50 லட்ச ரூபா கார்ல போனது அந்த நடிகரின் பொண்ணா! அப்பாக்கு 7,000 கோடி சொத்து இருந்தாலும் சொந்த கால்ல நிக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 46.05 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 53 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

பாலிவுட் திரையுலகை பொறுத்தவரையில், முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள ஷாருக்கானிடம் (Shah Rukh Khan), ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் உள்ளது. அந்த காரில், நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் (Suhana Khan) பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Suhana Khan Spotted In Hyundai Ioniq 5

இந்த வைரல் வீடியோவானது, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ள சுஹானா கான் பயன்படுத்திய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Suhana Khan

11 kW AC சார்ஜர் பயன்படுத்தினால், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் நிரப்புவதற்கு சுமார் 7 மணி நேரம் ஆகும். ஆனால் 150 kW DC சார்ஜர் பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை, வெறும் 21 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

அதே நேரத்தில் 350 kW DC சார்ஜர், இதை செய்வதற்கு வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ளும். மறுபக்கம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், ஏராளமான வசதிகள் (Features)வழங்கப்படுகின்றன. இதில், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, 12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஹானா கான் பயன்படுத்திய ஹூண்டாய் ஐயோனிக் 5, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதிகபட்சமாக இந்த காரில் 5 பேர் பயணம் செய்ய முடியும். இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) மற்றும் பிஒய்டி சீல் (BYD Seal) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் இது போட்டியிட்டு வருகிறது.

சுஹானா கானின் தந்தை ஷாருக்கானின் சொத்து மதிப்பு (Net Worth) 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது. இருப்பினும் சுஹானா கான் திரைப்படங்களில் நடிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் அதிகமாக சம்பாதித்து வருகிறார். 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள சுஹானா கானின் சொத்து மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 13:27 [IST]
English summary
Suhana khan spotted in hyundai ioniq 5 electric car viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+