இந்த நபருக்கு முன்னால அம்பானியே குழந்த மாதிரி.. ரோல்ஸ் ராய்ஸ் காரையே தங்காத்தால ரெடி பண்ணியிருக்காரு மனுஷன்!

அரசு முறைப் பயணமாக புருனேவிற்கு சென்றிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய வம்சாவளியினர் மோடிக்கு தேசிய கொடி ஏந்தி தங்களின் வரவேற்பை வழங்கினர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புருனேவிற்கு பயணிக்கும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே ஆவார். இதன் வாயிலாக இந்தியா-புருனே உடனான நட்புறவு மேலும் அதிகரித்திருக்கின்றது என்றே கூறலாம். மேலும், புருனே வந்திருந்த பிரதமர் மோடியை அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கையா நேரில் சந்தித்து வரவேற்பளித்தார்.

மேலும், அரசு மரியாதையும் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையிலேயே புருனே சுல்தானைப் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியைத் தொடர்ந்து, உலகின் இரண்டாவது மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் இவர் ஆவார்.

Sultan of brunei car collection

இதுமட்டுமே இவருடைய சிறப்பு இல்லைங்க, கார்களுக்கு என ஒரு தனி கிராமமே உருவாக்கலாம் என அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் இந்த மன்னர் ஆடம்பர கார்களை வைத்திருக்கின்றார். இவரிடத்தில் கார்களின் மதிப்பு மட்டுமே 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டு இருக்கின்றது.

இந்த அளவிற்கே மிக அதிக எண்ணிக்கையில் அவர் கார்களை வைத்திருக்கின்றார். மேலும், இவருடையே உலகின் மாபெரும் தனி நபர் கார் கலெக்சன் ஆகும். நம்மில் பலர் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியையே மிக கார் கலெக்சனைக் கொண்டவர் என எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

Gold wrapped rolls royce car

ஆனால், இவர் ஹஸன்னல் போல்கையா முன்னால் கார் கலெக்சன் விஷயத்தில் குழந்தை ஆவார். முகேஷ் அம்பானி இடத்தில் நூற்றுக் கணக்கிலேயே கார்கள் உள்ளன. ஆனால், புருனே சுல்தானிடம் 7 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர விமானங்களும் புருனே சுல்தானிடம் உள்ளன.

சொல்லப் போனால் இவரிடத்தில் எத்தனை கார்கள் இருக்கின்றன? என்ன மாதிரியான கார்கள் மாடல் இருக்கின்றன என்பதை பராமரிப்பதற்கே தனி குழுவை இவர் வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த ஒரு நபரிடத்தில் மட்டுமே சுமார் 600 ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருக்கும் இவரே ஆவார். மேலும், அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருப்பதில் இவர் கின்னஸ் சாதனையையே படைத்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, 450 ஃபெர்ராரி (Ferrari) கார்கள் 380 பென்ட்லீ (Bentley) கார்களை இவர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதுமட்டுமில்லைங்க, போர்ஷே (Porsche), லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach), ஜாகுவார் (Jaguar), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெக்லாரன் (McLaren) ஆகிய பிராண்டுகளின் கார்களையும் அதிக எண்ணிக்கையில் அல்ல மிக மிக அதிக எண்ணிக்கையில் புருனே சுல்தான் பயன்படுத்தி வருகின்றார்.

இவரிடத்தில் ஏழாயிரத்திற்கும் அதிகமான கார்கள் இருப்பது ஓர் ஆச்சரியம் என்றால், கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக 24 கேரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரையும் இவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வைத்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பர் II மாடல் ஆகும்.

இதுதவிர, 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பென்ட்லீ டோமினேடர் எஸ்யூவி ரக காரையும் இவர் பயன்படுத்தி வருகின்றார். மேலும், எக்ஸ்88 பவர் பேக்கேஜைக் கொண்ட போர்ஷே 911 காரையும் இவர் வைத்திருக்கின்றார். இந்த கார் ஹரிசோன் ப்ளூ பெயிண்டால் அலங்கரித்திருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் 2007 ஆம் ஆண்டிலேயே வாங்கிவிட்டார். இது அவரது மகள் இளவரசி மஜேதேதாவின் திருமணத்திற்காக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தன்னுடைய தனிப்பட்ட பயணத்திற்காக இவர் ஓர் போயிங் 747 விமானத்தையே வாங்கி வைத்திருக்கின்றார்.

தொடர்ந்து, இவர் வைத்திருக்கும் கார்கள் மற்றும் விமானங்கள் மட்டுமல்ல குடியிருக்கும் அரண்மனைகூட மிகவும் ஆச்சரியம் தரக் கூடியதாக இருக்கின்றது. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவிலேயே அரண்மனைக் கட்டப்பட்டு இருக்கின்றது. இதில் குறிப்பிட்ட இடங்களில் 22 கேரட் தங்கம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

மேலும், 1700 பெட்ரூம், 257 குளியல் அறைகள், 110 கராஜ்கள் மற்றும் ஐந்து நீச்சல் குளம் இந்த ஒற்றை அரண்மனையில் இருக்கின்றன. இதுதவிர தனிப்பட்ட விலங்கியல் பூங்கா ஒன்றையும் இவர் வைத்திருக்கின்றார். இந்த விலங்கியல் பூங்காவில் 30 பெங்கால் புலிகள் மற்றும் பலதரப்பட்ட பறவைகள் மற்றும் மிருகங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புருனே சுல்தானிற்கு சொந்தமாக ஏராளமாக ஆயில் கிணறுகள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இவருடைய சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இத்தகைய செல்வ செழிப்புமிக்க நபரே மிகப் பெரிய கார் காதலராக உள்ளார். இவரின் இந்த கார் கலெக்சன் உலகின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 19:53 [IST]
English summary
Sultan of brunei owns approximately 600 rolls royce 450 ferraris and 380 bentley car
மேலும்... #luxury car #celebrity car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+