ரெண்டே கால் கோடி ரூபா கார்ல போன இவங்க ஆபாச பட நடிகையா! கௌம்பறதுக்கு முன்னால செஞ்ச காரியத்த பாத்தா அப்படி தெரில
இந்தியாவில் ஒரு சில நடிகர், நடிகைகளின் அணுகுமுறை குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதாவது ரசிகர்களிடம் ஒரு சில நடிகர், நடிகைகள் திமிராக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதை நிரூபிக்கும் வகையிலான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் உள்ளன. இதற்கு அப்படியே நேர் எதிராக ஒரு சில நடிகர், நடிகைகளின் அணுகுமுறை இருக்கும். அதாவது திரையில் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட, நிஜத்தில் மிகவும் எளிமையானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள். இதற்கு அந்த காலத்து எம்.என். நம்பியார் (M. N. Nambiar) ஒரு உதாரணம்.
இவர் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் கூட, நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதராக அறியப்படுகிறார். அந்த காலத்து எம்.என். நம்பியார் போல, தற்போதைய தலைமுறை நடிகர், நடிகைகளில் பலரும் கூட, மக்களின் மனம் கவர்ந்தவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதற்கு சன்னி லியோனை (Sunny Leone) ஒரு உதாரணமாக கூற முடியும். இவர் ஏராளமான ஆபாச திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட, குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவது, இயற்கை சீற்றங்களின்போது தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவி வழங்குவது போன்ற நல்ல விஷயங்களுக்காகவும் அறியப்படுகிறார்.
அத்துடன் ரத்த தானம், புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய நல்ல விஷயங்களையும் சன்னி லியோன் செய்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள சன்னி லியோனின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மீண்டும் ஒரு முறை நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்துள்ளது.

இந்த வைரல் வீடியோவில், உதவி தேவைப்பட்ட குழந்தைகள் சிலருக்கு சன்னி லியோன், பணம் கொடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு பிறகு அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) காரில் ஏறி புறப்படுகிறார். இந்த வைரல் வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது? என்ற தகவல் தெரியவில்லை.
ஆனால் உதவி தேவைப்பட்ட குழந்தைகளுக்கு பணம் கொடுத்த காரணத்தால், சன்னி லியோனின் ரசிகர்கள், இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு பணம் கொடுத்த சன்னி லியோனின் நடவடிக்கையை போல், இந்த வீடியோவில் நாம் காணும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரும் கவனம் ஈர்த்துள்ளது.
ஏனெனில் இது மிகவும் விலை உயர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஆரம்ப விலையே 1.84 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.87 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே.
ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 2.30 கோடி ரூபாய் மற்றும் 2.34 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் (Luxury Car) என்பதால், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் அதிபர் உள்ளிட்ட செல்வந்தர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக திகழ்கிறது.
இதன்படி ஷாருக்கான் (Shahrukh Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சயீஃப் அலி கான் (Saif Ali Khan), நாகார்ஜூனா (Nagarjuna) மற்றும் அலியா பட் (Alia Bhatt) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடமும், சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் வீரேந்திர சேவாக் (Virender Sehwag) கிரிக்கெட் வீரர்களிடமும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உள்ளது.
அத்துடன் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்திடமும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் இருக்கிறது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு 31.3 இன்ச் 8K டச்ஸ்க்ரீன் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) மற்றும் ஆடி ஏ8எல் (Audi A8L) ஆகிய கார்களுக்கு எல்லாம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு செடான் (Luxury Sedan) காரை வாங்குபவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகளை போலவே, சன்னி லியோனும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை அதிகமாக விரும்ப கூடியவர் ஆவார். இதற்கு அவரது விலை உயர்ந்த கார் கலெக்ஸனே (Car Collection) சாட்சி.
சன்னி லியோனிடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மட்டுமல்லாது, மஸராட்டி கிப்லி (Maserati Ghibli), மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே (Maserati Quattroporte), ஆடி ஏ5 (Audi A5) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் க்ளாஸ் (Mercedes Benz GL-Class) ஆகிய சொகுசு கார்கள் எல்லாம் இருக்கின்றன.
இதில், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை போலவே, மஸராட்டி கிப்லி, மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே மற்றும் ஆடி ஏ5 ஆகியவையும் சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த கார்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் மூலம் சன்னி லியோன் செடான் கார்களின் ரசிகை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மறுபக்கம் அவரது கார் கலெக்ஸனில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் க்ளாஸ் காரானது, எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதில் பெரும்பாலான கார்கள், சன்னி லியோனுக்கு அவரது கணவர் டேனியல் வெப்பரால் (Daniel Weber) பரிசாக வழங்கப்பட்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதேபோல் மற்றொரு விஷயத்தையும் நாங்கள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள கார் கலெக்ஸனில் இடம்பெற்றிருக்கும் ஒரு சில கார்களை சன்னி லியோன் அமெரிக்கா (United States) போன்ற வெளிநாடுகளில் வைத்து பயன்படுத்தி வருகிறார் என்பதுதான் அந்த விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








