ஆடி ஸ்போர்ட்ஸ் காரில் வந்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!

Written By:

இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் குறித்த செய்தி சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் ஆடி ஸ்போர்ட்ஸ் காரில் பிச்சை எடுக்க வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், இந்த வீடியோ வெளியானதிலிருந்து அவர் சந்தித்து வரும் பிரச்னைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இங்கிலாந்து கூத்து

இங்கிலாந்து கூத்து

இங்கிலாந்தை சேர்ந்த மேஸ்யூ பிரின்டன்(35) என்பவர் அங்குள்ள நியூகுவே பகுதியின் பேங்க் ஸ்ட்ரீட் பகுதியில் தினந்தோறும் பிச்சை எடுத்து வருகிறார். அவர் தனது வளர்ப்பு நாயுடன் பிச்சை எடுத்துவிட்டு மாலையில், அருகில் நிற்கும் அவரது ஆடி காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகியது.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

பிச்சை எடுப்பதற்காக பிரின்டன் ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் காரில் வந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த பதிவுக்கு கீழே பலரும் பிரின்டனுக்கு உதவி செய்தது தவறு என்றும், அவரது செயல் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிஃப்ட்

கிஃப்ட்

இதுகுறித்து பிரின்டன் கூறுகையில், ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் எனது பாட்டி எனக்கு கொடுத்தது. என்னிடம் இன்டர்நெட் கிடையாது. எனவே, சமூக வளத்தில் வெளியான வீடியோ பற்றி தெரியாது. ஆனால், அந்த வீடியோ வெளியானதிலிருந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறேன்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

வீடியோ வெளியானதலிருந்து பலரும் கொலை மிரட்டல் விடுத்து வருவதகாக பிரின்டன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வீடியோ வெளியானதிலிருந்து அந்த காரும் தொலைந்து போய் விட்டதாகவும் தெரிவிக்கிறார்.

போலீஸ் அறிவுரை

போலீஸ் அறிவுரை

கொலை மிரட்டல் வருவதையடுத்து, பிரின்டனை பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 சொந்த வீடு

சொந்த வீடு

பிரின்டனுக்கு அதே பகுதியில் சொந்த வீடும் உள்ளதாம். இதுதான் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கை, கால் நல்லாத்தானே இருக்கு, ஏன் பிச்சை எடுக்குற என்று நம்மூரில் சொல்வது போல பலரும் பிரின்டனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை எண்ணம்

தற்கொலை எண்ணம்

கொலை மிரட்டல்கள் மற்றும் வசை பேச்சுக்கள் மிகவும் நோகடித்துள்ளதாகவும், சில சமயம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுவதாகவும் கோடீஸ்வர பிச்சைக்காரர் பிரின்டன் தெரிவித்துள்ளார்.

கார் மீது தாக்குதல்

கார் மீது தாக்குதல்

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, பிரின்டனின் காரை யாரோ எடுத்துச் சென்று முன்புற கண்ணாடியை பலமாக தாக்கி உடைத்து போட்டு விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர் மீதுள்ள கோபத்தில் மர்ம நபர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதுசரி....

அதுசரி....

அதுசரி, அந்த ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் காரோட விலை எவ்வளவுன்னு கேட்கிறீங்களா? 55,000 பவுன்ட்டுகள் விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதே கார் இந்தியாவில் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Street beggar packs up for the day and drives off in £50,000 Audi TT sports car.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark