என்னங்க பெரிய குயின் எலிசபெத்... இந்த மன்னரை பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? பயங்கர கார் பிரியர்!!
500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், 300 ஃபெராரி கார்கள், 200 குதிரைகள்... இத்தனை வாகனங்களை ஒரே அரசர் வைத்துள்ளார், அந்த அரசர் நம் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. யார் இந்த மன்னர்? எந்த நாட்டிற்கு மன்னராக உள்ளார்? இவரது இந்த சாதனையை வேறு யாரால் ஆசியாவில் அடுத்து முறியடிக்க முடியும்? வாருங்கள் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புருனே, இப்படியொரு நாடு ஆசிய கண்டத்தில் இருப்பது கூட நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரியாது. தெற்கு சீன கடலில் அமைந்துள்ள போர்னியா தீவில் அங்கமாக வகிக்கும் ஓர் சிறிய நாடு தான் புருனே ஆகும். நம் சென்னையை விட சற்றே பெரியதான இந்த நாட்டின் சுல்தானிடம் தான் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்பட ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன.

1967இல் புருனே நாட்டின் மன்னராக ஹசனல் போல்கியா பொறுப்பு ஏற்றார். அந்த சமயத்தில் நம் இந்தியா விடுதலை பெற்றிருந்தது. ஆனால், புருனே நாடு அப்போதும் பிரிட்டிஷாரின் வசமே இருந்தது. அதன்பின் 1984இல் தான் புருனே நாட்டிற்கு விடுதலை கிடைத்தது. இவ்வாறு நீண்ட வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்த ஓர் நாட்டின் மன்னரிடம் இத்தனை விலையுயர்ந்த கார்கள் உள்ளன என்றால் யாராலும் உடனடியாக நம்ப முடியாது.
ஆனால், இதை நம்பித்தான் ஆக வேண்டும். ஹசனல் போல்கியாவிடம் இத்தனை விலையுயர்ந்த கார்கள் இருப்பதை அறிந்த உலக கின்னஸ் சாதனை குழு இவருக்கு விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. அதாவது, சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் கார்கள் வைத்திருந்ததினால் ஹசனல் போல்கியாவுக்கு உலக கின்னஸ் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டு உள்ளது.

மன்னர் ஹசனல் போல்கியாவின் கார்கள் படையை புரூனே நாட்டிற்கு சென்றாலும் அவ்வளவு எளிதாக நேரில் பார்த்துவிட முடியாது என கூறப்படுகிறது. ஏனெனில், மன்னரின் கார்களை பாதுகாக்க என்றே எப்போதும் நிறைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப் படுவார்களாம். அத்துடன், தனது கார்களை பாதுகாக்க என்றே நிறைய ரோந்து வாகனங்களை மன்னர் ஹசனல் போல்கியா கொண்டுள்ளார்.
மன்னர் ஹசனல் போல்கியாவிடம் உள்ள கார்களுள் சில மாடல்கள் மன்னரின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை ஆகும். அத்துடன், மன்னர் ஹசனல் போல்கியாவிடம் உள்ள கார்கள் கலெக்ஷனில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. அதாவது, இவர் வைத்துள்ள 500 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மற்றும் பெண்ட்லீ கார்களில் பாதி சதவீத கார்கள் 1990ஆம் காலக்கட்டத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

புருனே சுல்தானின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக என்றே அவ்வளவு சிறிய நாட்டில் மன்னருக்கென 100 கேரேஜ்கள் உள்ளன. இவ்வளவு பவர் ஃபுல்லான ஆளா சுல்தான் ஹசனல் போல்கியா? என கேட்டால், ஆசியாவிலேயே ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மிக நீண்ட வருடமாக புருனே நாட்டை ஆட்சி செய்து வருபவர். அதாவது, 1967இல் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டவர், 1984க்கு பிறகு புருனே நாட்டின் பிரதமராக தற்போது வரையில் பதவி வகித்து வருகிறார்.
உலகிலேயே 2ஆம் இராணி எலிசபெத்துக்கு அடுத்து, மிக நீண்ட காலமாக ஓர் குறிப்பிட்ட பகுதி/ நாட்டை ஆளும் மன்னர் இவர்தான் என கூறப்படுகிறது. புருனேவில் சுல்தான் ஹசனல் போல்கியா வசிக்கும் அரண்மனை தான் உலகிலேயே மிக பெரிய அரண்மனை ஆகும். இஸ்தானா நுருல் இமான் அரண்மனை என அழைக்கப்படும் சுல்தானின் வீடு சுமார் 20 இலட்ச சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓர் நாட்டிற்கு மன்னராக பொறுப்பேற்று, பின்னர் அதே நாட்டிற்கு பிரதமராக கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு இருப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. இதில் இருந்து, புருனே நாட்டில் மன்னர் பரம்பரைக்கு எந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் வழங்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









