகளைக் கொண்டு 125 கிமீ தூரம் வரை அவர் பயணித்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்த நேரத்தில் கார் மணிக்கு 140 கிமீ வேகம் பயணித்ததாக அவர் தெரிவித்தார். ஆகையால், இது மிக சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 13, 2022, 13:36 [IST]
English summary
Strange petrol alternatives list and details
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+