பாவம்யா... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

700 கிலோ மீட்டர் பயணித்து வந்த மாணவனுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்தே பயணங்களை மேற்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி, ரயில் என பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

அத்துடன் தேவையில்லாமல் இயக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் பயணங்களை மேற்கொள்வதில் தற்போதைய நிலைமை அந்தளவிற்கு மோசமாக இல்லை. எனினும் பல்வேறு சவால்கள் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

பேருந்து, ரயில் உள்ளிட்டவை இயங்கினாலும், இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுவதே இல்லை. அப்படியே இயக்கப்பட்டாலும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் ஓடுகின்றன. எனவே தொலை தூர பயணங்களை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

பொது போக்குவரத்து இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாத சூழலில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், நேற்று முன் தினம் (ஞாயிறு) நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

ஆனால் 24 மணி நேரங்களுக்கும் மேலாக இடைவிடாமல் பயணம் செய்து, 700 கிலோ மீட்டர்கள் தொலைவை கடந்து, தேர்வு மையத்திற்கு வந்தும் ஒரு மாணவரால் நீட் தேர்வை எழுத முடியாமல் போயுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் தாமதமான சூழலில், அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்காமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் யாதவ். 19 வயதாகும் இவர், நடப்பாண்டு நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கொல்கத்தா நகரின் சால்ட் லேக் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், இவர் நீட் தேர்வை எழுத வேண்டியிருந்தது. இதற்காக தனது சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு வந்தும், 10 நிமிட தாமதம் காரணமாக அவருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதுகுறித்து சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், ''சனிக்கிழமை காலை 8 மணியளவில் பீகாரில் இருந்து பேருந்தில் புறப்பட்டேன். ஆனால் முஸாபர்ஃபூர் மற்றும் பாட்னாவுக்கு இடையே மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதன் காரணமாக நான் சுமார் 6 மணி நேரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதன்பின் இரவு 9 மணியளவில் பாட்னாவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (ஞாயிறு) மதியம் 1 மணியளவில் கொல்கத்தா சென்றடைந்தேன். பிறகு கேப் ஒன்றை பிடித்து, மதியம் 1.40 மணியளவில் தேர்வு மையத்தை சென்றடைந்தேன்'' என்றார். பேருந்து, கேப் என சிரமப்பட்டு பயணம் செய்தும், 10 நிமிட தாமதத்தால் சந்தோஷ் குமார் யாதவால் தேர்வை எழுத முடியாமல் போயுள்ளது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

அதாவது தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே, அதாவது மதியம் 1.30 மணிக்குள்ளாகவே தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சந்தோஷ் குமார் யாதவ் 10 நிமிடம் தாமதமாக, 1.40 மணிக்குதான் வந்தடைந்தார்.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதன் காரணமாக அவர் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், ''பாதுகாவலரிடம் வேண்டுகோள் விடுத்தேன். பள்ளி முதல்வரை சென்று சந்தித்தேன். ஆனால் யாரும் என்னை அனுமதிக்கவில்லை'' என்றார். சிரமப்பட்டு வந்தும் கூட நீட் எழுத முடியாததால், தேர்வு மையத்திற்கு வெளியே அவர் சோகமாக நின்று கொண்டிருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இவர் தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு வர முடியாமல் போனதற்கு போக்குவரத்து நெரிசலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இருந்தாலும் 10 நிமிட தாமதத்திற்காக அதிகாரிகள் அனுமதி மறுத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சந்தோஷ் குமார் யாதவ் ஒரு ஆண்டை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாவம்... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதுகுறித்து சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், ''நான் ஒரு முக்கியமான ஆண்டை இழந்து விட்டேன். என்ன நடக்கிறது? என்று பார்க்கலாம். அடுத்த ஆண்டு தேர்வுக்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார். தேர்வு எழுத அனுமதி கிடைக்காத காரணத்தால், சந்தோஷ் குமார் யாதவ் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இதுகுறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Student Covers 700 KM, Travels 24 Hours Non-stop, Yet Misses NEET Exam By 10 Mins - Details. Read in Tamil
Story first published: Tuesday, September 15, 2020, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X