வாகன ஓட்டிகளுக்கு இந்த அளவிற்கு பாதுகாப்பற்ற நாடா நமது இந்தியா? ஓப்பனாக போட்டுடைத்த ஆய்வு ரிப்போர்ட்!!
சமையல், ஓவியம் வரைதல் போன்று டிரைவிங்கும் ஒரு கலை ஆகும். முறையாக கற்று கொண்டால் டிரைவிங்கில் உள்ள மகிழ்ச்சியான உணர்வை எவரொருவரும் அனுபவிக்கலாம். ஆனால் உண்மையில், நம் இந்தியாவில் உள்ள பயண சூழல்களை பொறுத்தவரையில் அவ்வாறான உணர்வை எப்போதும் பெறுவது என்பது முடியாத காரியமே.
ஏனெனில் நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் இப்போதும் குண்டும் குழியுமாகவே உள்ளன. அதேபோல், சாலையின் குறுக்கே எது எப்போது வரும் என்பதை சொல்லவே முடியாது. இதனாலேயே உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. வெளிநாடுகளில் வாகனம் ஓட்டியவர்களுக்கு நம் இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவது சற்று சவாலானதாக இருக்கும். இதனை தான் சமீபத்திய ஆய்வு ஒன்றும் வெளிக்காட்டியுள்ளது.

உலகளவில் சிறந்த டிரைவர்களை கொண்ட நாடுகள் எவை என்பதை கண்டறியும் முயற்சியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வாகன ஓட்டிகளை பகுப்பாய்வு செய்துக்கொள்ள இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. மொத்தம் 50 நாடுகள் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன.
வாகன ஓட்டிகளின் டிரைவிங் அறிவு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு, போக்குவரத்து சிக்னல்களை அடையாளம் காணும் திறன் உள்பட பல்வேறு திறன்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அத்துடன், வாகன ஓட்டிகளின் இரத்தத்தில் எந்த அளவிற்கு ஆல்கஹால் அனுமதிக்கப்படுகிறது, சாலைகளின் தரம், சமூக வலைத்தளங்களில் சாலை பாதுகாப்பு குறித்து எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கூட இந்த ஆய்வில் கருத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் சாலை விபத்து மரணங்கள் ஆய்வின்போது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்க வேண்டும். இந்த ஆய்வின்படி, உலகளவில் பாதுகாப்பான பயண சூழலை வழங்கும் நாடாக ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பானில் வாகன ஓட்டிகளின் இரத்தத்தில் 1 டெசி லிட்டருக்கு வெறும் 0.3 கிராம் அளவு ஆல்கஹால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா நம் இந்தியாவிலும் இதே அளவிலான ஆல்கஹால் தான் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், 50 நாடுகளை கொண்ட இந்த லிஸ்ட்டில் நம் நாடு 47வது இடத்தை பிடித்துள்ளது. ஜப்ப்பானை பொறுத்தவரையில், உலகின் சிறந்த சாலை தரத்தை கொண்ட 4 நாடுகளுள் ஒன்றாக உள்ளது. அதாவது, வாகன ஓட்டிகளுக்கு மட்டுமில்லாமல், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கும் நாடாக ஜப்பான் விளங்குகிறது. மொத்தமாக இந்த ஆய்வில் ஜப்பான் 4.57 மதிப்பெண்களை பெற்றுள்ளது. 47வது இடத்தில் உள்ள இந்தியா வெறும் 2.34 மதிப்பெண்களையே பெற்றுள்ளது.

இந்த லிஸ்ட்டில் ஜப்பானிற்கு அடுத்து நெதர்லாந்து 2வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது ஐரோப்பாவில் சிறந்த டிரைவிங் சூழலை வழங்கும் நாடுகளில் முதலிடத்தில் நெதர்லாந்து உள்ளது. நம் இந்தியா, ஜப்பான் உள்பட பெரும்பான்மையான நாடுகளில் அதிகப்பட்சமாக அனுமதிக்கப்படும் வேக வரம்பு (நெடுஞ்சாலைகளில்) 120kmph ஆகும். ஆனால் நெதர்லாந்தில் 130kmph வரையில் குறிப்பிட்ட வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஐரோப்பிய நாட்டில் டிரைவிங்கின் போது வாகன ஓட்டிகளின் 1 டெசி லிட்டர் இரத்தத்தில் 0.05 கிராம் ஆல்கஹால் அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் நடைமுறையில் இருப்பதை காட்டிலும் இது 0.02 கிராம் அதிகமாகும். மொத்தமாக இந்த ஆய்வில் 4.02 மதிப்பெண்கள் நெதர்லாந்து நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. 3வது இடத்தில் நார்வே உள்ள நிலையில், கணக்கில் எடுத்து கொள்ளப்பட்ட 50 நாடுகளில் மிகவும் மோசமான பயண சூழலை கொண்டிருக்கும் நாடாக தாய்லாந்து 50வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications