ஏலத்திற்கு வரும் மோசடி மன்னனின் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள்! ரூ.2.03 லட்சத்தில் இருந்து தொடங்க போறாங்க

மோசடி புகார் காரணமாக சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார் சுகேஷ் சந்திரசேகர். டெல்லி சிறையிலேயே அவர் தற்போது அடைக்கப்பட்டு இருக்கின்றார். இவர் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸின் முன்னாள் காதலன் என கூறப்படுகின்றது. தொழலதிபர்களிடம் ரூ. 200 கோடி வரை மோசடி செய்த விவகாரத்தின் காரணமாகவே அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்.

இதுதவிர இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன் வைக்கப்பட்டு இருக்கின்றன. சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த பணத்தை வைத்து மிகப் பெரிய அளவிலான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கின்றார். மிக மிக விலை உயரிய சொகுசு கார்கள் மற்றும் அரண்மனை போன்ற இல்லாம் என முன்னணி தொழிலதிபர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அவரின் ஆடம்பர வாழ்க்கையை இருந்திருக்கின்றது.

Sukesh chandrasekhar luxury car auction

இந்த நிலையிலேயே மோசடி புகாரைத் தொடர்ந்து அவருடைய அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அவரிடம் பயன்பாட்டில் இருந்த சொகுசு கார்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), லம்போர்கினி (Lamborghini) இபோன்ற கார்களும் அவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பிஎம்டபிள்யூ எம்5 (BMW M5), ரேஞ்ஜ் ரோவர் (Range Rover), ஜாகுவார் எக்ஸ்கேஆர் கூபே (Jaguar XKR Coupe), பென்ட்லீ (Bentley), டொயோட்டா ப்ராடோ (Toyota Prado), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta) மற்றும் நிஸான் டீனா (Nissan Teana), உள்ளிட்ட மிக விலையுரிய ஆடம்பர கார்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், டுகாட்டி டியாவல் (Ducati Diavel) சூப்பர் பைக் ஒன்றும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனங்களையே ஐடி பிரிவு ஏலம் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. நவம்பர் 28 ஆம் தேதி அன்று அனைத்து வாகனங்களுக்குமான ஏலமும் தொடங்கப்பட இருக்கின்றது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே இந்த ஏலம் நடைபெற இருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்து இருக்கின்றது. ரூ. 2.03 லட்சம் ஆரம்ப தொகையில் இருந்து ஏலம் விடப்பட இருக்கின்றது. அதிகபட்சமாக ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ. 1.74 கோடி ஆரம்ப தொகையா நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த வாகனங்கள் அனைத்தும் சுகேஷ் சந்திர சேகருக்கு சொந்தமானது ஆகும். இவை நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும். 2018 ஆம் ஆண்டில் தொடங்கிய வேட்டையின் வாயிலாக தமிழ்நாடு, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பெங்களூருவில் அனைத்து வாகனங்களும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

2018 - 19 ஆம் ஆண்டில் சுகேஷ் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த சொகுசு கார் ஏலம் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 308.48 கோடி ரூபாய் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே அமலாக்கத் தூறை தற்போது களமிறங்கி இருக்கின்றது.

ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் கார்கள் அனைத்தின் தரமும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அதற்கேற்பவே ஏல தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த ஏலம் சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஏலத்தில் பெரும் தொழிலதிபர்கள் பலர் கலந்துக் கொண்டு சொகுசு கார்களை ஏலம் கேட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், சுகேஷ் சந்திரசேகரின் சொகுசு கார்கள் ஏலத்திற்கு வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே அவரின் கார்கள் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஏலத்தில் வந்தன. இந்த கார்களை ஆன்-லைன் வாயிலாக ஏலம் கேட்கலாம் என தெரிகின்றது. அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று ஏலத்தின் வாயிலாக கார்களை வாங்கும்போது பலமடங்கு குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதனால்தான், இந்தியாவில் ஒரு சிலர் இதுபோன்ற ஏலங்களைத் தவிர்க்காமல் பங்கேற்கின்றனர். வாய்ப்புகள் இருப்பின் சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதைக் காட்டிலும் பெரும் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 23:50 [IST]
English summary
Sukesh chandrasekhar luxury cars to be auction on nov 28
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+