இனி ரோட்டு கடைக்காரங்கள ஏழைன்னு மட்டும் நெனச்சர கூடாது! இந்த வீடியோ இல்லன்னா யாரும் இத நம்பியிருக்க மாட்டாங்க!
இந்த 2024ம் ஆண்டிலும் கூட கார்கள் என்பது பலருக்கும் கனவாகதான் இருந்து வருகிறது. கார்களை வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் பலரால் இதை செய்ய முடிவதில்லை. எனவே இரு சக்கர வாகனங்களிலோ அல்லது பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களிலோ பயணம் செய்ய வேண்டிய சூழலில்தான் பலரும் உள்ளனர். நிலைமை இப்படி இருக்கும் சூழலில், தற்போது வெளியாகியுள்ள வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த வைரல் வீடியோவில், ஹரியானா மாநிலம் குர்கான் (Gurgaon) நகரில், சாலையோரத்தில் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவருக்கும், இந்த வீடியோவை எடுத்தவருக்கும் இடையேயான உரையாடலை நம்மால் கேட்க முடிகிறது. அத்துடன் கியா செல்டோஸ் (Kia Seltos) கார் ஒன்றையும் இந்த வைரல் வீடியோவில் நாம் காணலாம்.

இந்த வீடியோவை எடுத்த நபர், ஆரம்பத்தில் கியா செல்டோஸ் காரை காட்டி விட்டு, பின்பு பழ வியாபாரியிடம் செல்கிறார். பின்னர் கியா செல்டோஸ் காரை பற்றி அவர், பழ வியாபாரியிடம் கேட்கிறார். இதற்கு பழ வியாபாரி சரியாக பதில் சொல்லவில்லை. நீங்கள் ஏன் அதை தெரிந்து கொள்ள வேண்டும்? என்கிற அர்த்தத்தில் அவர் பதில் வழங்கினார்.
இருப்பினும் வீடியோவை எடுத்த நபர் விடாமல், இதை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருக்கிறது என கூறுகிறார். இதனால் மனம் இறங்கிய பழ வியாபாரி, அந்த கியா செல்டோஸ் கார் தனது சகோதரருக்கு சொந்தமானது என பதில் அளிக்கிறார். இதை கேட்டதும், வீடியோவை எடுத்த நபர் ஆச்சரியமடைகிறார்.

ஏனெனில் கியா செல்டோஸ் காருக்கு சொந்தக்காரரான அவரது சகோதரரும், அதே இடத்தில் பழ வியாபாரம்தான் செய்து கொண்டுள்ளார். பழ வியாபாரி கூறிய இந்த விஷயத்தை கேட்டவுடன், சாலையோரத்தில் பழங்களை விற்பனை செய்து கொண்டு, கார்களை எல்லாம் வாங்குகிறீர்கள். எனவே நானும் இங்கே கடை அமைத்து பழ வியாபாரம் செய்து கொள்ளட்டுமா? என வீடியோவை எடுத்த நபர் வேடிக்கையாக பேசுகிறார்.
அத்துடன் இந்த வீடியோ நிறைவடைந்து விடுகிறது. பழ வியாபாரி ஒருவர் கியா செல்டோஸ் காரை வைத்திருக்கும் விஷயம் இந்த வைரல் வீடியோ மூலமாக நமக்கு தெரியவந்துள்ளது. இது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான். எனவே நெட்டிசன்கள் பலரும், இந்த விஷயத்தை ஆச்சரியமாக பேச தொடங்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பலவிதமான கமெண்ட்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. ''உண்மையில் மாத சம்பளம் வாங்குபவர்களை விட, இது போன்ற வியாபாரிகள் நிறைய சம்பாதிக்கின்றனர்'' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு நபரோ, ''நாங்கள் பால் வாங்கும் நபரிடம் மஹிந்திரா தார் (Mahindra Thar) உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் ஒரு சிலர் நன்றாக சம்பாதிக்கவே செய்கின்றனர். இதை பார்த்து ஆச்சரியப்படும் அதே நேரத்தில், அவர்களின் உழைப்பையும் நாம் மதிக்க வேண்டும். பொதுவாக சாலையோரங்களில் பழக்கடை, ஹோட்டல் போன்றவற்றை நடத்துபவர்கள் அதிகாலையிலேயே எழுந்து, நாள் முழுக்க உழைக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது வைரலாக பரவி வரும் வைரல் வீடியோவின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள பழ வியாபாரி வைத்துள்ள கியா செல்டோஸ் கார் சற்று விலை உயர்ந்ததுதான். இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற கார்களுடன், கியா செல்டோஸ் போட்டியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப விலையே 10.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 20.45 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை பழ வியாபாரி வைத்துள்ளதால்தான், இந்த வீடியோ வைரலாக பரவி கொண்டுள்ளது. உண்மையில் இந்த வீடியோ மட்டும் இல்லையென்றால், சாலையோரங்களில் பழ வியாபாரம் செய்பவர்களிடம் கூட, கியா செல்டோஸ் போன்ற கார்கள் எல்லாம் இருக்கும் என்ற விஷயத்தை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications








