நாலர கோடி ரூபா கார்ல வந்த வயசு பொண்ண பாக்க அலைமோதிய கூட்டம்! விஜய், அஜீத் ஒன்னா வந்தா கூட இவ்ளோ கூட்டம் கூடாது
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார்களுக்கு (Luxury Sedan Cars) மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார்களில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார்களில் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய 3 முக்கிய அம்சங்களும் ஒருங்கிணைந்து காணப்படுவதுதான் இதற்கு காரணம். மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz Maybach S-Class) காரை இதற்கு ஒரு உதாரணமாக எடுத்து கொள்ள முடியும்.
இது மிகவும் அமைதியான கார் என பெயர் எடுத்தது. சாலையின் சத்தம் எதுவும் கேபினுக்கு உள்ளே கேட்காது. அத்துடன் டயர்களின் சத்தமும் கேட்பதற்கு வாய்ப்பில்லை. எனவே சௌகரியமான பயண அனுபவத்தை நீங்கள் பெற முடியும். அத்துடன் பர்ம்ஸ்டர் ஹை-எண்ட் 4டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் பின் பகுதியில், மடித்து வைத்து கொள்ள கூடிய டேபிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காரையே நீங்கள் அலுவலகமாக மாற்றி கொள்ள முடியும். நேரமின்மையால் பரபரப்பாக காணப்படும் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.
அத்துடன் ஆக்டிவ் ப்ளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட், ஆக்டிவ் எமர்ஜென்ஸி ஸ்டாப் அஸிஸ்ட் மற்றும் ஆக்டிவ் லேன் சேஞ்ச் அஸிஸ்ட் ஆகிய வசதிகளையும் மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் சொகுசு கார் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் உல்லாச கப்பலில் சொகுசாக மிதந்து கொண்டே பயணிப்பது போன்ற அனுபவத்தை மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் கார் பயணிகளுக்கு வழங்கும்.

சொகுசு, சௌகரியம் ஆகிய அம்சங்களில் மட்டுமல்லாது, செயல்திறன் மிக்க இன்ஜின் ஆப்ஷன்களிலும், மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் கார் தலைசிறந்து விளங்குகிறது. இந்த காரின் எஸ் 580 4மேட்டிக் வேரியண்ட்டில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 503 ஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த வேரியண்ட் வெறும் 4.8 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது. மறுபக்கம் இந்த காரின் எஸ் 680 மற்றும் எஸ் 680 நைட் சீரிஸ் ஆகிய வேரியண்ட்களில், 6.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் பவர் அவுட்புட் 612 ஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்த வேரியண்ட்கள் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இவற்றின் டாப் ஸ்பீடும் மணிக்கு 250 கிலோ மீட்டர்களாகதான் உள்ளது.
தற்போதைய நிலையில் 3.50 கோடி ரூபாய் முதல் 4.35 கோடி ரூபாய் வரையிலான ஆன்-ரோடு விலைகளில் (On-road Price) மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகரங்களை பொறுத்து, ஆன்-ரோடு விலை மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மிகவும் விலை உயர்ந்தது என்ற போதிலும் கூட, சௌகரியம், சொகுசு மற்றும் செயல்திறன் ஆகிய அம்சங்களில் தலைசிறந்து விளங்குவதால், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக, மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் சொகுசு கார் திகழ்ந்து வருகிறது.
எனவே மும்பை போன்ற பெரு நகரங்களின் சாலைகளில் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்களை, மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரில் அடிக்கடி காண முடியும். இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலத்தை இந்த காரில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. அவர் 24 வயதேயான சுஹானா கான் (Suhana Khan) ஆவார்.
பிரபல நடிகர் ஷாருக்கானின் (Shah Rukh Khan) மகளான இவர், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரில் ஏறி புறப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவில், ரசிகர்கள் பலர் சுஹானா கானை சூழ்ந்து கொண்டு, புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதை நம்மால் காண முடிகிறது. கூட்டம் அதிகமாக கூடியதால், அவர் காரில் ஏறவே சற்று சிரமப்பட்டார். அனேகமாக இந்த வைரல் வீடியோ, மும்பையில் (Mumbai) எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியா முழுக்க புகழ் பெற்ற நடிகையாக இருக்க கூடிய ஹேமமாலினி (Hema Malini) சமீபத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரில் பயணம் செய்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் படித்திருக்கலாம். இந்த வரிசையில் தற்போது சுஹானா கான் அதே காரில் பயணம் செய்துள்ளார்.
இதன் மூலம் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் இந்த கார் எவ்வளவு புகழ் பெற்று விளங்குகிறது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால் சுஹானா கான் பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் என்ன வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அது 4.35 கோடி ரூபாய் மதிப்புள்ள டாப் வேரியண்ட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








