கூடுதல் வசதிகள், அதிக சொகுசு... விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய ரயில் பெட்டிகள்!

Written By:

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நவீன ரயில் பெட்டிகள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருக்கின்றன. ரயில்வே வாரியம் அனுமதி அளித்த பின் இந்த புதிய ரயில் பெட்டிகள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

சுவாரஸ்ய செய்தி: மணிக்கு 600 கிமீ வேகத்தில் பறந்த மாக்லேவ்!!!

சொகுசு அம்சங்களுடன், கண்ணை கவரும் உட்புறத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை வழங்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இதுபற்றி வெளியாகியிருக்கும் மாதிரி படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஃபேஸ்புக் பக்கத்தில்...

ஃபேஸ்புக் பக்கத்தில்...

சதர்ன் ரயில்வே ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய மாதிரி ரயில் பெட்டிகளின் படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. பார்க்கும்போதே மெய்மறக்க செய்கிறது இந்த புதிய ரயில் பெட்டிகள்.

போபாலில் வடிவமைப்பு

போபாலில் வடிவமைப்பு

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ரயில் பெட்டிகள் போபால் நகரில் உள்ள ரயில் பெட்டி மறுவடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

முதலில் தயாரிக்கப்பட்ட 24 நவீன ரயில் பெட்டிகளுடன் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. போபால் மற்றும் பினா ரயில் நிலையங்களுக்கு இடையில் மணிக்கு 120கிமீ வேகத்தில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, புதிய அம்சங்கள் மற்றும் ரயில் பெட்டியின் சொகுசுத் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிர்வுகள் குறைவு

அதிர்வுகள் குறைவு

தற்போது பயன்பாட்டில் இருப்பதைவிட அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும் வகையில் இந்த புதிய ரயில் பெட்டிகள் வடிமைக்கப்பட்டிருப்பதாகவும், அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் புதிய ஸ்பிரிங்குகளுடன் சஸ்பென்ஷன் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் போபால் ரயில் மண்டல அதிகாரி சித்திக் கூறியிருக்கிறார்.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

பெட்டிகளின் உட்புறம் அழுது வடியாமல், வண்ணமயமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அலங்காரமாக தெரிகின்றன. ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான வசதி, ஒவ்வொரு அறைக்கும் மொபைல்போன் சார்ஜர், அதிக இடவசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் பயோ டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சித்திக் தெரிவித்தார்.

திட்டம்

திட்டம்

மொத்தம் 111 ரயில் பெட்டிகளை போபால் ரயில் பெட்டி மறுவடிவமைப்பு மையத்தில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 87 பெட்டிகள் ஏசி வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகவும், 17 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளாகவும், 5 இரண்டடுக்கு ஏசி பெட்டிகளும், ஒரு ஏசி சேர்காரும் அடங்கும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

சாதாரண படுக்கை வசதி பெட்டி ரூ.49 லட்சத்திலும், ஏசி பெட்டி ரூ.70 லட்சம் விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அனுமதி

அனுமதி

சோதனை ஓட்டத்தையடுத்து, மத்திய ரயில்வே வாரியத்திடம் அதிகாரிகளின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரை சமர்பிக்கப்படும். ரயில்வே வாரியம் அனுமதி அளித்தவுடன், ஐஎஸ்ஓ சான்று பெற்ற ரயில்கள் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த புதிய பெட்டிகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய ரயில் பெட்டிகளின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

புதிய ரயில் பெட்டிகளின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

 • அதிர்வுகள் குறைவான புதிய சஸ்பென்ஷன்
 • எல்இடி ரீடிங் விளக்குகள்
 • பக்கவாட்டு படுக்கைகளில் ஸ்நாக்ஸ் டேபிள்
 • கூடுதல் அகலமுடைய புதிய படுக்கைகள்
 • அகலமான இருக்கைகள்
 • படுக்கை அறைகளுக்கு தனித்தனி மொபைல்போன் சார்ஜர்
 • பெட்டியின் இருபுறத்திலும் தீயணைப்பான்கள்
 • ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனி தண்ணீர் பாட்டில் வைக்கும் ஹோல்டர்கள்
 • பயோ டாய்லெட்
 • கழிவறையில் சோப் வைப்பதற்கான இடவசதி மற்றும் குப்பைத் தொட்டி
 • எளிதில் தீப்பிடிக்காத பாலி வினைலில் தயாரான இருக்கைகள்
 • கம்பளம் விரிக்கப்பட்டது போன்று பெயிண்ட் செய்யப்பட்ட தரைப்பகுதி
 • நடுவிலுள்ள படுக்கைகளுக்கு சங்கிலி இல்லாத புதிய தாங்கும் அமைப்பு
பராமரிப்பு

பராமரிப்பு

எவ்வளவு நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் பராமரிப்பில்தான் அந்த ரயில் பெட்டிகள் மெருகு குலையாமல் பார்த்துக் கொள்ள இயலும். பராமரிப்பில் ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்பதோடு, பயணிகளும் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியம்.

நவீன வடிவமைப்பில் உருவான ரயில் பெட்டிகள்

01. இந்தியா வருகிறது டால்கோ ரயில்...

02. இந்தியாவின் டாப் -10 அதிவேக ரயில்கள்

03. உலகின் டாப் 10 புல்லட் ரயில்கள்

 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Stunning Interiors Of New Train coaches designed under Make In India program.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark