அறிமுகமாகி 10 நாட்களே ஆகும் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்.. தள்ளாடும் வயதிலும் கார்களை வாங்கி குவிக்கிறாரு!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் (Land Rover), கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதன் புகழ்பெற்ற ஆடம்பர கார் மாடலான டிஃபெண்டர் (Defender)-இல் ஓர் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. டிஃபெண்டர் ஆக்டா (Defender Octa), இதுவே அந்த புதிய தேர்வு ஆகும். 4x4 தொழில்நுட்ப வசதியுடன் இதனை லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வாயிலாக இந்த கார் சொகுசு அம்சங்களை மட்டுமல்ல ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த ஓர் வாகனமாகவும் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த காரையே இந்தி நடிகர் ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன்னி தியோல் என்கிற பெயரில் அறியப்படும் அஜய் சிங் தியோல் இவரே அந்த காரை வாங்கிய நடிகர் ஆவார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.79 கோடி ஆகும்.

Land rover defender octa edition

வழக்கமான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் மாடலைக் காட்டிலும் அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான அணிகலன்களைத் தாங்கியதாகவே டிஃபெண்டர் ஆக்டா காட்சியளிக்கின்றது. முன் மற்றும் பின் பக்கங்களில் புதிய பம்பர்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பெரிய கிரில், 20 அங்குல புதிய அலாய் வீல்கள், குவாட் எக்சாஸ்ட் உள்ளிட்டவற்றை இது கொண்டிருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தம ோட்டார் அதிகபட்சமாக 626 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது.

மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த காரில் சிறந்த ரைடு அனுபவத்தைப் பெற்றும் கொள்ளும் விதமாக 6டி (6D) டைனமிக்ஸ் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது காரை சற்றே கூடுதல் உயரமானதாக மாற்றியிருக்கின்றது.

இதனாலேயே எக்ஸ்ட்ராவாக ஆஃப்-ரோடை சமாளிக்கும் திறன் இந்த காருக்கு கிடைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 4.0 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. இத்தகைய காரையே திறன்மிக்க காரையே சன்னி தியோல் தற்போது வாங்கி இருக்கின்றார்.

Actor sunny deol buys land rover defender octa edition

இந்த ஆடம்பர காரை லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்றே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது அறிமுகமாகி 11 நாட்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே சன்னி தியோல் இந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரை போல இன்னும் பல ஆடம்பர கார்களை சன்னி தியோல் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், லேண்ட் ரோவரின் மற்றுமொரு புகழ்பெற்ற தயாரிப்பான ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி எல்டபிள்யூபி (Range Rover Autobiography LWB), டிஃபெண்டர் (Defender), போர்ஷே 911 ஜிடி3 டூரிங் (Porsche 911 GT3 Touring) ஆகிய கார் மாடல்களையே அவர் வைத்திருக்கின்றார். இதுமட்டுமல்ல ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற பிரீமியம் கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சன்னி தியோலுக்கு இப்போது வயது 67 ஆகின்றது. இந்த தள்ளாடும் வயதிலும் அவர் ஆடம்பர காரை அதிக எண்ணிக்கையில் வாங்கிக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக, இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆக்டா காரை வாங்கிய முதல் இந்தி நடிகர் ஆவார் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 18:06 [IST]
English summary
Sunny deol becomes first bollywood celebrity to purchase land rover defender octa edition
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+