Anti Sleep Alarm-ஐ கண்டுபிடித்த மாணவர்கள்.. இந்த கருவியை கண்டுபிடிச்சதுக்காக நாடே அவங்கள கொண்டாடிட்டு இருக்கு!
இந்தூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தூக்கத்திற்கு எதிராக செயல்படும் கருவியை (Anti Sleep Alarm) உருவாக்கி அசத்தி இருக்கின்றனர். இந்த கருவியைக் கண்டுபிடித்ததற்காக அந்த மாணவர்கள் அனைவரையும் பலர் பாராட்டத் தொடங்கி இருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
வாகன விபத்து, உலகளவில் தலை வலியை ஏற்படுத்தக் கூடிய ஓர் வார்த்தையாக இது இருக்கின்றது. அதிலும், இந்தியாவிற்கு சொல்லவா வேண்டும். நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நாள்தோறும் விபத்துகள் பற்றிய செய்திகள் அதிகளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. உதாரணமாக, தவறான பாதையில் வாகனங்களை இயக்குதல், மது போதையில் இருக்கும் வாகனங்களை ஓட்டுதல், அதிக வேகத்தில் சீறி பாய்தல் மற்றும் செல்போன் பேசிய வாகனத்தை இயக்குதல் என இதுபோன்று பல்வேறு காரணங்களை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கூறலாம்.
இதேபோல், வாகன ஓட்டிகளின் கவனக் குறைவு மற்றும் அலட்சிய போக்காலும் பல்வேறு விபத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக தூக்க கலக்கத்துடன் வாகனத்தை ஓட்டுவதை சொல்லலாம். தூக்க கலக்கத்துடன் ஓட்டப்பட்ட வாகனங்களால் பெரும் விபத்துகள் அரங்கேறி இருக்கின்றன. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டே புதிய கருவியை, மத்தியபிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் உருவாக்கி இருக்கின்றனர்.
#WATCH | Indore, Madhya Pradesh: Students made anti-sleep alarms to avoid road accidents. pic.twitter.com/XbrUGvqerf
— ANI (@ANI) April 20, 2023
அவர்கள் கண்டுபிடித்திருக்கும் கருவி டிரைவரை தூங்க விடாது. குறிப்பாக தூக்கத்திற்கு எதிராக செயல்படும். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், வாகன ஓட்டி, வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே தூங்கி வழியத் தொடங்கினால், மாணவர்கள் உருவாக்கி இருக்கும் அந்த கருவி, தூக்கத்தைக் கண்டறித்து எச்சரிக்கை வழங்கும்.
இதன் வாயிலாக விபத்தை தவிர்த்துவிட முடியும். எச்சரிக்கை வழங்கியபோதும் டிரைவர் தூக்கத்தில் இருந்து எழும்பாமல், தொடர்ச்சியாக கண்களை மூடிக் கொண்டே இருந்தால், அடுத்த கட்டமாக வாகனத்தின் இயக்கத்தை நிறுத்தும். அதாவது, தானாகவே வாகனத்தின் பிரேக்கை அந்த கருவி செயல்படுத்தும். இத்தகைய சூப்பரான கருவியையே இந்தூரைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கி அசத்தி இருக்கின்றனர்.
டிரைவர்கள் தன்னை அறியாமல் கலைப்பில் தூங்கும் போது இந்த கருவி பெரும் உதவியாக இருக்கும். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும் டிரைவர்கள் சிலர் தன்னை அறியாமலேயே தூங்கிவிடுகின்றனர். இந்த மாதிரியான சூழல் மிக பெரிய விபத்துகளுக்கு வழி வகுக்கும். இதனைத் தடுக்கும் பொருட்டே, தூக்கத்தைக் கண்டறிந்து அது பற்றிய எச்சரிக்கையை வழங்கும் கருவியை மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு சமீபத்தில் ஹோஷங்கபாத் மாவட்டத்தில் அரங்கேறிய ஓர் பேருந்து விபத்து சம்பவமே காரணமாக உள்ளது. பேருந்து டிரைவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே தூங்கிவிட்டதால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கின்றது. இந்த துயர சம்பவமே அவர்களை தூக்கத்திற்கு எதிரான கருவியைக் கண்டுபிடிக்கச் செய்திருக்கின்றது.
அவர்கள் கண்டுபிடித்திருக்கும் கருவி, தொடர்ச்சியாக டிரைவரின் கண்களை நோட்டமிட்ட வண்ணம் இருக்கும். கண் சிமிட்டல் முதற்கொண்டு அனைத்தையும் அது நோட்டமிடும். வழக்கத்திற்கு மாறாக கண்கள் நீண்ட நேரமாக மூடிக் கொண்டிருக்கும் எனில், டிரைவை எழுப்பும் விதமாக எச்சரிக்கை வழங்கும். இருந்தும் அவர் எழும்பவில்லை என்றால் மட்டுமே அது அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரேக்கை பிடிக்கும்.
ஐந்து பேர் அடங்கிய மாணவர்கள் குழுவே இந்த கருவியைக் கண்டுபிடித்து உள்ளது. மூன்று வார தொடர் கடின உழைப்பிலேயே இந்த கருவியை மாணவர்கள் குழு உருவாக்கி இருக்கின்றனர். நவீன கால கார்கள் சிலவற்றில் இந்த அம்சம் பாதுகாப்பு அம்சங்களின் கீழ் வழங்கப்படுகின்றது.
ஆனால், இந்த கருவியைக் கொண்டிருக்கும் கார் மாடல்கள் பெரும்பாலானவை மிக அதிக விலையைக் கொண்டவையாக இருக்கின்றது. ஆனால், மாணவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய தூக்கத்தைக் கண்டறியும் கருவி மலிவு விலைக் கொண்டது என கூறப்படுகின்றது. ஆகையால், இனி ஏழைகளாலும் இந்த கருவியை எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு இப்போது வரை ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றது. இதனை உற்பத்தி கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கின்றது. அரசு இதுமாதிரியான கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது. விபத்துகளை குறைக்க இதுபோன்று தொழில்நுட்ப கருவிகளுக்கு கட்டாயம் அனைவரும் வரவேற்பை வழங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








