பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!
கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பமான ஆபாச பட நடிகைகளில் சன்னி லியோன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கும், வாசகர்களுக்கும் புத்தெழுச்சி தரும் வகையில் இந்த செய்தியில் சன்னி ல
நீல பட உலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டு இப்போது பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கும் சன்னி லியோன் புயல் மெல்ல இந்தியாவை முழுவதுமாக மையல் கொள்ள செய்திருக்கிறது. இப்போது இந்தியாவின் பட்டித் தொட்டியெங்கும் சன்னி லியோன் பெயர் பரவி விரவி இருக்கிறது.
இதற்கு சாட்சியாக, இந்திய அளவில் கூகுளில் அதிகம் கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோன் முதலிடம் பெற்றுள்ளார். வேறு செய்திக்காக கூகுள் செய்தபோது, இந்த தகவல் கண்ணில் பட்டது. இந்த தகவல் மனதில் ஏற்றிய பின், எமது கைகள் பரபரக்க ஆரம்பித்தது. சன்னி லியோனுக்கு சினிமா தவிர்த்து, கார்கள் மீது அதிகம் பிரியம் கொண்டவராக இருக்கிறார். குறிப்பாக, ரொம்ப பவர்ஃபுல்லான கார்கள் என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம். அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்தும் கார்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதி உயர் சொகுசு கார் மாடலான 7 சீரிஸ் 760எல்ஐ மாடல் சொகுசு கார் ஒன்று சன்னி லியோனிடம் உள்ளது. பிரம்மாண்டமான தோற்றம், பவர்ஃபுல் எஞ்சின், அதிக இடவசதி ஆகியவை சன்னி லியோனை கவர்ந்துவிட்டது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 760எல்ஐ மாடலில் இருக்கும் 6.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 544 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல் படைத்தது. 0 - 100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 5 நொடிகளில் கடந்து விடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

வேகமாக ஓட்டுவது என்றால் சன்னி லியோனுக்கு மிகவும் பிடித்த விஷயம். எனவே, சன்னி லியோன் எதிர்பார்ப்பை இந்த காரின் எஞ்சின் கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது. மேலும், இந்த காரின் தாராள இடவசதியும் அவருக்கு ஏற்றதாக இருக்கிறது.

மஸராட்டி கிப்லி
சன்னி லியோனுக்கு பவர்ஃபுல் கார் பிடிக்கும் என்பது பிறரைவிட அவரது கணவர் டேனியல் வெப்பருக்கு நன்றாக தெரியும். அதனால், அவர் மஸராட்டி கிப்லி கார் ஒன்றை வாங்கி சன்னி லியோனுக்கு பரிசாக அளித்துள்ளார்.

இந்த காரின் பவர்ஃபுல் கார் சன்னி லியோனை கவர்ந்துவிட்டது. தனக்கு பவர்ஃபுல் எஞ்சின் கார் என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை சிம்பாளிக்காக சொல்லும் விதத்தில் அடிக்கடி இந்த காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மஸராட்டி கிப்லி காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய கட்டமைப்பை பெற்றிருக்கிறது.
Trending On DriveSpark Tamil:

ஆடி ஏ5
எங்கும் நீலம், எதிலும் நீலம் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவரான சன்னி லியோனிடம் ஆடி ஏ5 சொகுசு கார் இருக்கிறது. அதாவது, சன்னி லியோன் அதிகம் பயன்படுத்துவது இந்த காராக குறிப்பிடப்படுகிறது. ஆம், நினைத்தது போலவே இந்த கார் நீல நிறம் கொண்டது.

சன்னி லியோனை பார்த்து பார்த்து கண்கள் பூத்து கிடக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, தனக்கு பிடித்தமான விஷயங்களில் குதிரையேற்றத்துக்கு பிறகு இந்த காரை ஓட்டுவதுதான் உச்சக்கட்ட இன்பத்தை அளிப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த ஆடி ஏ5 காரில் 3.0 லிட்டர் வி6 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 272 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0- 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மூன்று கார்களும் சன்னி லியோன் கராஜில் கர்ஜித்து காத்திருக்கின்றன. எந்த நேரம் சன்னி லியோன் அழைப்பார் என்ற ஏக்கத்துடன்...!
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








