இவ்ளோ பெரிய நடிகரா இருக்காரு இப்போதான் எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்காரா! அதுவும் இந்த காரையா வாங்கினாரு??

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் சுனில் ஷெட்டி-யும் ஒருவர் ஆவார். அறிமுகம் தேவைப்படாத இந்திய நடிகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் பல மொழிப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பிரமாண்ட நடிகரே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் வாங்கிய கார் மின்சார கார் மாடல் எது? அந்த காரை அவர் வாங்கியதற்காந காரணம் என்ன? மற்றும் அந்த காரின் சிறப்பு வசதிகள், விலைகள் என்ன? என்பது போன்ற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Suniel shetty buys ev

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக எம்ஜி கோமெட் இவி (MG Comet Ev) இருக்கின்றது. முன்னதாக இந்த இடத்தை டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி (Tata Tiago EV) அலங்கரித்து வந்தது. இந்த நிலையிலேயே அதனிடம் இருந்த இடத்தை எம்ஜி கோமெட் தட்டி பறித்தது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 10.63 லட்சம் மட்டுமே ஆகும். அதேவேளையில், இதன் ஆரம்ப விலை ரூ. 7.98 லட்சமாக உள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்தான். இத்தகைய மலிவான விலையில் விற்கப்படும் மின்சார கார் மாடலையே இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுனில் ஷெட்டி வாங்கி இருக்கின்றார்.

Mg comet ev

சுனில் ஷெட்டி பல கோடி ரூபாய்க்கு அதிபதி ஆவார். அதேநேரத்தில் இவரிடத்தில் ஏற்கனவே கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்தமாதிரியான சூழலிலேயே, அவர் இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.

இதுவே அவரின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த தகவலை சுனில் ஷெட்டியே அவரின் சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். எம்ஜி கோமெட் ஓர் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். மேலும், மிகவும் சிறிய உருவத்தைக் கொண்டதாகவும் இந்த கார் இருக்கின்றது.

இந்த காரை நிறுத்தி வைக்க ஓர் ஆட்டோவை நிறுத்த தேவையான இடமே போதுமானதாக இருக்கின்றது. அதேவேளையில், பிரீமியம் அம்சங்களுக்கு இந்த காரில் சிறிதும் பஞ்சம் இருக்காது. விலை உயர்ந்த கார்களில் இருக்கக் கூடிய அம்சங்கள் பலவும் இதில் உள்ளன. இதனாலேயே இந்த கார் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக இருக்கின்றது.

இந்த நிலையிலேயே சுனில் ஷெட்டியையும் இந்த கார் கவர்ந்திருக்கின்றது. மேலும், இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக எம்ஜி நிறுவனம் பை-பேக் திட்டம் (Buy Back) போன்ற சிறப்பு பிளான்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், இதன் உடலும் அதிக உறுதியானது என கூறப்படுகின்றது.

17 ஹாட் ஸ்டாம்பிங் வாயிலாக இந்த காரை அது தயார் செய்திருக்கின்றது. இதுவும் கோமெட் அதிக உறுதியானது என்பதற்கு சான்றாக இருக்கின்றது. இதுதவிர, இந்த காரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக டூயல் ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், 55 கார் இணைப்பு அம்சம் மற்றும் 100 பிளஸ் வாய்ஸ் கமெண்ட் அக்சஸ், இரண்டு 10.25 அங்குல திரை மற்றும் ஸ்மார்ட் கீ உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எம்ஜி கோமெட் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பேஸ் (Pace), பிளே (Play) மற்றும் பிளஷ் (Plush) ஆகியவையே அவை ஆகும். மேலும், இந்த மின்சார காரில் 17.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக் இதுவாகும். மின் மோட்டாரை பொருத்த வரை 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டதே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய எளிமையான காரையே வாங்கி தான் ஒரு எளிய மனிதர் என்பதை சுனில் ஷெட்டி நிரூபித்து இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனாலேயே பலர் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே திரை நட்சத்திரங்களும் தங்களின் பார்வையை மின்சார வாகனங்கள் பக்கம் திருப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 26, 2023, 13:54 [IST]
English summary
Suniel shetty buys mg comet ev
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+