ஹேப்பி பர்த் டே தலைவி! சன்னி லியோன் பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்..
சன்னி லியோன் பிறந்த நாளை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அவர் பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தால் நீங்கள் பிரம்மித்து போவது உறுதி.

கனடாவில் பிறந்த கரண்ஜித் கவுர் வோக்ராவின் பிறந்த நாளை, நேற்று (மே 13) ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி தீர்த்தது. குறிப்பாக சிங்கிள்களாக வாழ்க்கையை ஓட்டி வரும் இளைஞர்கள்தான் கரண்ஜித் கவுர் வோக்ராவின் பிறந்த நாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

யார் அந்த கரண்ஜித் கவுர் வோக்ரா என கேட்கிறீர்களா? அட நம்ம தலைவி சன்னி லியோன் தாங்க. சன்னி லியோனின் இயற்பெயர்தான் கரண்ஜித் கவுர் வோக்ரா. சன்னி லியோனின் தந்தை திபெத்தில் பிறந்தவர். ஆனால் அவர் வளர்ந்தது எல்லாம் டெல்லியில்தான்.

அதே சமயம் சன்னி லியோனின் தாய் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஆக மொத்தத்தில் சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும், அவர் பிறந்தது என்னவோ கனடாவில். இருந்தபோதும் தற்போது சன்னி லியோன் இந்தியாவில் செட்டில் ஆகி விட்டார்.

கணவர் டேனியல் வெப்பர் மற்றும் குழந்தைகளுடன் சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சன்னி லியோனை போல் அவரது கணவரும் ஆபாசப்பட நடிகர்தான். ஆனால் அவர் ஒரு இசை கலைஞரும் கூட. ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றாலும் சன்னி லியோன் நர்ஸிங் படித்துள்ளார்.

சன்னி லியோனுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். எனவே விலை உயர்ந்த பல்வேறு சொகுசு கார்களை அவர் வாங்கி குவித்துள்ளார். சன்னி லியோனிடம் உள்ள லக்ஸரி கார்களில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் அடங்கியுள்ளன.

மஸராட்டி ஜிப்லி நெரிஸ்மோ (Maserati Ghibli Nerissimo) காரை சன்னி லியோன் கடந்த 2017ம் ஆண்டு வாங்கினார். இந்த கார் அமெரிக்காவில் வாங்கப்பட்டது. அமெரிக்காவில் மஸராட்டி ஜிப்லி நெரிஸ்மோ காரின் விலை சுமார் 80 ஆயிரம் டாலர்கள்.

இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக 52 லட்ச ரூபாய். ஆனால் இந்தியாவில் மஸராட்டி ஜிப்லி மாடலின் விலை சுமார் 1.1 கோடி ரூபாயில் இருந்துதான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சன்னி லியோன் வாங்கியுள்ள இந்த கார் ஸ்பெஷல் மாடல் ஆகும்.

ஏனெனில் அமெரிக்கா மற்றும் கனடா மார்க்கெட்களுக்காக ஒட்டுமொத்தமாகவே 450 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதில் ஒரு காரைதான் சன்னி லியோன் வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கியபோது, அதன் புகைப்படத்தை சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அமெரிக்க மார்க்கெட்டில் இந்த கார் 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் வி6 இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. ஒரே இன்ஜின்தான் என்றாலும், 345 பிஎச்பி மற்றும் 404 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு விதமாக அவை ட்யூன் செய்யப்பட்டுள்ளன.

இதில் எந்த வெர்ஷனை சன்னி லியோன் வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட 345 பிஎச்பி வெர்ஷன் 5.6 வினாடிகளை எடுத்து கொள்ளும். ஆனால் 404 பிஎச்பி வெர்ஷன் இதை வெறும் 4.8 வினாடிகளில் செய்து விடும்.

இந்த இரண்டு வேரியண்ட்களிலும் 8 ஸ்பீடு இஸட்எப் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஜிப்லி டீசல் மாடலை மட்டுமே மஸராட்டி நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே (Maserati Quattroporte) காரையும் சன்னி லியோன் வைத்துள்ளார். இது மிகவும் பிரபலமான மஸராட்டி கார் ஆகும். இந்த காரை சன்னி லியோன் கடந்த 2014ம் ஆண்டே வாங்கி விட்டார். அதேபோல் இந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

மஸராட்டி நிறுவனம் சமீபத்தில்தான் 2019 குவாட்ரோபோர்ட்டே காரின் கிராண்லூஸ்கோ (GranLusso) வெர்ஷன் மற்றும் கிராண்ஸ்போர்ட் (Gransport) வெர்ஷன்களை அறிமுகம் செய்தது. இதில், கிராண்லூஸ்கோ வெர்ஷனின் ஆரம்ப விலை 1.74 கோடி ரூபாய்.

அதே சமயம் கிராண்ஸ்போர்ட் வெர்ஷனின் ஆரம்ப விலை 1.79 கோடி ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். குவாட்ரோபோர்ட்டே காரில், 3.0 லிட்டர் வி6 டர்போடீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சன்னி லியோனிடம் உள்ள மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே காருக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. இந்த காரை சன்னி லியோனுக்கு பரிசாக கிடைத்தது ஆகும். கணவர் டேனியல் வெப்பர்தான் சன்னி லியோனுக்கு இந்த காரை ''கிப்ட்'' செய்தார்.

பொதுவாக இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலமான மனிதர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற கார்கள்தான் புகழ்பெற்று விளங்குகின்றன. அவர்கள் மஸராட்டி கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் சன்னி லியோன் 2 மஸராட்டி கார்களை வைத்துள்ளார். இதுதவிர பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) கார் ஒன்றும் சன்னி லியோனிடம் உள்ளது. இது லக்ஸரி செடான் ரக கார் ஆகும். மும்பையில் தனது வழக்கமான பயணங்களுக்கு இந்த காரைதான் சன்னி லியோன் பயன்படுத்துகிறார்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் இந்தியாவில் ரூ.1.20 முதல் ரூ.2.45 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. இந்த காரும் கூட கணவர் டேனியர் வெப்பர் மூலம் சன்னி லியோனுக்கு பரிசாக கிடைத்ததுதான்.

கோடிகளில் விற்பனை செய்யப்படும் கார்களை பரிசாக வாங்கி கொடுக்கும் கணவர் கிடைக்க சன்னி லியோன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில்தான் 2020 7-சீரிஸ் காரை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாம் தவிர ஆடி ஏ5 கார் ஒன்றும் சன்னி லியோனிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்னி லியோனிடம் இருப்பதிலேயே இதுதான் விலை மலிவான கார் என்றும் கூட சொல்லலாம். இந்த காரின் விலை 55.48 லட்ச ரூபாய். சன்னி லியோனை போலவே அவரது கார் கலெக்ஸனும் ''ஹாட்'' ஆகதான் உள்ளது. இந்த நேரத்தில் நாமும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கொள்வோம். ஹேப்பி பர்த் டே சன்னி லியோன்!!!
ImageSources:News 18,Sunny Leone


Click it and Unblock the Notifications








