சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பி வர இதான் காரணம்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்ட நிலையில் தற்போது அவர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற ஸ்பேஸ் கிராஃப்ட் தான் அவரை பத்திரமாக பூமிக்கு மீட்டு கொண்டு வந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுனிதா வில்லியம்ஸிற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பயணித்து வந்த டிராகன் ஸ்பேஸ் கிராஃப்ட் பற்றி பலர் தேடி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன்மாதம் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சேர்ந்து நடத்திய விண்வெளி ஆய்விற்காக சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சிலர் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். சுமார் ஒரு வார காலம் மட்டுமே அவர்களுக்கு அங்கு பணி இருந்தது. ஆனால் இவர்கள் பயணித்த விண்வெளி களத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் இவர்களால் மீண்டம் பூமிக்கு திரும்பி வர முடியவில்லை. இதனால் வேறு ஒரு களத்தை தயார் செய்து இவர்களை மீண்டு கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுமார் 9 மாதங்களுக்கு பிறகு இவர்கள் பயணித்த விண்களத்திற்கு மாற்றாக ஸ்பேஸ் எக்ஸ் நிறவனத்தின் டிராகன் என்ற ஸ்பேஸ் கிராஃப்டை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இதில் மொத்தம் 7 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் தான் உலகின் முதல் தனியார் ஸ்பேஸ்ட் கிராஃப்ட் மனிதர்களை பூமிக்கு திரும்ப கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் சுமார் 26.7 அடி உயரம் கொண்டது. இது சிலிண்டர் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விட்டம் மட்டும் 13 அடி ஆகும். சுமார் 328 சதுர க்யூப் இடம் இதில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இதில் பொருட்களை வைப்பதற்கு சுமார் 1300 சதுரஅடி க்யூப் இடம் இருகு்கிறது. இதன் மொத்த எடை 6000 கிலோ பூமிக்கு திரும்பி வரும்போது 3000 கிலோ எடை மட்டுமே திரும்ப வரும்.

இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் இருண்டு பாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருபாகம் இதற்கான பவரை வழங்கும் சோலர் பேனல்களை கொண்டிருக்கும். இது விண்ணில் பறக்கும் போது சர்வதேச விண்வெளி மையத்துடன் தொடர்பில் இருக்கும் போது மீண்டும் அங்கிருந்து கிளம்பும் போதும் ஸ்பேஸ் கிராஃப்ட் உடன் தான் இருக்கும். பூமிக்கு அருகில் வரும் போது தான் ஸ்பேஸ் கிராஃப்டை பிரிந்து செல்லும். இது பூமிக்கு அருகில் வரும் போது எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பரிக்கப்படுகிறது. இந்த பகுதி பிரஷ் இல்லாத பகுதியாக இருக்கும்.
பிரஷர் உள்ள பகுதியில் தான் மனிதர்கள் இருப்பா்கள். இந்த ஸ்பேஸ் கிராஃப்டை இயக்குவதற்கு மொத்தம் 16 இன்ஜின்கள் வழங்கப்பட்டிருக்கும். அதன் மூலம் தான் இது இயங்குகிறது. இந்த இன்ஜின்களுக்கு டிராகோ திரஸ்டர்ஸ் எனபெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் எல்லாம் கிரையோஜினிக் ரக இன்ஜின்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இது விண்வெளியில் மட்மே வேலை செய்யும் இதிலிருந்து சுமார் 400 நியூட்டர் பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் பூமிக்கு திரும்ப வரும்போது பூமியின் புவியீர்ப்பு விசையில் தான் திரும்ப வரும். இதில் இருந்துமுதலில் இரண்டு பாராசூட் மட்டும் வெளியாகும். அதுவரை தறிகெட்டு மிக வேகமாக பூமியை நோக்கி வரும் இந்த ஸ்பேஸ் கிராஃப்டை முதலில் வரும் பாராசூட் சற்று ஒழுங்குபடுத்தி வேகத்தை கட்டுப்படுத்தும். நிலையாக தரையிறங்க ஸ்பேஸ் கிராஃப்டை தயார் செய்யும். பின்னர் அடுத்தாக 4 பாராசூட் திறக்கப்பட்டு மிக மெதுவாக பூமியில் வந்து இந்த பாராசூட் மூலம் ஸ்பேஸ் கிராஃப்ட் மோதும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி தான் சுனிதா வில்லியம்ஸ் இந்த ஸ்பேஸ் கிராஃபிட்டிலிருந்து வெளியே வந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விண்வெளிக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் உள்ளிட்ட சாதனங்களில் மிக அதிக தொழிற்நுட்பங்கள் புகுத்தப்படுகிறது. விண்வெளிக்கு சென்ற மனிதர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது தற்போது உள்ள தொழிற்நுட்பத்திலும் மிக சவாலான விஷயமாகவே இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா என்ற கேள்வியை பலர் எழுப்பி வந்த நிலையில் இன்றைய தொழிற்நுட்பதை பயன்படுத்தி அவர் பத்திரமாக பூமிக்கு மீண்டு வந்துள்ளார். இது விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனை ஆகும்.


Click it and Unblock the Notifications









