விவாகரத்தாகி இன்னொரு கல்யாணமும் பண்ணிட்டாங்க! இப்ப இந்த நடிகரை பார்க்க காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய பாடகி

பாலிவுட்டில் பிரபலமான பின்னணி பாடகியான சுனிதி சவ்கான் என்பவர் சமீபத்தில் தனது மகனுடன் ரூபாய் 76 மதிப்பிலான கியா கார்னிவெல் என்ற சொகுசு காரில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த இறங்கினார். அப்பொழுது அவரை பிரபல ஹிந்தி நடிகரான சுனில் ஷெட்டி விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். இப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். சுனில் ஷெட்டி வந்த கார் என்ன? சுனிதி சவகான் வந்த கார் என்ன? என்ற முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

சுனினி ஷெட்டி பல பாலிவுட் திரைப்படங்களில் பின்னணி இசை பாடியுள்ளார். இதுபோக லைவாக ஸ்டேஜ் பெர்பார்மன்ஸில் புகழ்பெற்றவராக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து இவருக்கு தெற்கு என்ற மகன் ஒருவன் இருக்கிறார். இந்நிலையில் இவர் தனது புதிதாக வாங்கிய ரூபாய் 76 லட்ச ரூபாய் மதிப்புள்ள கியா கார்னிவெல் காரில் மும்பை விமான நிலையத்தில் வந்த இறங்கினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Sunidhi Chauhan Kia Carnival Car

அதே நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியும் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் நடிகர் ரஜினி நடித்த தர்பார் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து. பாடகியின் காருக்கு பின்னாலேயே இவரது லேண்ட்ரோவர் டிபென்டர் காரும் வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து செய்ய வைத்துக் கொண்டார்கள். பின்னர் இருவரும் சிறிது நேரம் அந்த இடத்தில் என்று பேசி போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு பின்னர் விமான நிலையத்திற்குள் சென்றார்கள்.

பிரபல பாடகி சுனிதி சவ்கான் தனது கியா கார்னிவல் சொகுசு MPV காரை புதிதாக வாங்கியுள்ளார். அரோரா கருப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேல குறிப்பிட்டுள்ளபடி, இந்த வாகனத்தின் விலை ரூ.76 லட்சம் (ஆன்-ரோடு, மும்பை) ஆகும் . இது லேட்டஸ்ட் மாடலாகும், இது கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கார்னிவல் இப்போது அதிக நவீன மற்றும் பிரீமியம் வெளிப்புற வடிவமைப்பைப் கொண்டுள்ளது. இது தலைகீழான L-வடிவ LED ஹெட்லைட்கள் மற்றும் LED DRLகளைப் பெறுகிறது. ஒரு புதிய கிரில் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் புதிய 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கதவுகளுக்கான புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளது.

Sunidhi Chauhan Kia Carnival Car

பின்புறத்தைப் பொறுத்தவரை, இது ஒத்த L-வடிவ LED டெயில்லைட்களைப் பெறுகிறது. கியா புதிய கார்னிவெல் காரில் உட்புறத்தையும் முழுமையாகப் அப்டேட் செய்துள்ளது. MPV இப்போது இரட்டை 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், மூன்று-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 11-இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 12-ஸ்பீக்கர் போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் வெல்டிலேட்டட் மற்றும் கால் சப்போர்ட் உடன் இரண்டாவது வரிசை சீட்டுகளுடன் வருகிறது. ஸ்மார்ட் ஸ்லைடிங் கதவு, எலெக்ட்ரிக் டெயில் லைட் டெயில்கேட் மற்றும் டுயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை பிற அம்சங்கள் இதில் உள்ளன.

பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, கியா முந்தைய தலைமுறை மாடலில் இருந்த அதே 2.2 லிட்டர் டீசல் இன்ஜினை வழங்குகிறது. இது 197 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க்கை வழங்குகிறது மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​கியா கார்னிவெல் காருக்கு சந்தையில் அதிக விலையுயர்ந்த டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி தவிர வேறு எந்த நேரடி போட்டியாளர்களும் இல்லை.

Sunidhi Chauhan Kia Carnival Car

வீடியோவில் காணப்படுவது போல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் விமான நிலையத்தில் இருந்தார். அவர் சிறிது நேரத்திற்கு முன்பு வாங்கிய ரூ.1.5 கோடி மதிப்புள்ள தனது லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 சொகுசு எஸ்யூவியில் விமான நிலையத்திற்கு வந்தார். லேண்ட் ரோவர் டிஃபென்டரைத் தவிர,இவரிடம் எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலங்கள் காஸ்ட்லியான கார்களை வாங்குவது என்பது சாதாரண விஷயம் தான் இந்த காரை பார்க்கவே ரசிகர்கள் பலர் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும் பயணிக்க இந்த பாடகி ஒரு சொகுசு எம்பிவி காரை பயன்படுத்துகிறார் என்ற தகவல் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடிகர் சுனில் ஷெட்டியும் காஸ்ட்லியான காரில் வந்தது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 19:15 [IST]
English summary
Sunidhi chauhan kia carnival car rs 76 lakh luxury mpv
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X