Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எந்த காலத்திலும் இதன் புதுபொலிவு மங்காது... ஸ்டட்ஸ் நிஞ்ஜா எலைட் சூப்பர் டி4 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்...
எந்த காலத்திலும் புது பொலிவை இழக்காத வகையிலான பெயிண்ட் பூச்சுக் கொண்ட புதுமுக ஹெல்மெட்டை ஸ்டட்ஸ் நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் இந்தியாவில் தொடர்ச்சியாக புதுமுக தலைக் கவசங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், வருடத்தின் தொடக்கத்தில் புதிய ஜேட் டி3 டெக்கோர் எனும் ஹெல்மெட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த ஹெல்மெட்டில் புற ஊதா எதிர்ப்பு வண்ணப்பூச்சை (UV-resistant paint) நிறுவனம் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று முன்னதாக வருடத்தின் இறுதியில் தண்டர் டி7, இதற்கு முன்னதாக சியூபி டி5 டெகோர் மற்றும் தண்டர் டி6 ஆகிய ஹெல்மெட்டுகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் ஓர் புதுமுக ஹெல்மெட்டை நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நிஞ்ஜா எலைட் சூப்பர் டி4 எனும் பெயர் கொண்ட ஹெல்மெட்டை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் விலை ரூ. 1,595 ஆகும்.

இந்த ஹெல்மெட்டை வழக்கமான க்ளாஸ் பெயிண்ட் மற்றும் மேட் ஆகிய இருவிதமான பெயிண்ட் பூச்சில் விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் சுமார் 10 விதமான நிறங்களில் ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

கருப்பு என்2, கருப்பு என்4, கருப்பு, என்5, கருப்பு என்10, மேட் கருப்பு என்1, மேட் கருப்பு என்2, மேட் கருப்பு என்3, மேட் கருப்பு என்4, மேட் கருப்பு என்5 மற்றும் மேட் கருப்பு என்10 இந்த நிறங்களிலேயே புதிய ஸ்டட்ஸ் நிஞ்ஜா எலைட் சூப்பர் டி4 டெகோர் ஹெல்மெட் விற்பனைக்கு இருக்கிறது.

இந்த நிறங்கள் அனைத்தும் புற ஊதா எதிர்ப்பு திறன் கொண்டவையாகும். இதுதவிர, காற்றை கிழிக்கக் கூடிய அமைப்பு, மிக இலகான எடை, அலர்ஜியை ஏற்படுத்தாத லைனர்கள், கழுத்து மற்றும் தலை பகுதிகளுக்கு எளிதில் காற்று செல்லும் வகையில் வெண்டுகள் உள்ளிட்ட வசதிகள் இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டட்ஸ் நிஞ்சா எலைட் சூப்பர் டி4 டெகோர் ஓர் முழுமுக ஃப்ளிப் ஹெல்மெட் ஆகும். இந்த ஹெல்மெட்டிற்கு வழங்கப்பட்டிருக்கும் புற ஊதா எதிர்ப்பு திறனானது, அதிக வெயிலின் காரணமாக ஏற்படும் நிற இழப்பை தவிர்க்க உதவும். நிறத்தைப் போல பன்முக அளவு தேர்விலும் இந்த ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கும்.

எக்ஸ்ட்ரா ஸ்மால் 540 மிமீ, ஸ்மால் 560 மிமீ, மீடியம் 570 மிமீ, லார்ஜ் 580 மிமீ, எக்ஸ்ட்ரா லார்ஜ் 600 மிமீ ஆகிய இந்த அளவுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதன் கூட்டின் அதிக உறுதித் தன்மைக்காக தெர்மோ பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதில் பாதுகாப்பு திறன் சற்று கூடுதலே.