மக்கள் கூடும் பகுதியில் சர்வ சாதாரணமாக சென்ற பிரபல நடிகை! புது கார் வாங்கியதை சொன்ன மாதிரியும் ஆச்சு!!

சன்னி லியோன் (Sunny Leone), உலகில் எந்த நாட்டிலும் இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஆபாச படங்கள் மூலமாக பிரபலமாகிய சன்னி லியோன், கனடாவில் பிறந்தவராக இருப்பினும், தற்சமயம் கணவர் மற்றும் குழந்தைகள் உடன் முழுவதுமாக இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

ஆரம்பத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், அதன்பின் 2012இல் பாலிவுட்டில் (Bollywood) நுழைந்தார். ஹாலிவுட் நடிகை என்கிற பெயரின் மூலமாக பாலிவுட்டில் எளிதாக சன்னி லியோனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பின், தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ள நடிகை சன்னி லியோன் நேபாளம் மற்றும் வங்காள தேச திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sunny leone spotted with benz

இந்த 2025இல் இருந்து மலையாள சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ள சன்னி லியோன் தொடர் பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளினால் மும்பையில் பெரிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனாலேயே, நடிகை சன்னி லியோனை அவ்வப்போது மும்பை விமான நிலையத்தில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபத்திலும் சன்னி லியோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மும்பை விமான நிலையத்திற்கு தனது புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் நடிகை சன்னி லியோன் வந்தது ஆகும். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து இவர் புதியதாக வாங்கியிருப்பது ஜி.எல்.எஸ் (GLS) என்கிற லக்சரியான எஸ்யூவி கார் ஆகும். பளபளக்கும் கருப்பு நிறத்திலான ஜிஎல்எஸ் காரில் இருந்து சன்னி லியோன் இறங்கி வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

sunny leone spotted with benz

வெள்ளை நிறத்திலான உடையில் வீடியோவில் காட்சித்தரும் சன்னி லியோன், காரில் இருந்து இறங்கி மும்பை விமான நிலையத்தின் விஐபி-களுக்கான நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்வதை காணலாம். பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலர் இந்த வழியாக விமான நிலையத்திற்குள் செல்வதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விலையுயர்ந்த கார்களில் விமான நிலையத்திற்கு வருவது வழக்கம்.

நடிகை சன்னி லியோன் மிக சமீபத்தில் வாங்கியிருக்கும் கருப்பு நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த கருப்பு நிறத்தை 'அப்சிடியன் கருப்பு' (Obsidian Black) என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், சோடாலைட் நீலம், செலினைட் சில்வர், ஹை-டெக் சில்வர் மற்றும் போலார் வெள்ளை உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்தியாவில் ஜிஎல்எஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.

3 லிட்டர், 6-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 3 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் ஜிஎல்எஸ் கார் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.34 கோடியாகவும், டீசல் என்ஜின் உடன் ரூ.1.39 கோடியாகவும் தற்சமயம் உள்ளது.

இவை இரண்டிலும் 4மேட்டிக் ஆல்-வீல்-டிரைவ் (4MATIC AWD) சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக ஜிஎல்எஸ் கார் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் விற்பனையில் இந்த பென்ஸ் காருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) உள்ளிட்ட கார்கள் போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் சினிமா வட்டாரத்தில் விலையுயர்ந்த கார்களை அதிகம் வைத்திருப்பவர்களுள் நடிகை சன்னி லியோனும் ஒருவராவார். ஆதலால், இத்தகையவர் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரை வாங்கியிருப்பதில் பெரியதாக ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பென்ஸ் கார்கள் மீதான மோகம் உள்ளதை இது காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 29, 2025, 15:41 [IST]
English summary
Sunny leone spotted with her new mercedes benz gls luxury car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+