10 தார் ராக்ஸ் மற்றும் 100 ஐ-போன் 16ப்ரோ-வை கிவ்-அவே செய்ய போகும் பிரபலம்! இதுக்கு நீங்க செய்ய வேண்டியது என்ன?

இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறக் கூடிய கார் மாடலாக மாறி இருக்கின்றது சமீபத்தில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய தார் ராக்ஸ் (Thar Roxx) கார் மாடல். இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3 கதவுகள் கொண்ட தார் (Thar) கார் மாடலின் 5 டோர்கள் வெர்ஷன் ஆகும். இதையே மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் என்கிற பெயரில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த காருக்கு சமீபத்திலேயே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கின.

இது தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே சுமார் 1.76 லட்சம் புக்கிங்குகளை அந்த கார் பெற்றது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலையே ஓர் நபர் 10 பேருக்கு கிவ்-அவே செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றார். அவர் வேறு யாரும் இல்லைங்க, சமீபத்தில் மிகப் பெரிய மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர்தான் அவர் ஆவார்.

Mahindra thar roxx suv giveaway

இவர் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸின் ஆண் தோழர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்தில் ஜாக்குலின்-இன் நடிப்பில் வெளியாகிய ஸ்டார்ம் ரைடர் பாடலை புரமோட் செய்யவே இந்த கிவ்-அவே திட்டம் ஆகும். இந்த பாடலுக்கு அதிக அளவில் என்கேஜ் கிடைக்க வேண்டும், அதாவது, மிக அதிக பார்வைகள் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம் ஆகும்.

இதன் அடிப்படையிலேயே அவர் சில விதிகளை கூறியிருக்கின்றார். அதாவது, அந்த ஜாக்குலின்-இன் புதிய பாடலான ஸ்டார்ம்ரைடர்-ஐ பார்க்க வேண்டும். அத்துடன், அவரின் யுட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில், அதை சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். அத்துடன், நண்பர்களுக்கு பகிர வேண்டும் என்கிற விதிகளையே அவர் விதித்துள்ளார்.

விரைவில் அது 100 மில்லியன் பார்வைகளை பெற வேண்டும் என்பதே சுகேஷ் சந்திரசேகர்-இன் எதிர்பார்ப்பு ஆகும். இது நிறைவேறும் பட்சத்தில் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தம் புதிய தார் ராக்ஸ் கார் மாடலையும், 100 பேரை தேர்ந்தெடுத்து ஐ-போன் 16 ப்ரோ செல்போனையும் தான் வழங்குவேன் என உறுதியளித்திருக்கின்றார்.

ஆகையால், ஜாக்குலின்-இன் ரசிகர்கள் அவரின் புதிய ஸ்டார்ம்ரைடர் பாடலை வெறிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுகேஷ் சந்திரசேகர், இந்த காரின் பதிவு உள்ளிட்ட வேலைகளையும் தானே பார்த்து தருவதாகவே கூறியிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே வெற்றியாளர்கள் எந்தவொரு சிறிய தொகை செலவுமின்றி அந்த காரை வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே தார் ராக்ஸ் கார் மாடலுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த காரின் மாதாந்திர உற்பத்தி திறனே 6,500 மட்டும்தான் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே, இப்போது இந்த காருக்கு காத்திருப்பு காலம் மாதக் கணக்கில் அதிகரித்திருக்கின்றது. மஹிந்திரா தார் ராக்ஸ் 5 டோர் இந்தியாவில் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகியவையே அவை ஆகும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 12.99 லட்சம் ஆகும். அதேவேளையில், அதன் அதிகபட்ச விலை ரூ. 22.49 லட்சம் ஆகும். இவ்வளவு அதிக விலையைக் கொண்டிருக்கின்ற போதிலும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த காரை சிறப்பிக்கும் விதமாக அண்மையில் 4x4 தொழில்நுட்பம் மற்றும் இரண்டு விதமான விருப்ப வண்ண தேர்வுகளை இன்டீயரிலும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனால், விரைவில் இந்த காரின் விற்பனை இன்னும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் ராக்ஸ் கார் மாடல் விற்பனையில் மிகப் பெரிய சாதனையைப் படைக்கும் என்பதற்கு சான்றாகவே அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங் உள்ளது. இத்தகைய காரை கிவ்-அவேவாக சுகேஷ் சந்திரசேகர் வழங்க இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், உடனே அந்த கார் வழங்கப்படுமா என்பதுதான் இங்கே சந்தேகமே.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 5:00 [IST]
English summary
Sukesh chandrashekhar to giveaway 5 door mahindra thar suvs to promote jacquelines stormrider
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+