அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தனது ஆசையை ஓபனாக சொல்லியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

நம் அனைவரின் மனதிலும் 'ட்ரீம் கார்' என ஒன்று கண்டிப்பாக இருக்கும். எப்படியாவது வாழ்க்கையில் அந்த காரை வாங்கி விட வேண்டும் என்ற லட்சியத்தை நாம் கொண்டிருப்போம். சாதாரண மக்கள் மட்டுமல்லாது, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இந்த வகையில் சன்னி லியோனின் 'ட்ரீம் கார்' பற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

திரைப்பட நடிகையான சன்னி லியோனுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 'அந்த' மாதிரி படங்களில் அவர் நடித்திருந்தாலும் கூட, அவரது நல்ல மனதிற்காகவே ரசிகர்கள் அவரை விரும்புகின்றனர். சன்னி லியோன் தனது பெரும்பாலான நேரத்தை இந்தியாவில்தான் செலவிடுகிறார்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

ஆனால் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வசிப்பது சன்னி லியோனின் வழக்கம். அங்கு சன்னி லியோனிடம் விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக உள்ளன. சன்னி லியோனை போலவே, அவரது கார்களும் கவர்ச்சியானவைதான். எனவே ஏதேனும் ஒரு விலை உயர்ந்த லக்ஸரி கார்தான், அவரது ட்ரீம் காராக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

இந்தியர்களின் மனதை விட்டு எப்போதும் நீங்காத ஹிந்துஸ்தான் அம்பாஸிடர்தான் நம்ம சன்னி லியோனின் கனவு கார். எதிர்காலத்தில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் ஒன்றை பெற விரும்புவதாக சன்னி லியோனே தெரிவித்துள்ளார். அவரிடம் சமீபத்தில் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது இந்த தகவலை அவர் கூறினார்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

மசபெல்லா இந்தியா என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கார் பயணத்தின்போது சன்னி லியோனிடம் இந்த நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சன்னி லியோன் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரது கணவர் காரின் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது பிங்க் நிற ஹிந்துஸ்தான் அம்பாஸிடர்தான் தனது ட்ரீம் கார் என சன்னி லியோன் கூறினார்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

அதே சமயம் அவரது விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதன்படி கார் பிங்க் நிறத்தில் இருப்பதும் அவரது விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை சன்னி லியோனால் சரியாக ஓட்ட முடியாது என்பதால், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் செட்-அப்பும் இருக்க வேண்டுமாம்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

இந்த வரிசையில் கேபினிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். இதன்படி அம்பாஸிடர் காரின் கேபின் பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பது சன்னி லியோனின் விருப்பமாக உள்ளது. அதேபோல் லெதர் எதுவும் இருக்க கூடாது எனவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

விலங்குகளை கொல்வதற்கு எதிரான கொள்கையை சன்னி லியோன் பின்பற்றி வருகிறார். விலங்குகளை கொல்ல கூடாது என்ற கொள்கை காரணமாக லெதர் வேண்டாம் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார். பீட்டா அமைப்பின் செயற்பட்டாளராகவும் சன்னி லியோன் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

அமெரிக்காவில் லிமிடெட் எடிசன் மஸராட்டி கிப்லி நெரிஸ்மோ காரை, சன்னி லியோன் வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சன்னி லியோன் இந்த காரை வாங்கினார். இந்தியாவை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ 730 எல்டி காரில் சன்னி லியோன் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிந்துள்ளது. இந்த கார் சன்னி லியோனின் கணவரால், அவருக்கு பரிசளிக்கப்பட்டது ஆகும்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

இப்படி பல்வேறு கார்களை வைத்துள்ள சன்னி லியோன், அம்பாஸிடர் கார்தான் தனது 'ட்ரீம் கார்' எனக்கூறி இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் அம்பாஸிடர் காரை ஒன்றும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆண்ட அரசன் அம்பாஸிடர்தான். அந்த காலத்தில் அம்பாஸிடர் கார் வைத்திருந்தாலே தனி கௌரவம்தான்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

இந்தியாவில் நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த அம்பாஸிடர் காருக்கு இன்னமும் கூட கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 1980கள் மற்றும் 1990களில் அம்பாஸிடர் கார் புகழின் உச்சத்தில் இருந்தது. உயர்ந்த பொறுப்புகளை வகித்த அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை பலரும் அம்பாஸிடர் காரை விரும்பி பயன்படுத்தினர்.

அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் விசாலமான இட வசதி கிடைத்தது. அந்த காரின் பிரம்மாண்ட வெற்றிக்கு இது மிகவும் முக்கியமான காரணம். அத்துடன் பாதுகாப்பு விஷயத்திலும் அம்பாஸிடர் தூள் கிளப்பியது. சிறப்பான கட்டுமான தரத்துடன், மிகவும் பாதுகாப்பான காராக விளங்கியதாலும், அம்பாஸிடர் காரை அனைவரும் நேசித்தனர்.

அம்பாஸிடர் காரை இன்னமும் புதிது போலவே பராமரித்து வரும் கார் ஆர்வலர்கள் பலரும் இங்கு இருக்கவே செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு காரைதான் தன் 'ட்ரீம் கார்' என சன்னி லியோன் கூறியுள்ளார். இதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு 'ட்ரீம் கார்' இருக்கும். உங்கள் 'ட்ரீம் கார்' எது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, May 18, 2020, 18:27 [IST]
English summary
Sunny Leone's Dream Car - Hindustan Ambassador. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+