21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!

இந்தியாவில் சொகுசு மற்றும் சூப்பர் கார்களை பரிசளிக்கும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில்கூட பிரபல நடிகரான பிரசாந்த்துக்கு மிக உயரிய விலைக் கொண்ட கார் பரிசாக வழங்கப்பட்டது. அது அவருடைய தந்தையும், பிரபல நடிகருமான தியாகராஜனால் வழங்கப்பட்டது.

நடிகர் பிரசாந்தின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டே வழங்கப்பட்டது. ரூ. 1.60 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 எக்ஸ்டிரைவ் 40ஐ எம்-ஸ்போர்ட் சொகுசு காரே பிரசாந்துக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதுபோன்ற விலை உயர்ந்த கார் பரிசளிப்பு சம்பவங்களே சமீப காலமாக இந்தியாவில் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

Dads gifts porsche sports car to daughter

இந்த மாதிரியான சூழலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும் வகையில் ஓர் கார் பரிசளிப்பு சம்பவம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. ஆசை மகளுக்கு அவருடைய அப்பா விலையுயர்ந்த போர்ஷே காரை பரிசாக வழங்கி அசத்தி இருக்கின்றார். அது என்ன கார்? அதன் சிறப்புகள் என்ன? மற்றும் விலை எவ்வளவு? என்பது போன்ற சுவராஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுலைமான். இவருடைய மகளே நிமா சுலைமான். இவருக்கு 21 வயதே ஆகின்றது. இவருக்கே போர்ஷேவின் மிக சிறந்த தயாரிப்புகளில் ஒன்றான 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் கார் (Porsche 911 Carrera S sports car) பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. சுலைமான் ஹைலைட் குழுமத்தின் நிறுவனர் ஆவார்.

சமீபத்திலேயே இந்த நிறுவனத்தின் இயக்குநராக நிமா சுலைமான் நியமிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே அவரின் மகிழ்ச்சியான தருணத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் சுலைமான் தற்போது இந்த ஸ்போர்ட்ஸ் கார் பரிசளிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

போர்ஷே 911 கர்ரேரா எஸ் உலகின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாகும். இதன் ஒரே ஒரு யூனிட் மட்டுமே ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த காரையே தன் மகளுக்கு பரிசாக ஹைலைட் குழுமத்தின் தலைவர் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

கன்டெய்னர் வீட்டுக்கே கொண்டு வரப்பட்டு சர்ப்ரைஸாக இந்த கார் பரிசளிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. போர்ஷே 911 கர்ரேரா எஸ் உலகின் விலையுயர்ந்த கார் மட்டுமில்லைங்க அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட காரும்கூட. இது வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

அதேவேளையில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீட்டருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஆனால், 2 கதவுகளை மட்டுமே அது கொண்டிருக்கும். இதந் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்கு முக்கிய காரணமாக அதன் எஞ்சின் இருக்கின்றது.

3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டாரை போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 450 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரின் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் பல ஸ்போர்ட்ஸ் கார் காதலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், பிரபல மலையாள நடிகை மம்தா மோஹன்தாஸ்-ம் ஒருவர் ஆவார். சமீபத்திலேயே இந்த காரை அந்த நடிகை வாங்கினார். இவரிடத்தில் மற்றுமொரு ஸ்போர்ட்ஸ் கார் இருக்கின்றது. அது பிஎம்டபிள்யூ இசட்4 மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லா பெண்களும் அவர்களின் அப்பாவிற்கு இளவரசிதான். இதை நிரூபிக்கும் விதமாக இந்த கார் பரிசளிப்பு தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இருப்பவர்கள் இதுபோன்ற விலையுயர்ந்த பரிசை வழங்கி அவர்களின் தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். இல்லாதவர்கள் அன்பை மட்டுமே கொடுத்து தங்களின் மகள்களை மனக் கோட்டையில் இளவரசியாக அமர செய்துவிடுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2024, 5:00 [IST]
English summary
Sulaiman founder of hilite group gifts porsche 911 carrera s sports car to 21 year old daughter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+