ஸ்டட்ஸ் நிறுவனத்தின் சூப்பரான ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா?

பிரபல ஸ்டட்ஸ் ஹெல்மெட் நிறுவனம் புதுமுக தலைக்கவசம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் சூப்பரான ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா?

ஹெல்மெட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல ஸ்டட்ஸ் நிறுவனம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான புதுமுக தலைக்கவசம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சியுபி டி4 டெகர் (Cub D4 Decor) எனும் ஹெல்மெட்டையே அது அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் சூப்பரான ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா?

இந்த புதிய ஹெல்மெட் பிறவற்றைக் காட்டிலும் அதிக பாதுகாப்பை வழங்கும் உத்தரவாதத்துடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக புதிய தெர்மாபிளாஸ்டிக் பொறியியல் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இதில் பாதுகாப்பு திறன் அதிகரித்துள்ளது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் சூப்பரான ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா?

இத்துடன், ஹைபோஅலெர்ஜெனிக் லைனர்களும் இந்த ஹெல்மெட்டில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், இந்த ஹெல்மெட்டை அணிவோர்க்கு ஒவ்வாமை என்பதே இருக்காது. குறிப்பாக, மூச்சுத் திணறல், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற அசௌகரியமான உணர்வுகள் ஏற்படாது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் சூப்பரான ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா?

இதுபோன்ற சிறப்பு வசதிகள் மட்டுமின்றி பன்முக நிற தேர்வுகளையும் ஸ்டட்ஸ் இதில் அறிமுகப்படுத்தியுள்ளது. இளஞ்சிவப்பு, சிவப்பு, மேட் நீலம், மேட் ரெட், மேட் கன் கிரே மற்றும் மேட் நியான் ஆகிய நிறத் தேர்வுகளில் சியுபி டி4 டெகர் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் சூப்பரான ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா?

இத்துடன், மூன்று விதமான அளவு தேர்விலும் இது கிடைக்கின்றது. இந்த மூன்று அளவுகளே அனைத்து விதமான தலையமைப்பைக் கொண்டவர்களுக்கும் போதுமானதாக இருக்கின்றது. மேலும், அரை முக வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஹெல்மெட்டை அணிந்தால் முழு முகத்தையும் கவர் செய்கின்ற அனுபவம் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
STUDDS Launches The Cub D4 Décor Helmet. Read In Tamil.
Story first published: Monday, December 21, 2020, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X