கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!

பிரபல ஐபிஎல் டீம் சன்-ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சன் குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன். இவரே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டீமின் சிஇஓ ஆவார். இதுபோன்று இன்னும் பல முக்கிய பொறுப்புகளை தன்னுடைய தந்தையின் நிர்வாகத்தில் காவ்யா மாறன் வகித்து வருகின்றார். இவரின் கார் கலெக்சன் பற்றிய விபரங்களே தற்போது வெளியாகி உள்ளன.

காவ்யா மாறன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏகப்பட்ட ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, இவர்களிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தொடங்கி பென்ட்லீ போன்ற உலக புகழ்பெற்ற சொகுசு பிராண்டுகளின் தயாரிப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. இந்த கார்களைப் பற்றியும், அதன் சிறப்புகள் என்ன? மற்றும் விலை விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Kavya maran car collection

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB): உலக செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே சுமார் 12.2 கோடிக்கும் அதிகம் ஆகும். இதனால்தான் இந்த காரை சாலையில் பார்ப்பது என்பது மிக மிக அரிதானதாகக் காட்சியளிக்கின்றது.

இத்தகைய கார் மாடலையே கலாநிதி மாறன் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கின்றனர். இரண்டு விதமான வண்ணங்களால் அவர்கள் வைத்திருக்கும் அந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. பக்கவாட்டு பகுதிகளில் தங்க நிறமும், மேற்கூரையில் கருப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் தேவைக்கு ஏற்ப என்ன மாதிரியான மாற்றங்களை எல்லாம் அவர்கள் செய்திருக்கின்றனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Rolls Royce Phantom VIII EWB

ஒருவேளை தங்களுக்கான கூடுதல் லக்சூரி வசதிகளை அவர்கள் சேர்த்திருந்தால் அந்த காரின் மதிப்பு இன்னும் அபரிதமானதாக இருக்கும். இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 6.75 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 571 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபெராரி ரோமா (Ferrari Roma): ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களின் கனவு வாகனமாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் சர்வ சாதாரணமாக சென்னை சாலையில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது என்றால் மாறன் குடும்பத்தினர்களால்தான். மிகவும் அழகிய, அதேவேளையில், அதீத வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதே ஃபெராரி ரோமா ஆகம்.

Rolls royce phantom ewb on chennai road

இதனால்தான் பலரின் கனவு வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 4.5 கோடிக்கும் அதிகம் ஆகும். 3.9 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் எஞ்சினே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 690 பிஎஸ் பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் போகக் கூடிய காரையே மாறன் குடும்பத்தினர் சென்னையில் பயன்படுத்தி வருகின்றனர்.

Ferrari Roma

பென்ட்லீ பென்டேகா இடபிள்யூபி (Bentley Bentayga EWB): இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 6 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பல்வேறு சொகுசு மற்றும் ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய கார் மடாலாக இது காட்சியளிக்கின்றது.

இதனால்தான் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக பென்ட்லீ பென்டேகா இடபிள்யூபி காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் ஓர் யூனிட்டையே கலாநிதி மாறன் குடும்பத்தினர் சென்னையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 550 பிஎஸ் மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Bentley Bentayga EWB

பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7): இது எலெக்ட்ரிக் செடான் வகை கார் மாடல் ஆகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 2.03 கோடிகள் ஆகும். இந்த லிஸ்ட்டின் விலை குறைவான கார் மாடலாக இதுவே இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 591 கிமீ முதல் 625 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 101.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே வழங்கப்படுகின்றது.

மேலும், இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 239 கிமீ வேகத்தில் பயணிக்கும். வேகத்தில் மட்டுமல்ல சொகுசு வசதிகளை வழங்குவதிலும் இந்த எலெக்ட்ரிக் கார் மிக சிறந்த வாகனம் ஆகும். இதனால்தான் கலாநிதி மாறன் குடும்பத்தினரின் கார் லிஸ்ட்டில் இது இடம் பெற்றிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல கார்களை அவர்கள் தங்கள் வசம் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

BMW i7

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கலாநிதி மாறனின் இந்த கார் கலெக்சன் உங்களுக்கு மிகப் பெரியதாக தெரியலாம். ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய கார் காதலராக முகேஷ் அம்பானி அறியப்படுகின்றார். இவரிடத்தில் 200க்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றன. உலகம் அறிந்த எண்ணிக்கை மட்டுமே இதுவாகும். அவரிடத்தில் இன்னும் அறியப்படாத, அதிக எண்ணிக்கையிலான கார்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 21, 2024, 5:00 [IST]
English summary
Sun group founder kalanithi maran car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X