சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலத்தை தொடவே பயந்த விஞ்ஞானிகள்! துணிச்சலாக மேலே ஏறி கயிறு கட்டிய பெண்!
9 மாதத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மீண்டும் பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் திரும்பியுள்ளார். இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் சுனிதா வில்லியம்ஸ் வந்த ஸ்பேஸ் கிராஃப்ட் கடலில் வந்து விழுந்ததும் ஒரு பெண் துணிச்சலாக அந்த ஸ்பேஸ் கிராஃப்ட் மீது ஏறி அதை சோதனை செய்தார். இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் பூமிக்கு வந்த பிறகு என்ன நடந்தது? இதற்கு பின்னால் உள்ள தொழிற்நுட்ப காரணங்கள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சிறிது நாட்கள் செய்ய வேண்டிய பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் சென்றனர். அங்கு இவர்கள் சென்ற விண்கலம் திடீரென ஒரு பிரச்சனையை சந்தித்தது. இதனால் இவர்கள் உடனடியாக பூமிக்கு திரும்பி வரமுடியாத சூழ்நிலை உருவானது. இதனால் இவரை மீண்டு கொண்டு வர புதிய விண்கலத்தை அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்நிலையில் இதை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து செய்தனர்.

அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் என்ற ஸ்பேஸ் ஷிப் மூலம் இவர்களை மீட்டு கொண்டு வர திட்டமிடப்பட்டது.அதன்படி இந்த ஸ்பேஸ் ஷிப் விண்ணிற்கு அனுப்பபட்டது. அங்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இந்த ஸ்பேஸ் ஷிப் டாக் செய்யப்பட்டது. அங்கு அவர்களுக்கான வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டன. அதன்படி இவர்கள் இந்த ஸ்பேஸ் ஷிப்பிற்கு வந்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த டிராக்ன் ஸ்பேஸ் ஷிப் மொத்தம் 2 பாகங்களாக செயல்படும். ஒரு பாகம் பிரஷரைஸ் செய்ய்பட்ட பாகம். இதில் மனிதர்கள் பயணிக்க முடியும் மற்றொரு பாகம் பிரஷரைஷ் செய்யப்படாத பாகம். இதில் மனிதர்கள் பயணிக்க முடியாது. மனிதர்கள் பயணிக்கும் பாகத்திற்கான பவரை சோலார் மூலம் வழங்குவதற்காக இந்த பாகம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கும் அங்கிருந்து பூமியின் அட்மாஸ்பியர்உள்ளே வரும் வரை இவை சேர்ந்திருக்கும்.

சுனிதா வில்லியம்ஸ் குழுவினர். இந்த ஸ்பேஸ் ஷிப் உள்ளே ஏறியதும் அவர்கள் பூமியின் அட்மாஸ்பியர் உள்ளே வரும் வரை இது உதவி செய்யும் பின்னர் இது கழன்றுவிடும். அதன்பிறகு பூமியின் புவியீர்ப்பு விசையில் வேகமாக பூமியில் இந்த டிராகன் ஸ்பேஸ் ஷிப் விழுவதற்காக வரும். இந்த டிராகன் ஸ்பேஸ் ஷிப் குறிப்பிட்ட உயரத்திற்கு வரும்போது தறிகெட்டு அதிக வேகத்தில் வரும் இதை கட்டுப்படுத்த முதலில் இரண்டு பாராசூட்கள் திறக்கப்படும்.
இவை திறந்து இதன் வேகம் குறித்து குறிப்பிட்ட கண்ட்ரோலில் குறிப்பிட்ட உயரம் வந்தவுடன் மேலும் வேகத்தை கட்டுப்படுத்த அடுத்த 4 பாராசூட்கள் திறக்கப்படும். அதன் பிறகு இது மெதுவாக கீழே இறங்கும். மஇது சரியான வேகத்தில் கடலில் வந்துவிழும். இப்படியாக திட்டமிடப்படி தான் இந்த டிராகன் ஸ்பேஸ் ஷிப் பூமியை வந்தடைந்தது.

ஆனால் இது பூமி வந்தைடைந்ததும் இதை உடனடியாக மீட்கவில்லை. நாசா இதற்காக பிரத்தியேக கப்பல் ஒன்றை உருவாக்கியிருந்தது. இந்த ஸ்பேஸ் ஷிப் விழும் என கணிக்கப்பட்ட இடத்திற்கு அருகே இந்த ஸ்பேஸ் ஷிப் சென்றது. ஆனால் மிக அருகில் செல்லவில்லை. கப்பலில் உள்ள சிலர் நீழ் மூழ்கி ஆடையுடன் சிறிய படகில் ஏறி இந்த ஸ்பேஸ் ஷிப் இருக்கும் பகுதிக்க சென்றனர். அங்கு துணிச்சலான ஒரு பெண் மட்டும் இந்த ஸ்பேஸ் ஷிப்பில் ஏறி பல்வேறு சோதனைகளை செய்தார். இது பலருக்கு ஏன் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும்.
இந்த விண்கலம் பூமியின் அட்மாஸ்பியர் உள்ளே வரும் போது புவியீர்ப்பு விசை காரணமாக அதிக வேகத்தில் பூமியை நோக்கி வரும். இதனால் அதிக வெப்பத்தை விண்கலத்தின் வெளிப்புறம் தாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலும் இது சில நிமிடங்கள் கண்ட்ரோல் இல்லாமல் விழும் நேரமும். இதனால் இந்த தருணங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்பதை செக் செய்ய வேண்டும். அதிக வெப்பத்துடன் இது பூமிக்கு நுழைவதால் இதன் மேல் வெப்பம் அதிகமாக இருக்கும்.
இதனால் இதற்கான பயிற்சி பெற்ற அதே நேரம் இதற்கான ஆடைகளை அணிந்த ஒர நபர் தான் விண்கலத்தை சோதனை செய்ய முடியும். அதுவரை மற்றவர்கள் இதை செக் செய்ய முடியாது. இதன் காரணமாகவே ஒரு பெண் இதை சோதனை செய்தார். பின்னர் அந்த படகில் இருந்தவர்கள் இந்த ஸ்பேஸ் ஷிப்பை ஒரு கயிறு மூலம் கட்டி கப்பல் அருகே இழுத்து வந்தனர். அதன் பின்னர் கப்பலில் இருந்த கிரேன் மூலம் இவர்கள் ஸ்பேஸ் ஷிப்பை கப்பலுக்கள் ஏற்றி ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் வந்து ஸ்பேஸ் ஷிப்பை திறந்த உள்ளிருந்தவர்களை மீட்டு கொண்டு வந்தனர். இந்த வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு முன்னர் ஸ்பேஸ் ஷிப் முழுவதும் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு அது தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஸ்பேஸ் ஷிப் சூடாக இருப்பதால் அதன் வெப்பத்தை குறைப்பதற்காக செய்யப்பட்டது. இதன் காரணமாவே ஸ்பே்ஷி் வெளியே பெரிய அளவில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் அழுக்கு இருப்பது தெரிகிறது. பலருக்கும் இது குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறது.
சுனிதா வில்லியம் விண்வெளியில் நீண்ட நாட்கள் புவியீர்ப்பு விசை இல்லாமல் இருந்ததால் திடீரென் அவர் பூமிக்கு வந்ததும் நடக்கமுடியாமல் இருக்கும். அதன் காரணமாவே அவரை தூக்கி வந்தனர். பூமிக்கு வந்து 5 மணி நேரம் அவருக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு அவர் எழுந்து நடக்க துவங்கிவிட்டதாக தற்போது செய்திகள் உலா வருகின்றன. இதனால் விரைவில் இவர் பொது வெளிக்கு வந்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுனிதா வில்லியம்ஸ் தற்போது பெரும் போராட்டம் மற்றும் முயற்சிக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளார். இவர் பூமிக்கு வந்தது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வரலாற்றில் சுனிதா வில்லியம்ஸ் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்றே கூறப்படுகிறது. இவர் வந்த ஸ்பேஸ் ஷிப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது அடுத்தடுத்து பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









