பல கோடி ரூபாய் காரில் அடையாளமே தெரியாத மாதிரி வந்த அரசியல்வாதி இவரா! தலைப்பாகையோட வந்தது அவங்களை பாக்கவா!

பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சன்னி தியோல் (Sunny Deol). அரசியல்வாதி என்ற முகமும் இவருக்கு உண்டு. தற்போது பாராளுமன்றத்தின் லோக்சபா உறுப்பினராக சன்னி தியோல் பணியாற்றி வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியை (BJP - Bharatiya Janata Party) சேர்ந்தவர்.

சன்னி தியோலின் கடார் 2 (Gadar 2) திரைப்படம் தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியான கடார் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இதற்கு சன்னி தியோல் உள்ளிட்ட கடார் 2 படக்குழுவினரின் ப்ரமோஷனும் ஒரு காரணம்.

Sunny Deol Spotted In Land Rover Defender

இந்த சூழலில் கடார் 2 திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காகவும், ரசிகர்களை சந்திப்பதற்காகவும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சன்னி தியோல் வந்தார். அப்போது அவர் தலைப்பாகை அணிந்திருந்தார். உடன் அவரது சகோதரர் பாபி தியோலும் (Bobby Deol) வந்தார். அவர்கள் இருவரும் வந்தது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் ஆகும்.

இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. யூடியூப் (YouTube) சேனல் ஒன்றில் இந்த வைரல் வீடியோ (Viral Video) பகிரப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், திரையுலகினர் மற்றும் பிரபல மனிதர்கள் மத்தியில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளது.

Sunny Deol Land Rover Defender

சன்னி தியோல் கடந்த 2022ம் ஆண்டுதான் இந்த காரை வாங்கியதாக கூறப்படுகிறது. சன்னி தியோல் வாங்கியிருப்பது டிஃபெண்டர் 110 மாடல் ஆகும். இது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் லாங்-வீல் பேஸ் மற்றும் 5 டோர் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டிஃபெண்டர் 90 என்ற மாடலும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது 3 டோர் வெர்ஷன் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 3.0 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின்கள் ஆகும். இவை தவிர 5.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் உள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார், ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்றது. அத்துடன் பல்வேறு சொகுசு வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. இதில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் மெரிடியன் ஸ்பீக்கர் சிஸ்டம் போன்ற வசதிகளும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் ஆரம்ப விலை (Price) 93.55 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 2.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் கரடு முரடான ஆஃப் ரோடு சாலைகளில் நீங்கள் அடிக்கடி சாகச பயணங்களை மேற்கொள்ள கூடியவர் என்றால், உங்களுக்கு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் மிகவும் ஏற்றது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகம் என்பதால், செல்வந்தர்களால் மட்டும்தான் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 14, 2023, 19:03 [IST]
English summary
Sunny deol spotted in land rover defender viral video gadar 2 movie
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+