நாமகூட கரெக்ட் டைமுக்கு ரயிலை பிடிக்க மாட்டாம்... தினமும் தவறாமல் ரயிலில் சென்று வரும் நாயின் வீடியோ!
லோக்கல் ரயில்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துகூட பார்க்க முடியாது. அந்தளவிற்கு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக புறநகர் ரயில்கள் மாறி உள்ளன. தினசரி வேலைக்கு செல்வோரின் பயணத்தில் முக்கிய பங்கினை இந்த ரயில்கள் வகிக்கின்றன. சென்னையில் மட்டுமல்ல நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் லோக்கல் டிரெயின்களின் பங்களிப்பு அளப்பறியாததாகக் காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் புறநகர் ரயில்கள் மிகவும் பிரபலமானதாக உள்ளது. மும்பை நகரத்தின் சாலைகள் மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்டது என்பதால் அந்நகரத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் லோக்கல் ரயிலையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால், அங்கு ரயில்கள் உயிர்நாடியாக உள்ளன.

கற்பனைக்கே எட்டாத அளவிற்கு மும்பை நகரவாசிகள் ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். நம்ம ஊரில் மக்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தொங்கிக் கொண்டு செல்வதைப் போல மும்பையில் ரயலில் மக்கள் தொங்கிய வண்ணம் சென்றுக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் பெட்டிகூட கூட்ட நெரிசலுடனேயே காணப்படும்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் மும்பை வாசிகளைப் போலவே நாய் ஒன்று தினசரி ரயிலைப் பயன்படுத்தி வருவது தெரிய வந்திருக்கின்றது. என்னது நாய் தினமும் ரயிலை பயன்படுத்தி வருதா?.. ஆமாங்க, தினமும் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் அந்த நாய் மாலை ஆனதும் அதே ரயில் நிலையத்திற்கு வேறொரு ரயில் வாயிலாக திரும்பி வரும்.
நாயின் இந்த தினசரி பயணத்தைக் காட்டும் வீடியோவே தற்போது வெளியாகி உள்ளது. மும்பையில் போரிவலி நிறுத்தத்தில் ஏறும் அந்த நாய் அந்தேரி ரயில் நிலையத்தில் இறங்கும். பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் போரிவலியை அது வந்தடையும். அது ரயிலில் பயணிக்கும் யாரையும், எந்த விதமான தொந்தரவையும் செய்யாது என கூறப்படுகின்றது.
மேலும், அதே ரயிலில் தினமும் பயணிப்பவர்களின் பிரியமான நாயாகவும் அது தற்போது மாறி இருக்கின்றது. இந்த ரயில் பயணம் அந்த நாய்க்கு ஆபத்தானதுதான். இருந்தும் பலர் அதன் செயலைப் பார்த்து ரசிக்கத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, இணையத்தில் நாய் ரயில் பயணம் குறித்து வெளியாகி இருக்கும் வீடியோ பல லட்சக் கணக்கோரின் மனதைக் கவர்ந்திருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி 8.3 லட்சம் பார்வைகளை அது பெற்றிருக்கின்றது. மேலும், லைக்ஸ்களையும் குவித்திருக்கின்றது. மேலும், வீடியோவை பார்த்த ஓர் நபர் "இந்த உலகம் அனைவருக்குமானது. அது சுதந்திரமாக வலம் வருவதை பார்க்கையில் எனக்கு மட்டற்று மகிழ்ச்சி" என்று கூறி உள்ளார். மற்றொருவர், "இவன் ஒரு ஸ்மார்ட் பாய்.
இவன் தினமும் இரவில் அந்தேரி ரயில் நிலையத்தில் ரயில் ஏறும்போது நான் பார்ப்பேன்" என்று கூறி உள்ளார். இன்னொருவர் ஒரு படி மேலே சென்று, இந்த நாயின் செயலைப் பார்ப்பதற்கு என்றே, தான் போரிவலி ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக கூறி இருக்கின்றார். ஆகையால் இப்போது நெட்டிசன்களின் மனம் கவர்ந்த நாயாக அது மாறி இருக்கின்றது.
நாய்கள் இதுபோன்ற விநோத செயலில் ஈடுபடுவது புதிதல்ல. கடந்த காலத்தில் நாய் ஒன்று, ரயிலை தொங்கியபடி செல்பவர்களை உள்ளோ போக சொல்லும்படி, அவர்களை மட்டும் குறி பார்த்தும் குறைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதுதவிர டிராஃபிக் ரூலை ஃபாலோ செய்யும் நாய், பேருந்தில் நாய் பயணித்தல் போன்ற வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிக்கெட்டின் விலை குறைவு, உரிய நேரத்தில் சென்று சேர முடியும் என்கிற காரணத்தினால் பலர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஹாயாக ரயில் நாய் பயணிக்கும் வீடியோ வெளியாகி காட்டுத் தீயை போல் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications