டைட்டாக உடை அணிந்து வந்ததால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்! காருக்குள்ள ஏறினதும் படுத்துகிட்டாங்க! வீடியோ!

பயணங்களின்போது மிகவும் இறுக்கமான உடைகளை அணிய கூடாது என்பதே எங்களின் நீண்ட நாள் அறிவுறுத்தல் ஆகும். ஜூன்ஸ் போன்ற மூச்சை முட்டக் கூடிய உடைகள் துளியும் பயணத்திற்கு உகந்தவை அல்ல. மேலும், அவற்றை அணிவதனால் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகக் கூடும். இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. பாலிவுட் உலகின் முன்னணி நடிகை ஒருவர் டைட்டாக உடை அணிந்து வந்ததனால் மிகப் பெரிய சிக்கலுக்கு ஆளாகி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இளைஞர்களின் கனவு கன்னி சன்னி லியோன், இவரே மிக நெறுக்கமான உடையை அணிந்து வந்ததன் காரணத்தினால் துயரத்திற்கு ஆளாகியவர் ஆவார். பாலிவுட் திரையுலகின் மிகவும் ஸ்டைலிஷான பெண் நடிகையாக இவர் அறியப்படுகின்றார். இதற்கு அவரின் உடை ரசனையே சான்றாக உள்ளது. மிகவும் தனித்துவமான மற்றும் ஃபேஷனான உடையை அணிவதில் பெயர்போனவராக சன்னி லியோன் இருக்கின்றார்.

Sunny leone s dress dilemma exiting suv

இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் வித்தியாசமான உடை அணிந்து வந்ததன் காரணத்தினால் அவரால் காரை விட்டு இறங்கவே முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது. இத்தனைக்கும் அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வந்திருக்கின்றார். இந்த பிரமாண்ட தோற்றம் கொண்ட காரில் வந்திருந்த போதிலும் அவரால் இறங்க முடியாமல் போனதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இத்தனைக்கும் சன்னி லியோன் பருமான உடலைக் கொண்டவர்கூட இல்லை. ஆனால், அவர் அணிந்திருந்த உடைதான் அவருடைய இத்தகைய நிலைமைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. மிகவும் இறுக்கமான உடையை அணிந்திருந்ததே அவர் வெளியேறுவதை கடினமாக்கி இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அவர் ஒழுங்காக நடக்கவும் தடையாக இருந்திருக்கின்றது.

வீடியோவின் மற்றொரு பகுதி, இந்த ஆடையால் அவரால் குனிய முடியாத சூழலும் ஏற்பட்டு இருக்கின்றது. மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் நடமாட அவர் ஆடையை லேசாக தூக்கிய வண்ணம் கவனமாக நடந்திருக்கின்றார். இதேபோல், சன்னியின் காருக்குள் ஏறும்போது மிகப் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கின்றார்.

இதுகுறித்த வீடியோவையும் சன்னி லியோன் பகிர்ந்து இருக்கின்றார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த வீடியோவில் அவர் காரில் ஏறுவதற்கு மேற்கொண்ட போராட்டத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. உதவியாளர் உதவியாலேயே அவர் காருக்குள் நுழைந்தார். இருப்பினும், அந்த உடை மிக மிக இருக்கமாக இருந்ததால் அவரால் முழங்கால்களை முழுமையாக மடிக்க முடியவில்லை.

Sunny leone s dress

இதுபோன்ற காரணங்களுக்காகதான் அதிகம் டைட்டான உடையை பயணங்களின்போது அணிய கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் தங்களின் கவர்ச்சி தோற்றத்தை பராமரிக்கும் விதமாக இதுபோன்று இறுக்கமான ஆடைகளை அணிந்து வருகின்றனர். சன்னி லியோன் அருகாமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ளவே இதுமாதிரியான இறுக்கமான உடையை அணிந்து பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

அதுவே அவர் மிகவும் லாங்கான தூரத்தில் உள்ள இடத்திற்கு இதுபோன்று அதிக நெறுக்கமான உடையை அணிந்து பயணித்திருந்தால் அவரின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறியிருக்கும். ஏனெனில், காருக்குள்ளே சென்றதும், பின் இருக்கையில் படுத்தபடியே நடிகை பயணித்திருக்கின்றார். கார் கதவை திறக்க மற்றும் மூடவும்கூட அவருக்கு மற்றவரின் உதவியே தேவைப்பட்டு இருக்கின்றது.

ஓர் நடிகை தன்னை கவர்ச்சியாக காண்பிப்பதற்காக என்னென்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. மேலும், என்னதான் பெரிய காரில் பயணித்தாலும் சில உடைகள் பயணத்திற்கு உகந்ததல்ல என்பதை வெளிக்காட்டும் வகையிலும் இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது.

சன்னி லியோனிடம் இன்னும் பல கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், அவர் ஃபார்ச்சூனரை இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கின்றார். பொதுவாக, செடான் கார்களை விட அணுகுவதற்கு எளிதான கார்கள் எஸ்யூவி ரக வாகனங்கள் என்பதால் அதையே தங்களின் பயணங்களுக்கு தேர்ந்தெடுப்பர். அந்தவகையிலேயே சன்னி லியோன் இந்த காரை தேர்ந்தெடுத்திருக்கின்றார். இருப்பினும், அது அவருக்கு கை கொடுக்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக இறுக்கமான உடைகளை பயணத்தின்போது அணிவதனால் அந்த பயணமே அசௌகரியமானதாக மாறிவிடும். இதற்கு சான்றாகவே சன்னி லியோனின் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. காற்றோட்டம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், அதிக அழுத்தம் காரணமாக மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படும். எனவேதான் பயணங்களின்போது ஃப்ரீயான குறிப்பாக, காட்டன் உடை அணிந்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 15:42 [IST]
English summary
Sunny leone struggle exiting toyota fortuner highlights celebrity fashion woes
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+