2 விமானிகளுடன் சீன எல்லை அருகே காணாமல் போன போர் விமானம்; பதற்றத்தில் இந்தியா!

Written By:

இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் மாயமானது தொடர்பாக, அது சீனாவிற்கு சொந்தமான ஏதேனும் மலைப்பகுதிகளில் மோதி வெடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

அசாம் மாநிலம் தேஸ்பூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானம் நேற்று காலை திடீரென மாயமானது.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

சுகோய்-30 விமானம் காணாமல் போன போது, அதில் இரண்டு விமானிகள் வழக்கம் போல பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென ரேடார் சிக்னலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனது.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

அசாமின் சாலோனிபாரி விமான தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய்-30 போர் விமானம், தரையில் இருந்து மேல் எழும்பிய 30-வது நிமிடத்தில் ரேடார் சிக்னலில் இருந்து திடீரென மாயமானது.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

பதற்றமடைந்த கண்காணிப்பாளர்கள், விமானத்தை பல மணிநேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிகளை தொடர்பு கொண்டாலும், அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

சுமார் 12 பில்லியன் செலவில் சுகோய்-30 ரகத்தை சார்ந்த மொத்தம் 240 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கிஸ் என்ற உரிமத்தின் கீழ் இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியது

சுகோய்-30 விமானத்தில் ட்வின்-எஞ்சின் உள்ளது. அனைத்து பருவநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் தாக்குப்பிடித்து நிற்கும் திறன் கொண்டது.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

முற்றிலும் இந்தியாவிற்கான சிற்பம்சம் மற்றும் அமைப்புகளுடன் சுகோய்-30 ஜெட் விமானங்களை ரஷ்யா தயாரித்தது.

மேலும் இதற்கான உதிர்பாகங்களை ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளிலிருந்து வாங்கி பொருத்தியது.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

2010ம் ஆண்டில் சுகோய்-30 ரக விமானங்களை, பிரம்போஸ் ஏவுகணைகளை தாங்கி செல்லக்கூடிய திறனுடன் தயாரிக்க ரஷ்யாவிற்கு இந்தியா ஆர்டர் கொடுத்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய சுகோய்-30 விமானங்கள் டர்போ-ஃபேன் எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து இந்த விமானங்கள் இந்திய இராணுவத்தால் மேம்படுத்தப்பட்டு வந்தன.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

சுகோய் விமான இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது முதலே பல கோளாறுகளை சந்தித்து தான் வருகின்றன. குறிப்பாக இதுவரை எந்த விமானமும் போரில் சிக்கி சேதமடைந்தது கிடையாது. அனைத்தும் விபத்தின் போது சேதமடைந்தவை தான்.

கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 70 முறை சுகோய் விமானங்கள் விபத்துகளை சந்தித்துள்ளன. இதற்கு காரணம் எஞ்சின் கோளாறு தான் என்று சொல்லப்படுகிறது. இந்த ரக விமானங்களை சரிசெய்ய நம்மிடம் உரிய வசதிகள் இல்லை என்பதே இதுபோன்ற விபத்துகள் நடக்க முக்கிய காரணம்.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

போர் விமானங்களை சரியாக பராமரிப்பதற்காகவே இந்திய அரசு ரஷ்யாவிடம் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் உதிரி பாகங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலும் தீரும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய இந்த ஒப்பந்தம் மூலமாவது இந்திய விமானப் படையின் நிலைமை மாறுபடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து போர் விமானங்களை தொலைத்து வரும் இந்தியா..!

சீன எல்லை அருகே சுகோய்-30 போர் விமானம் மாயமாகி உள்ளதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சுகோய் விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்-32 ரக விமானம் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுகோய் 30 ரக விமானம் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sukhoi-30 fighter jet with two pilots goes missing near Assam's Tezpur. Search Operations Resumes Today. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark