இந்த முறை பாலைவனத்தில் எஸ்யூவியுடன் கொட்டம் அடித்த சன்னி லியோன்!
கட்டில் காட்சிகளில் உருண்டு புரண்டு ரசிகர்களின் மனதை தள்ளாட்டம் போட வைத்த பாலிவுட் சைரன் சன்னி லியோன் இந்த முறை பாலைவன மணலில் உரண்டு புரண்டு ரசிகர்களுக்கு புது விருந்து கொடுத்திருக்கிறார்.
ஆம், சமீபத்தில் துபாயில் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த சன்னி லியோன் அங்கு டெசர்ட் சஃபாரி எனப்படும் பாலைவன சாகசப் பயணம் மேற்கொண்டார். அந்த புதுவித அனுபவத்தை அவர் எவ்வாறு கொண்டாடினார் என்பது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவர்களது ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

பேஷன் வீக்
கடந்த வாரம் துபாயில் பேஷன் வீக் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகை சன்னி லியோன் பங்கேற்றார். வழக்கம்போல் விழாவை சிறப்பித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சாகசப் பயணம்
நடிப்பில் போரடித்துவிட்ட அவருக்கு துபாயில் புகழ்பெற்ற டெசர்ட் சஃபாரி சாகசப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்து வைத்திருந்தார். டெசர்ட் சஃபாரி பயணத்தை பாலிவுட் பிரபலங்கள் பலர் செய்து வந்து அனுபவத்தை சன்னி லியோனுடன் பகிர்ந்து கொண்டிருந்ததால், அதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

குழு
தனது கணவர் டேனியல் வெப்பர் உள்பட நண்பர்கள் சிலருடன் டெசர்ட் சஃபாரி சாகசப் பயணத்தை மேற்கொண்டார்.

உற்சாகம்
பாலைவன சாகசப் பயணத்தின்போது மிகுந்த உற்சாகத்தில் திளைத்த சன்னி லியோன் வழக்கம்போல் உரண்டு புரண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், விதவிதமான ஆங்கிளிலும் போஸ் கொடுத்து எடுத்த படங்களையும் சமூக வலைதளங்களில் போட்டு ரசிகர்களுக்கும் விருந்து படைத்தார்.

எஸ்யூவி மாடல்
துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் மேற்கொள்ளப்படும் டெசர்ட் சஃபாரி எனப்படும் பாலைவன சாகசப் பயணத்திற்கு பெரும்பாலும் ஜப்பானிய தயாரிப்புகளான நிசான் பேட்ரோல் மற்றும் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சன்னி லியோன் சென்றது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் மாடல்.

சிறப்பானது...
பாலைவனத்தில் பல அடி உயரத்திற்கான மணல் படுகைகளில் மிக அசால்ட்டாக சீறிச் செல்லும் தொழில்நுட்பங்களை கொண்டது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி. இதன் 4 வீல் டிரைவ் சிஸ்டம், மல்டி டெர்ரெய்ன் ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சக்திவாய்ந்த வி8 டர்போ டீசல் எஞ்சின் போன்றவை இந்த பாலைவன சாகசப் பயணங்களை மிக எளிதாக கையாளும்.


Click it and Unblock the Notifications