ஹைதராபாத்தை கலக்கும் பெண் தொழிலதிபரை பற்றி தெரியுமா? கணவரின் பரிசாக ரூ.10 கோடியில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்!!
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் தொழிலதிபரான சுதா ரெட்டியை பற்றி உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவரிடம் உள்ள விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை பற்றி நிறைய பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். அந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
2024 மெட் காலா (MET Gala) நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல தொழிலதிபர்களும், பிரபலங்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணா ரெட்டியின் மனைவி சுதா ரெட்டியும் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் காரணமாகவே, மல்டி மில்லியனர்கள் மத்தியில் சுதா ரெட்டியை பற்றி பேச்சாக உள்ளது. ஏனெனில், மேகா கிருஷ்ணா ரெட்டி என்றும் அழைக்கப்படுகின்ற சுதா ரெட்டி 2024 மெட் காலா நிகழ்ச்சியில் சுமார் 200 கேரட்டிற்கும் அதிகமான டைமண்ட்களை கொண்ட உடை அலங்காரத்துடன் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சுதா ரெட்டியிடம் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் என்கிற லக்சரி கார் உள்ளது. இதனை கஸ்டமைஸ் செய்து சுதா ரெட்டி பயன்படுத்தி வருகிறார். அதாவது, இந்த கார் சுதா ரெட்டி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணா ரெட்டியின் விருப்பத்திற்கு ஏற்ப சில இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை கிருஷ்ணா ரெட்டி அவரது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

சுதா ரெட்டியின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை ரோல்ஸ்-ராய்ஸ் குழு ஸ்பெஷலாக சுதா ரெட்டியின் வீட்டிற்கே வந்தே டெலிவிரி செய்துள்ளது. இதனை சுதா ரெட்டி அவரது முந்தைய பேட்டிகளில் தெரிவித்து உள்ளார்.
ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், உலகம் முழுக்க பல்வேறு செல்வந்தர்களிடம் உள்ள பிரபலமான ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுவாகும். இந்தியாவிலும், முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்பட சிலரிடத்தில் கோஸ்ட் கார் உள்ளது. இந்தியாவில் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.48 கோடியாக உள்ளது.

இந்த காரில் 6.6 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 570 பிஎச்பி மற்றும் 780 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.48 கோடியாக இருந்தாலும், சுதா ரெட்டியின் குடும்பத்தினர் நிச்சயமாக இதனை காட்டிலும் டபுள் மடங்கு விலையிலேயே இந்த காரை வாங்கி இருப்பர்.
ஏனெனில், இந்த காரை கஸ்டமைஸ் செய்து சுதா ரெட்டி வாங்கி உள்ளார் என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேகமான பெயிண்ட்டிற்கு மட்டும் ரூ.1 கோடி அளவில் செலவாகி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. அதுமட்டுமின்றி, காரினுள் வேறென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது நமக்கு தெரியாது. ஆதலால், இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமான விலையில் கிருஷ்ணா ரெட்டி வாங்கியிருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு அதிகப்படியான விலையில் வாங்கிய காரணத்தினாலேயே ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஸ்பெஷலாக சுதா ரெட்டியின் வீட்டிற்கு காரை கொண்டுவந்து சாவியை வழங்கியுள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்டை காட்டிலும் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார்களும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. இருப்பினும், இந்த காரை சுதா ரெட்டியின் கணவர் வாங்கியிருப்பதற்கு நிச்சயமாக ஏதேனும் காரணம் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









