Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சம்மருக்கு ஏற்றது... ஸ்டட்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை தலைக்கவசம் அறிமுகம்... என்ன விலை தெரியுமா?
ஸ்டட்ஸ் நிறுவனம் குறைந்த விலை ஹெல்மெட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமுக ஹெல்மெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்புகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் ஓர் புதுமுக தலைக்கவசத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேட் டி3 டெகோர் எனும் புதிய ஹெல்மெட்டையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உயிர்காக்கும் கவசத்திற்குரூ. 1,195 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இந்த ஹெல்மெட் இரு விதமான பூச்சு தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, குளாஸ் மற்றும் மேட் என இரு விதமான வண்ண பூச்சுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அந்தவகையில், ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் ஹெல்மெட் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது.

வெள்ளை என்2, கருப்பு என்4, மேட் கருப்பு என்1, மேட் கருப்பு என்2, மேட் கருப்பு என்4 மற்றும் மேட் கருப்பு என்12 என கருப்பிலேயே பல வித தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிறங்கள் அனைத்தும் புற ஊதா எதிர்ப்பு திறன் கொண்ட ( UV resistant paint) வண்ணப்பூச்சுகள் ஆகும்.

இந்த திறனானது சம்மர் காலத்தில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியால் ஏற்பட பக்க விளைவுகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். எனவேதான் இதனை சம்மருக்கு ஏற்ற ஹெல்மெட் என கூறுகின்றனர். இந்த வசதி மட்டுமின்றி ஒழுங்குப்படுத்தப்பட்ட இபிஎஸ் அடர்த்தி, அலர்ஜியை ஏற்படுத்தாத உட்பகுதி துணி, விரைவில் கழட்டக் கூடிய ஸ்டிராப்புகள் என கூடுதல் சில வசிகளையும் இந்த ஹெல்மெட்டில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தொடர்ந்து, ஹெமெட்டின் உறுதித் தன்மைக்காக உயர் தரத்திலான தெர்மோபிளாஸ்டிக் கூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது எதிர்பாராத அசம்பாவிதங்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை தலைப் பகுதிக்கு வழங்கும். எனவேதான் கூடுதல் பாதுகாப்பான பயணத்தை இதன் மூலம் பெற முடியும்.

யுவி தரத்திலான பெயிண்ட் என்பதால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்காதோ என எண்ண வேண்டும். வழக்கமான பெயிண்டைப் போலவே இந்த வண்ணப்பூச்சும் கவர்ச்சிக்கு குறைவின்றி நிறுவனம் உத்தரவாதம் வழங்குகின்றது.

தொடர்ந்து, அனைத்து விதமான தலை அளவு கொண்டவர்களும் இந்த ஹெல்மெட்டைப் பயன்படுத்தும் நோக்கில் மீடியம் (570 mm), பெரியது (580 mm) மற்றும் கூடுதல் பெரியது (600 mm) என மூன்று விதமான அளவுகளில் இதனை தலைக் கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 1,195 என்ற விலையையே ஸ்டட்ஸ் நிர்ணயித்துள்ளது.

இது இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு வசதிகள் ஹெல்மெட்டை அணிந்துக் கொண்டு நீண்ட தூரம் பயணித்தாலும் சிறிதளவும் எரிச்சலான அனுபவத்தை ஏற்படுத்தாது என தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பு: முதல் இரு படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...