மூழ்கி 80 ஆண்டுகளுக்கு பின் தலைகாட்டிய விபச்சார கப்பலில் பொற்காசு குவியல்: பரபரப்பு!

By Saravana Rajan

80 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய விபச்சார கப்பல் சிதிலமடைந்த நிலையில், தற்போது தண்ணீருக்கு வெளியே தலைகாட்டியிருக்கிறது. இந்த கப்பலில் பொற்காகாசு குவியல் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கப்பலை காண மக்கள் கூட்டம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையோரும் புதைந்து கிடக்கும் அந்த கப்பல் அலையின் சீற்றத்தால், தற்போது மெல்ல வெளியில் தெரியத் துவங்கியிருக்கிறது. இந்த கப்பல் தற்போது பல அமெரிக்க ஊடகங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்க ஊடகங்கள் வழியாக இந்த கப்பல் பற்றி தெரிவிக்கப்படும் சுவாரஸ்யத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

'சரக்கு' கப்பல்

'சரக்கு' கப்பல்

1921ம் ஆண்டு எஸ்எஸ் மான்டி கார்லோ என்ற பெயரில் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான ஆயில் டேங்கர் கப்பலாக அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், மது அருந்தும் பார், நடன அரங்கம், சூதாட்ட விடுதி, விபச்சார விடுதி என ஒரே குடையின் கீழ் பல்வேறு 'சேவை'களை வழங்கும் விசேஷ கப்பலாக மாற்றப்பட்டது.

என்ன ஐடியா...

என்ன ஐடியா...

அந்த காலத்தில் சூதாட்டம், விபச்சாரம் சட்டவிரோத செயல்களாக இருந்ததால், இந்த கப்பலை கடற்கரையோரம் நிறுத்த முடியாது. எனவே, அந்நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து 3 மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தி மேற்கண்ட சட்டவிரோத சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர் இதன் நிர்வாகிகள்.

புத்தாண்டு பார்ட்டி

புத்தாண்டு பார்ட்டி

கடந்த 1937ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஏராளமானோர் இந்த கப்பலில் கூடியிருந்தனர். புத்தாண்டு பார்ட்டியும் அமர்க்களமாக நடந்தது. ஆனால், அன்றே இந்த கப்பலின் அந்திம தினமாகவும் மாறியது.

கத்தி எடுத்தவன்...

கத்தி எடுத்தவன்...

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதுபோல, சட்டவிரோத தொழில்களின் கூடாரமாக மாறிய எஸ்எஸ் மான்டி கார்லோ கப்பலின் முடிவும் சோகத்தில் முடிந்தது. அதாவது, 1937ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட பெரும் சூறாவளியில் இந்த கப்பல் சிக்கியது.

சூறாவளியின் கோர தாண்டவம்

சூறாவளியின் கோர தாண்டவம்

சூறாவளியின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் அலைகழிந்ததால், நங்கூரம் பயனற்று போனது. கப்பல் திக்கு தெரியாமல் பயணித்து, கடைசியில் கலிஃபோர்னியா கடற்கரையோரம் வந்து தரைதட்டியது.

கப்சிப்

கப்சிப்

சட்டவிரோத செயல்கள் நடைபெற்ற கப்பல் என்பதால், இந்த கப்பலை உரிமை கோர அதன் நிர்வாகிகள் முன்வரவில்லை. இதனால், அந்த கப்பல் தரைதட்டி, மணலில் புதைந்தது.

தரைதட்டிய இடம்

தரைதட்டிய இடம்

எல் கேமினோ டவர் அமைந்திருக்கும் கொரனாடோ கடற்கரை பகுதியில்தான் தற்போது இந்த கப்பல் கிடக்கிறது. மேலும், அலை சீற்றத்தால், மணல் நீங்கி கப்பல் வெளியில் தெரிகிறது. இதனை காண்பதற்கு பலர் அங்கு கூடி வருகின்றனர். மீடியாவை சேர்ந்தவர்களும், டாக்குமென்ட்ரிகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

காலக் கண்ணாடி

காலக் கண்ணாடி

அப்போது செல்வந்தர்கள் இந்த கப்பலுக்கு செல்வதை தங்களது அந்தஸ்தின் அடையாளமாகவும், மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறும் இடமாக கருதினர். மேலும், இந்த கப்பலை காலக் கண்ணாடியாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

இந்த கப்பலின் கதையை மையமாக வைத்து கேம்ளிங் ஷிப் என்ற பெயரில் ஹாலிவுட் படம் கூட வந்துவிட்டது. இந்த படத்தில் கேரி கிராண்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.

 சீக்ரெட்

சீக்ரெட்

இந்த கப்பலில் சூதாட்டத்திற்கும், விபச்சாரத்திற்குமாக எக்கச்சக்கமாக பணமும், நாணயங்களும் புழங்கியிருக்கினறன. மேலும், இந்த கப்பலில் இருந்து வெள்ளி மற்றும் பொற்காசுகளை எடுத்திருப்பதாக தனது நினைவலைகளை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனால், இந்த கப்பலில் பொற்காசுகள் மற்றும் வெள்ளிக் காசு குவியல் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எல் நினோதான் காரணமாம்...

எல் நினோதான் காரணமாம்...

இதுவரை மணலால் மூடியிருந்த கப்பல் வெளியில் தெரிவதற்கு எல் நினோதான் காரணமாம். எல் நினோ பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட காற்றின் வேகமும், கடல் அலையின் சீற்றமும் இணைந்து இந்த கப்பலை பல அடிகள் மூடியிருந்த மணலை நீக்கியிருப்பதாக கூறுகின்றனர்.

விரிவாக்கப்பட்ட பனாமா கால்வாய் திறப்பு.... அதன் வரலாறும், சுவாரஸ்யங்களும்... !!

விரிவாக்கப்பட்ட பனாமா கால்வாய் திறப்பு.... அதன் வரலாறும், சுவாரஸ்யங்களும்... !!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sunken Gambling Ship Reappears 80 years Later off Coronado.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X