ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

கடந்த 13ந் தேதி 37வது பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் பிறந்தாளுக்கு புதிய கார் வாங்குவார் என பரபரத்தது.

By Saravana Rajan

ஆங்கில ஆபாச பட உலகை சூறாவளியாக ஆட்டுவித்த நடிகை சன்னி லியோன் இப்போது பாலிவுட் உலகில் மையம் கொண்டிருக்கிறார். கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்ற உடனே, "சன்னி லியோனை கூப்பிடு" எனும் அளவுக்கு முன்னணி இயக்குனர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கிறார். இயக்குனர்கள் சொல்வதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, காட்சியை கச்சிதமாக முடிக்கும் திறமைசாலியாக இருப்பதே இதற்கு காரணம்.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

ஆபாச பட உலகில் இருந்தபோது பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கி பயன்படுத்திய சன்னி லியோன், பாலிவுட்டிற்கு வந்தவுடன் பெரிய சைஸ் சொகுசு செடான் கார்களை வாங்கி பயன்படுத்துகிறார். கடந்த 13ந் தேதி 37வது பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் பிறந்தாளுக்கு புதிய கார் வாங்குவார் என பரபரத்தது. ஆனால், இப்போது இருக்கும் பவர்ஃபுல் கார்கள் தற்சமயத்திற்கு போதும் என்ற திருப்திபட்டு கொண்டிருக்கிறார். அவரிடம் இருக்கும் பிரம்மாண்ட கார்களின் விபரத்தை இப்போது பார்க்கலாம்.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்யும் மிக உயர்வகை செடான் காரான 7 சீரிஸ் கார் சன்னி லியோன் வீட்டு கராஜை அலங்கரிக்கிறது. தாராள இடவசதி, சக்திவாய்ந்த எஞ்சின் ஆகியவை சன்னி லியோனுக்கு பிடித்தமான விஷயமாக இருக்கிறது. இடவசதியுடன் அதிநவீன தொழில்நுட்ப மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை அளிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

இந்த காரில் 6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 544 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 0-100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும். அந்தளவு செயல்திறன் கொண்டது. இந்த சக்திவாய்ந்த கார் சன்னி லியோனை பிரியபட வைத்ததில் ஆச்சரிப்படுவதற்கில்லை. இந்த கார் ரூ.1.15 கோடி விலை மதிப்பு கொண்டது.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

ஆடி ஏ5

சன்னி லியோனிடன் ஆடி நிறுவனத்தின் மிக உயரிய வகை ஏ5 செடான் காரும் உள்ளது. சொகுசு கார்களில் ஹேண்ட்ஸமான செடான் கார் மாடலாக இருப்பது சன்னி லியோனை கவர்ந்து இழுத்திருக்கலாம். இந்த கார் இடவசதியிலும் குறைவில்லாதது.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

ஆடி ஏ5 காரில் 3.0 லிட்டர் வி6 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 272 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்து. 0 - 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த கார் ரூ.55 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

ஆடி, பிஎம்டபிள்யூகளின் பவரை பார்த்து அலுத்துபோன சன்னி லியோனுக்கு இன்னும் பவர்ஃபுல்லான செடான் கார் வாங்க வேண்டும் என்ற அவா எழுந்தது. சன்னி லியோனின் மனதில் நீண்ட காலமாக இருந்த அந்த பவர்ஃபுல் தாகத்தை அவரது கணவர் டேனியல் வெப்பர் உணர்ந்து கொண்டுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

சன்னி லியோனின் அந்த தாகத்தை தீர்ப்பதற்கு சரியான மாடல் மஸராட்டி குவோட்ரோபோர்ட்டே என்று அவரது கணவர் டேனியல் வெப்பர் முடிவு செய்தார். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு சன்னி லியோனின் பிறந்தநாளன்று மஸராட்டி குவார்ட்டோபோர்ட்டே காரை வாங்கி பரிசளித்தார்.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

மஸராட்டி குவார்ட்ரோபோர்ட்டே காரின் தோற்றம் மிக ஆளுமையானது. அட்டகாசமான இந்த காரில் 275 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரூ.1.44 கோடி விலை மதிப்பு கொண்டது.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

மஸராட்டி கிப்லி

சக்திவாய்ந்த மஸராட்டி குவோட்ரோபோர்ட்டே கார் சன்னி லியோனின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்தது. இதனால், மஸராட்டியின் மீது சன்னி லியோனுக்கு தனி பிரியம் ஏற்பட்டது. ஒரு மஸராட்டி போதாது என்று, கடந்த ஆண்டு அடுத்து ஒரு மஸராட்டியை வாங்கினார்.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

கடந்த ஆண்டு சன்னி வாங்கிய மஸராட்டி கிப்லி காரில் இருக்கும் வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 330 எச்பி பவரை அளிக்கும் சக்திவாய்ந்தது. ரூ.1.14 கோடி விலை மதிப்பு கொண்டது. இந்த கார் இப்போது சன்னி லியோனின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்!!

சன்னி லியோனை பார்த்து பார்த்து கண்கள் பூத்து கிடக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, தனக்கு பிடித்தமான விஷயங்களில் குதிரையேற்றத்துக்கு பிறகு கார் ஓட்டுவதுதான் உச்சக்கட்ட இன்பத்தை அளிப்பதாக கூறியிருக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sunny Leone Luxury Car Collection Details.
Story first published: Thursday, May 17, 2018, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X