காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் புதுமுக ஹெல்மெட்டான அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

உலக புகழ்பெற்ற அக்ஸசெரீஸ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ், இந்தியாவில் மீண்டும் ஓர் புதுமுக ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியது முதல் புதுமுக ஹெல்மெட்டுகளின் அணிவகுப்பால் (அறிமுகம்) இந்தியர்களை அதகளப்படுத்தி வருகின்றது ஸ்டட்ஸ் நிறுவனம்.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில், கடந்த மாதத்தின் இறுதியில் நிஞ்சா எலைட் சூப்பர் டி5 டெகோர் எனும் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கு முன்னதாக அதே மார்ச் மாதத்தில் குரோம் டி5 டெகோர் எனும் ஹெல்மெட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான 1ம் தேதி அன்று ஓர் புதுமுக ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியது. இந்த ஹெல்மெட் தற்போது விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அர்பன் சூப்பர் டி1 டெகோர் திறந்த முக தலைக்கவசத்தையே (Open-Face Helmet) நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த ஹெல்மெட்டின் வண்ணப்பூச்சுக்காக புற ஊதா எதிர்ப்பு தன்மைக் கொண்ட பெயிண்டை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. ஆகையால், இந்த ஹெல்மெட் அவ்வளவு எளிதில் புதுப் பொலிவை இழக்காது. மேலும், சூரிய ஒளியால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் இந்த புற ஊதா எதிர்ப்பு பெயிண்ட் தடுக்கும்.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதுதவிர, இது ஓர் திறந்த வகை முகக் கவசம் என்பதால் இதில் காற்றோட்டம் மிக அதிகமாக இருக்கும். இதுதவிர இந்த ஹெல்மெட்டில் ஹைபோ அலர்ஜெனிக் லைனர்கள், விரைவில் கழட்டக்கூடிய தாடை பெல்ட்டுகள், காற்று நுழைவுக்கான கூடுதல் ஏர் வெண்ட்கள் மற்றும் பல சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன், தலைக்கவசத்தின் மேற்-கூட்டினை அதிக பாதுகாப்பானதாக வழங்க உயர் தாக்க தரம் கொண்ட தெர்மோபிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட ஹெல்மெட்டிற்கு ரூ. 1,220 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

புதிய அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் மேட் மற்றும் குளோஸ் ஃபினிஷிங்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 9 விதமான நிற தேர்வுகளை ஸ்டட்ஸ் வழங்குகின்றது.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அவை, வெள்ளை என்2, சிவப்பு என் 6, கன் கிரே என்6, மேட் கருப்பு என்2, மேட் கருப்பு என்5, மாட் சிவப்பு என்6, மாட் கன் கிரே என்6, மாட் நீலம் என்6 மற்றும் மாட் இளஞ்சிப்பு என்6 ஆகியவையே ஆகும். ஏற்கனவே கூறியதுபடி, இவையனைத்துமே புற ஊதா எதிர்ப்பு திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

நிற தேர்வைப் போல அளவு தேர்விலும் பன்முக ஆப்ஷனை இந்த ஹெல்மெட் வழங்குகின்றது. இதன்படி, கூடுதல் சிறியது (Extra small) 540மிமீ, சிறியது (Small) 560மிமீ, மீடியம் (Medium) 570மிமீ, பெரியது (Large) 580மிமீ மற்றும் கூடுதல் பெரியது (Extra Large) 600மிமீ ஆகிய அளவு தேர்வுகளில் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கும்.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து, ஹெல்மட்டின் உட்பகுதியில் உயர்தர துணிகள் திணிக்கப்பட்டுள்ளன. ஆகையால், நீண்ட தூர பயணத்தின்போது இந்த ஹெல்மெட்டை அணிந்து சென்றாலும்கூட சிறியளவில்கூட எரிச்சலோ, அசௌகரியமோ ஏற்படாது. மாறாக, எப்போதுமே ஹெல்மெட்டை அணிந்திருக்க இது தூண்டும்.

காத்து நல்லா வரும்! ஸ்டட்ஸ் அர்பன் சூப்பர் டி1 டெகோர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதுமாதிரியான நேரங்களில் வியர்வை வராமல் இருக்கவே ஹெல்மெட்டுகளில் காற்று செல்வதற்கான வழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஒவ்வாமை அல்லது எரிச்சல் ஏற்படுத்தாத வண்ணம் இருக்க ஹைபோஅலர்ஜெனிக் லைனர் உட்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 6, 2021, 15:33 [IST]
English summary
Studds Launches Urban Super D1 Decor Open-Face Helmet In India. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+